அபியின் செய்கையில் ஜோஸ்வினி தன்னை மறந்து அவனை அடித்து கொண்டிருந்தாள்.
அபிஷேக் புன்னகையுடன் அடிகளை வாங்கி கொண்டிருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் திணறினான்.
அவளது அருகாமை அபிஷேக்கை ஏதேதோ செய்ய தன்னை மறந்து அவளுக்கு மிக நெருக்கமாக வந்தவனை ஜோஸ்வினி திகைத்து போய் பார்த்தாள்.
அந்த பார்வையில் தன்னை சுதாரித்தவன்
“உங்க தலைல ஏதோ இருந்த மாதிரி இருந்ததுங்க ஜோ. அதான்” என்று இயல்பாய் சொல்வது போல் அவள் தலையை தட்டி விட அவள் ஆசுவாசமானாள்.
“ரிலாக்ஸ் ஜோ” என்றதும் சரி என தலையாட்டியவள் அவனிடம் இருந்து விடைபெற்று காரில் இருந்து கீழே இறங்கியதும் சிலை போல நின்றாள்.
அதை பார்த்தவன் துணுக்குற்று அவள் பார்வை சென்ற திசையை பார்த்த போது அங்கே ஷியாம் ஜோஸ்வினியை பார்வையால் எரித்து கொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும் அதிர்ந்த அபிஷேக் பின் சுதாரித்து காரில் இருந்து இறங்கி வெளியே வந்தவன் ஜோஸ்வினியின் கையை அழுத்தமாக பற்றினான்.
அவனது அழுத்தத்தை தனது கைகளில் உணர்ந்தவள் அவனை திரும்பி பார்க்க அவன் நான் இருக்கிறேன் என்பது போல கண்களை மூடி திறந்தவன் அவளை அழைத்து சென்றான்.
அவர்கள் அவனை கடந்து செல்கையில் ஷியாமுக்கு கோபம் பொங்க ஜோஸ்வினியை அழைத்தான்.
“ஜோஸ்வினி” என அவன் கத்த அவளோ ஷியாமை அலட்சியமாக திரும்பி பார்த்தாள்.
முதலில் ஷியாமை பார்த்ததும் திடுக்கிட்டவள் அபிஷேக்கின் கண்களை பார்த்ததும் யானை பலம் வந்தது போல் உணர்ந்தாள்.
அதே அலட்சியத்துடன் ஷியாமை கடந்து செல்ல அவன் கூப்பிட்டதும் நிமிர்வாக அவனை நோக்கினாள்.
“ஜோஸ்வினி பாத்தா கூட பேசாம போற?” என்றவனின் பார்வை அவர்களின் கைகளிலேயே இருந்தது.
“என்ன பேசணும்னு சொல்ற?”
“ஜோ…” என்றவன் கத்த
“ஸ்டாப் இட். என்ன வேணும் உனக்கு?”
“யார் இவன்?”
“யாரா இருந்தா உனக்கென்ன?”
“கொஞ்சம் கூட உனக்கு என் மேல பாசமே இல்லடி. இவன் எப்ப பிரேக் அப் பண்ணுவானு வெயிட் பண்ண மாதிரி இருக்கு” என்றவன் குத்தலாக பேச அபிஷேக்கு கோபம் வந்தது.
அதில் பல்லை கடித்தவன் தன்னை கட்டுப்படுத்தி கொண்டு
“ஹலோ மைன்ட் யுவர் வோர்ட்ஸ். நீங்க பண்ணது மட்டும் கரெக்டா?” என்று கூறினான்.
“நாங்க பேசிட்டு இருக்கறப்ப நடுல பேச நீ யாருடா?. ஒழுங்கா அவள விட்ரு. இல்லேன்னா உன்ன என்ன பண்ணுவேன்னு தெரியாது”
“டோன்ட் ஷவுட் ஷியாம். நேத்து பிரேக்கப் பண்ணிக்கலாம்னு சொன்னது நீ. இப்போ சம்பந்தம் இல்லாம ஏதேதோ பேசறே?. அவர பேச உனக்கென்ன ரைட்ஸ் இருக்குடா?”
“என்ன ஜோ இப்டி பேசற?”
“அவரு என் பிரண்ட். என் பிரண்ட ஏதாவது சொன்னா என்ன பண்ணுவேனு தெரியாது”
“அது யாரு எனக்கு தெரியாம உனக்கு பிரண்ட்?” என்றவனை ஜோஸ்வினி முறைத்தாள்.
“ஹீ இஸ் அபிஷேக். மை பிரண்ட், மை வெல்விஷர்”
“இவனா அபிஷேக்? இவன் கூட தான் நீ ஊர் சுத்திட்டு இருந்தியா? ஆனாலும் உனக்கு திமிர் அதிகம்டி. எவ்ளோ கொழுப்பு இருந்தா அவனோடவே என் முன்னாடி வருவ?”
“ஏன்? வந்தா என்ன?”
“ஜோஸ்வினினினி…”
“என்னடா ஜோஸ்வினி? இது நேத்து பிரேக் அப்னு சொல்றப்பலாம் தெரிலயா? நான் யார் கூட பேசணும்னு நான் தான் முடிவு பண்ணனும். நீ யார்டா அத பத்தி சொல்ல?”
“ஜோ ப்ளீஸ் கூல். இப்போ ஏன் சண்ட போடறீங்க?. அவரு ஏதோ டென்ஷன்ல பேசியிருப்பாரு. அமைதியா இருங்க”
“ஷியாம் நீங்க போங்க. நான் அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறேன்” என்று அபிஷேக் இருவரையும் சமாதானப்படுத்த இருவரும் அவனை முறைத்தார்கள்.
“எங்க இரண்டு பேத்துக்கு இடையில வந்து பிரிச்சிட்டு இப்போ என்னடா நீ ரொம்ப நல்லவன் மாதிரி பேசற?” என்று சொல்லியபடி ஷியாம் அவனது சட்டையை பிடித்தவன் அபிஷேக்கை அடிக்க கையை ஓங்கினான்.
ஜோஸ்வினி இவனின் செய்கையை அதிர்ச்சியுடன் பார்த்தவள் பின் சுதாரித்து
“டேய் யார் சட்டைய பிடிக்கிற? ஏதோ அமைதியா போலாம்னு பாத்தா ரொம்ப ஓவரா போற?” என்றவள் ஷியாமை அறைய அவன் பொறி கலங்கி போய் நின்றான்.
“ஜோஸ்வினி ஏங்க இப்படி டென்ஷன் ஆகறீங்க? விடுங்க” என்று ஜோஸ்வினியிடம் அன்பாக சொன்னவன்
“ஷியாம் மரியாதையா நடந்துக்கோங்க” என்று இறுகிய குரலில் சொன்னவன் அதற்கு மேல் அங்கே இருந்தால் ஜோஸ்வினியால் இன்னும் பிரச்சனை பெரிதாகி விடுமோ என்று அவளை அழைத்து சென்றான்.
இருவரும் கேண்டீனில் அமர்ந்திருக்க ஜோஸ்வினி அபியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.
“ஏன்டா அபி என்ன கூட்டிட்டு வந்த? அவன இன்னும் நாலு அப்பு அப்பினா தான் என் ஆத்திரம் அடங்கும்”
“அவனுக்கு எவ்ளோ திமிர் இருந்தா உன்னைய அடிக்க வருவான்? ஏன்டா அமைதியா இருந்த?” என்று பொரிந்து கொண்டிருந்தாள்.
அபிஷேக் அவள் பேசுவதை கேட்டவன் புன்னகையுடன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அபிஷேக்கின் மீதான ஜோஸ்வினியின் அக்கறையில் அவன் மனம் நெகிழ்ந்து போய் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
அவளது திட்டுக்கள் அவன் மனதில் சாரல் வீசுவது போல சுகமாய் இருந்தது.
‘நான் ஏதோ ஒரு விதத்தில உன் மனசுல இருக்கேன் செர்ரி. இப்போ எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?’ என்று அவன் மனது எங்கெங்கோ சொல்ல ஜோஸ்வினி அவனிடம் இருந்து பதில் வராமல் இருக்க அமைதியாய் அவனை கவனிக்க அவனோ கனவுலகில் சஞ்சரிப்பது போல் இருந்தான்.
‘என்ன ஆச்சு இந்த பக்கிக்கு? நான் திட்டிட்டு தானே இருந்தேன். ஏதோ அவார்ட் வாங்கறது போல ரியாக்ஷன் கொடுக்கறான்’
“அபி” என்று அவன் முகத்தின் முன்னே கையை அசைக்க அப்போதும் அவன் அசையாமல் இருந்தவனை பார்த்தவள் அவன் காதருகில் சென்று
“எருமை மாடே” என்று கத்த அவன் திடுக்கிட்டு போய் அவளை பார்த்தான்.
“நான் காட்டு கத்தல் கத்திட்டு இருக்கேன். நீ எங்க ட்ரீம்ஸ்ல இருக்க?”
“அ… அது ஒண்ணும் இல்லங்க ஜோ. பிஸினஸ் பத்தின யோசனையில இருந்தேன்”
“டேய் பக்கி, மாடு” என்க அவன் திருதிருவென விழித்தான்.
அதை பார்த்தவளுக்கோ கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்பு வர அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். அதை அவன் வாஞ்சையுடன் பார்த்து கொண்டிருந்தான்.
“என்ன ஜோ பக்கினுலா சொல்றீங்க? இந்த வேர்ட் அடிக்கடி யூஸ் பண்றீங்களே… மீனிங் என்னங்க ஜோ?” என்றவன் அப்பாவியாய் கேட்க அதில் பொங்கி வரும் சிரிப்பை கட்டுப்படுத்தியவள்
“அது நீ ரொம்ப ஸ்வீட் பர்சனு சொன்னேன் அபி”
“ஆனா மாடுனு திட்டினீங்க?” என்று அவன் அப்போதும் யோசனையாய் கேட்டான்.
“அது உன்ன செல்லமா சொன்னதுடா” என்று சிரிக்க அவனும் புன்னகைத்தான்.
“ஓகே ஜோ. டைம் ஆச்சு. சாப்பிட வாங்கிட்டு வரேன்” என்றவன் அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டு அவளை சாப்பிட வைத்தான்.
“க்ளாஸ் முடிஞ்சு கூப்டுங்க ஜோ. நான் வரேன்”
“உனக்கே 1008 வேல இருக்கும். நானே போய்க்கிறேன் அபி” என்றவளை அபி முறைத்தான்.
“ஏன்டா முறைக்கிற?”
“உங்கள விட எனக்கு எதும் முக்கியம் இல்லங்க ஜோ. எனக்கு வெளிய இப்போ ஒர்க் இருக்கு. முடிச்சிட்டு கூப்டுங்க. நான் பிக் அப் பண்ணிக்கறேன்” என்றவன்
“ஷியாம் கிட்ட சண்ட போடாதீங்க. ஓகேவா?” என்று சொல்லியவன் அவளிடம் இருந்து விடைபெற்று அங்கிருந்து கிளம்பினான்.
காரில் வந்தவனுக்கோ பலவித யோசனைகள் ஓடியது.
இன்று காலையில் நடந்ததை நினைத்து பார்த்தான்.
நேற்று இரவு ஆதவன் வீட்டில் தங்கியவன் இன்று காலையில் ஓட்டலிலேயே தங்குவதாக கூற அனைவரும் அதிர்ச்சியானார்கள்.
“ஏன்டா இங்கிருந்தா உனக்கென்ன டா?”
“அதில்லடா. ரொம்ப நாளா நான் வந்ததுல இருந்து இங்க தானே இருக்கேன். உங்களுக்கு சிரமம் குடுக்க வேண்டாம்னு தான்”
“நீங்க இங்க இருக்கறதுல எங்களுக்கு என்ன சிரமம் தம்பி?” என்று ஆதவனின் தாய் கேட்டார்.
“அப்படி இல்லமா. எனக்கு இப்போ வொர்க் அதிகம். வர லேட் நைட் ஆகுது. நிறைய ஆர்டர்ஸ் கார்ப்பரேட் கம்பெனிஸ் குடுக்கறாங்க. எனக்கு அங்க இருந்தா பரவால்லமா. அதான்” என்றவன் ஆதவனை பார்த்து
“டேய் அம்மாகிட்ட புரியற மாதிரி சொல்லுடா” என்று சொன்னவனை ஆதவன் முறைத்தான்.
“டேய் ப்ளீஸ்டா. வீக்கெண்ட்ஸ் நான் வந்தறேன். அங்கிள் நீங்களும் தான். என்ன தப்பா புரிஞ்சுக்காதீங்க” என்றவன் அவர்கள் தடுத்தும் கேளாமல் அவர்களிடமிருந்து விடைபெற்று தனது உடைமைகளை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.
உண்மையில் ஆதவன் வீட்டை விட்டு வர அவனுக்கு கஷ்டமாக இருந்தது. ஆதவனது குடும்பத்தை தனது குடும்பம் போலவே நேசிக்க தொடங்கி விட்டான்.
அதனாலேயே அவனுக்கு ஜோஸ்வினியின் விஷயத்தில் உறுத்தல் வந்தது.
இனி வரும் நாட்களில் அவர்களது குடும்ப பொண்ணோடு தான் சுற்றுவதை அவர்கள் எந்த விதத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை ஆதலால் அவன் இந்த முடிவுக்கு வர வேண்டியதாகி இருந்தது.
அதே சமயம் ஜோஸ்வினியையும் அவனால் விட முடியவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று பெருமூச்சுடன் சாலையில் கவனம் செலுத்தினான்.
*****
ஜோஸ்வினி அறைந்ததில் அவள் மேல் ஏகப்பட்ட கோபம் வந்தது. அந்த கோபத்தோடயே போய் ருத்ரனை பார்த்தான்.
அவன் அங்கு சென்ற போது ருத்ரன் தனது நண்பர்களோடு பேசி கொண்டிருந்தான்.
“ருத்ரா”
“வா மச்சி”
“இல்லடா. உன்கிட்ட தனியா பேசணும்”
“என்ன விஷயம்டா?”
“நீ வா. சொல்றேன்” என்றவன் கூப்பிட அவனும் ஷியாமோடு கிளம்பினான்.
“சொல்லு மச்சி. என்ன மேட்டர்?”
“நேத்து நீ சொன்னத கேட்டு பிரேக்கப் பண்ணேன். அவ என்னடான்னா கொஞ்சம் கூட ஃபீலிங்க்ஸ் இல்லாம என்னோட பிரண்டுனு இன்னொருத்தன கூட்டிட்டு வந்தது இல்லாம என்னையே அடிக்கறா?” என்று பொரிந்தான்.
அவன் சொல்லியதை கேட்டவன்
‘இப்போ தான் மனசு சந்தோஷமா இருக்கு’ என்று நினைத்தவன் வெளியே
“என்ன மச்சான் உன்னையே அடிச்சாளா? என்ன சொல்ற?” என்று அதிர்ச்சியானதை போல் பாவனை செய்தான்.
“ஆமாடா. அவன் தான் பிரிச்சானு சொல்லி அடிக்க போனேன். அதுக்கு அடிச்சிட்டா” என்றவன் சொல்ல ருத்ரா சிந்தித்தான்.
“என்னடா யோசிக்கிற?”
“அவ இவ்ளோ திமிரா போறாளே. அவள உன் காலடில விழ வைக்க வேண்டாமாடா?”
“ஆமாடா”
“சரி. அப்படினா நான் சொல்ற மாதிரி செய்” என்றவன் விளக்க ஷியாமோ அவன் சொல்வதை கேட்டவன் விழிகள் தெறித்து விடுவதை போல ருத்ராவை பார்த்தான்.
