அத்தியாயம் 21
அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அபிஷேக்கின் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் அபிஷேக்கின் அழைப்பில் ரிஷப்சன் பார்ட்டிக்கு வந்திருந்தனர்.
அபிஷேக்கின் ரெஸ்ட்டாரன்ட்டிலேயே அவர்களது. ரிசப்ஷன் ஃபங்ஷனை அரேன்ஜ் செய்திருந்தான்.
ஜோஸ்வினி தான் அவனது நண்பர்களை பார்த்து திணறி கொண்டிருந்தாள்.
அவர்களது பிரெஞ்சும், எதற்கெடுத்தாலும் கட்டி பிடிப்பதும் என ஜோஸ் வினிக்கு எதிலும் மனம் ஒட்டவில்லை.
அவளுக்கு ஒரே ஒரு ஆறுதல். அவளுடைய அம்மாவும், அப்பாவும் அவளோடு இருந்தது தான்.
ஆம். ஜோஸ்வினியின் குடும்பத்தையும், ஆதவனையும் கூட அபிஷேக் வரவழைத்திருந்தான்.
அன்று அவள் கேட்ட கேள்விக்கு அபிஷேக் அவளுக்குள் ஊடுருவுவது போல பார்த்தான். அவளால் அந்த பார்வையை தைரியமாக எதிர் கொள்ள முடியவில்லை.
ஏனென்றே தெரியாமல் அவனை பார்க்க பார்க்க இவளுக்கு முதுகு தண்டு சில்லிட்டது. ஏதோ தப்பு செய்தது போல உணர்ந்தாள்.
அதற்கு பிறகு இருவரும் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. ரிஷப்சன் வரையுமே அபிஷேக் பார்வையால் மட்டுமே அவளை கண்காணித்தான்.
இவர்கள் மறுபடியும் எலியும், பூனையுமாக இருக்க அபிஷேக்கின் பெற்றோர்கள் தான் அடுத்து என்ன செய்வதென திணறினர்.
இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் ஜோஸ்வினியின் குடும்பம் வந்திறங்க ஜோஸ்வினி சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனாள்.
“ம்மா”, “ப்பா” என்று அவர்களை பார்த்ததும் ஜோஸ்வினிக்கு கண்ணீர் பொங்கி வழிந்தது.
தனது இத்தனை நாள் சோகத்தை கண்ணீரிலேயே கரைத்தாள்.
ஜோஸ்வினி அழுவதை எல்லாரும் அதிர்ச்சியோடு பார்க்கையில் அபிஷேக்கோ ஒரு கையாலாகத்தனத்துடன் அவளை வெறித்து பார்த்தான்.
அவனை கவனித்த ஆதவன் “மச்சி” என்று அருகில் வந்து அவனை அணைத்தான். அவனோ அதற்கும் கூட எந்த எதிரொலியும் காட்டவில்லை.
“டேய் என்னாச்சுடா? ஏன்டா ஸ்டன்னாகி நிக்கற மாதிரி இருக்க?” என அபிஷேக்கை அவன் உலுக்க அதில் தன்னிலையை அடைந்தவன்
“இல்ல மச்சி. ஃபர்ஸ்ட் ஏதாவது சாப்பிடுங்க” என்றவன்
“அங்கிள், ஆன்ட்டி நீங்களும் சாப்பிடுங்க” என்றவன் தேஜஸ்வினியிடம்
“தேஜூ குட்டி நீ ஏன்டா சைலண்ட் ஆகிட்ட?” என்று கனிவாக கேட்டான்.
“அக்கா இப்படி அழுது நான் பாத்ததில்ல. அவ எப்பயுமே சிரிச்சிட்டு தான் இருப்பா” என்றவள் கலங்கிய குரலில் சொன்னாள்.
அதை கேட்டவுடனுக்கோ இதயத்தில் நூறு ஊசியை குத்தியது போல வலித்தது.
தான் நினைத்தது என்ன? இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன?
இது எல்லாவற்றுக்கும் காரணமான ஷியாமின் மீது அவனுக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
அவனது உடல் இறுக கோபத்தில் கண்கள் செந்நிறமாக மாறியது.
இதனை அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த ஆதவன்
“அபி கன்ட்ரோல் யுவர் செல்ஃப்” என மெல்லிய குரலில் கூறவும் அபிஷேக் கண்களை மூடி தனது உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது ஜோஸ்வினியின் குடும்பத்தை வரவேற்ற அபிஷேக்கின் பெற்றோர் அவர்களை உபசரிக்க ஆதவனோ அவனை உள்ளுக்குள் அழைத்துச் சென்றான்.
“மச்சி ஏன்டா இவ்வளோ டல்லா இருக்கற?”
“நத்திங்டா”
“ஜோஸ்வினி சமாதானம் ஆகிட்டாளா?”
“இல்லடா. எத பேசினாலும் ஷியாம்னு வந்து நிக்கறா”
“அபிஷேக்…”
“ஆமா. இப்போ பார்ட்டிக்கு கூட நான் சம்மதிக்கறேன். எனக்கு அவன் எங்கிருக்கானு தெரியணும்னு டீல் பேசறாடா?”
“என்னடா சொல்ற?”
“ஆமா ஆது. எனக்கு அப்படியே வர ஆத்திரத்துக்கு அவள ஏதாவது பண்ணிடுவேனோனு பயமா போயிடுச்சு. ஆஃப்டர் தட் நான் அவ கிட்ட பேச்சே வெச்சுக்கல” என்று இன்னும் கோபம் குறையாத குரலில் கூறினான்.
“சரி. கேக்க மறந்துட்டேன். அவனுங்கள பாத்தியா? டீடெயில்ஸ் ஏதாவது கலெக்ட் பண்ணியா?”
“எங்கடா? சோறு, தண்ணி இல்லாம இருந்தாலும் அவனுங்களுக்கு திமிரு மட்டும் குறைய மாட்டேங்குது”
“டீடெய்ல்ஸ் அவனுங்க கிட்ட வாங்கு. சிசிடிவில அங்க அரேன்ஜ் பண்ணிருக்க தானே?”
“எல்லாமே நீ சொன்ன மாதிரி பண்ணி இருக்குடா”
“அவனுங்க பெரிய நெட்வொர்க்கோனு டவுட்டா இருக்கு. இல்லேனா இப்போ கூட இவ்ளோ தெனாவெட்டா இருப்பாங்களா? நான் இங்கேயும் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு தான்டா இருக்கேன். பட் நமக்கு வேண்டியது கிடைக்க மாட்டேங்குது”
“விடுடா. பாத்துக்கலாம். நான் தான் கூட இருக்கேன்ல. ஏதாவது நம்ம சர்ச் பண்ணி பாக்கலாம்” என்று அவனுக்கு ஆறுதல் அளித்தவன்
“ஆனா ஜோஸ்வினி கிட்ட ரொம்ப கோபப்படாதடா. இன்னைக்கு அவ அழுதத பார்த்தவுடனே ரொம்ப கஷ்டமா போய்டுச்சுடா” என ஆதவன் தயங்கிய குரலில் சொன்னதும் அபிஷேக் அவனை புன்னகையுடன் பார்த்தான்.
“என் செர்ரிய பாத்துக்க எனக்கு தெரியும் மச்சான். யூ டோன்ட் வொர்ரி” என்றவன்
“சரிடா. ரெஸ்ட் எடு” என்று வெளியே வந்தவன் ஜோஸ்வினியின் பெற்றோரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றான்.
அபிஷேக் தான் அவர்களை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்தான்.
ஜோஸ்வினி ரொம்பவும் மன உளைச்சலாக இருந்ததை கவனித்தவன் அவள் மனதை மாற்ற அவளுக்கு தெரியாமல் ரிஷப்சனுக்கு அவள் பெற்றோரை வரவழைத்தான்.
ஆனால் வந்த பின்னோ இவன் தான் ரொம்பவும் நொந்து போனான்.
இவர்களின் வருகையில் இரண்டு நாட்கள் சென்றதே அபிஷேக்கிற்கு தெரியவில்லை.
ஜோஸ்வினி அவர்கள் குடும்பம் வந்த குஷியில் சந்தோஷமாக இருக்க அபிஷேக் ரிஷப்சனிற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தான்.
இரண்டு நாட்கள் வரை அமைதியாக இருந்தவள் மீண்டும் இறுகி போனாள். அவளை உணர்ச்சியற்ற பார்வையுடன் அவன் கவனித்து கொண்டிருந்தான்.
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவென அபிஷேக்கோ இது தான் சாக்கென்று அவளை தனது கை வளைவிலேயே வைத்திருக்க ஜோஸ்வினி தான் அவனது அருகாமையில் மிகவும் திணறி போனாள்.
காரணமே இல்லாமல் அவள் மனம் படபடப்பு அடைந்தது. நெற்றியில் வியர்வை துளிகள் வேர்த்து கொட்ட அவள் தான் என்ன உணர்கிறோம் என்று புரியாமலே நின்று கொண்டிருந்தாள்.
அவளை கவனித்து கொண்டிருந்தவன் தனது கைக்குட்டையில் அவளது நெற்றி வியர்வையை மென்மையாக துடைத்து விட்டவன்
“ரிலாக்ஸ்டா. ஏன் இவ்வளோ டென்ஷன்?” என மென்மையான குரலில் வினவ அவளுக்கு பேச வார்த்தையே வரவில்லை.
“கூல் பேபி” என்றவன் அவள் கையை இறுக்கமாக பிடிக்க அவள் தான் அதனையே பார்த்து கொண்டிருந்தாள்.
“ஜோஸ்வினி என்னாச்சு? ஏன் இப்படி இருக்க? ஆர் யூ ஓகே?” என பதட்டமாக வினவினான்.
“நத்திங். பட் நீ எங்கயும் போயிடாத. எனக்கு பயமா இருக்கு” என்றவள் தவிப்பான குரலில் சொன்னாள்.
“டோன்ட் வொர்ரி பேபி. நான் உன் கூடத்தான் இருப்பேன்” என்றவன் அவளை விட்டு ஒரு துளியும் நகரவில்லை.
இவனை பார்த்து ஆதவனும், தேஜஸ்வினியும் கிண்டல் அடித்தனர்.
அதையும் ஒரு புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டான்.
ரிஷப்சனில் டின்னரோடு சேர்ந்து மது விருந்தும் தாராளமாக இருக்க ஜோஸ்வினி முகத்தை சுளித்தாள்.
அதை கவனித்த ஆதவன்
“உங்க ரூம்ல நீங்க போய் சாப்பிடுங்க” என்றவனை யோசனையாக பார்த்தாள்.
“என்ன பாக்குற ஜோ? இங்க இதெல்லாம் சகஜம். நீ ரெஸ்ட் எடு” என்று சொன்னான்.
அபிஷேக் அவளை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றவன் உணவை வரவழைத்து சாப்பிட வைத்தான்.
அவனும் சாப்பிட்டவன் அவளை சிறிது நேரத்தில் ரெடியாக இருக்கும்படி கூற அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.
“என்ன பேபி பாக்கற? நான் பிரண்ட்ஸ பாத்துட்டு வந்தறேன். நீ ரெடியா இரு” என்றவன் சிறிது நேரத்தில் காசுவலில் ரெடியாகி வர அபிஷேக்கை யோசனையாய் பார்த்தாள்.
“நம்ம வீட்டுக்கு தானே போறோம். அப்றம் ஏன் இங்கயே டிரெஸ் சேஞ்ச் பண்ண சொல்ற?”
“ஆல்ரெடி ரொம்ப லேட் ஜோ. ஃபைவ் மினிட்ஸ் தான் டைம். கெட் ரெடி” என்றவன் சொல்ல என்னவோ இன்றைக்கு ஒரு விவாதமும் செய்யாமல் ரெடியானாள்.
திரும்ப வந்தவன் அவளை திருப்தியாக பார்த்தான்.
“ஓகே. நம்ம கிளம்பலாம்”
“மத்தவங்க எங்க?”
“அவங்க ஏற்கனவே கிளம்பிட்டாங்க” என்றவன் அவளை வேறொரு வழியில் கூட்டி செல்ல அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவர்கள் வெளியே வந்ததும் இரவு காற்றை ஆழமாக அவள் சுவாசிக்க அவளை ஒரு புன்னகையுடன் பார்த்தபடியே வண்டியை கிளம்பினான்.
வேகமான காற்றிலும், வண்டியின் மிதமான வேகத்திலும் ஜோஸ்வினி இவ்வளவு நேரம் இருந்த களைப்பில் அவனது தோள் வளைவில் தூங்கி விழுந்தாள்.
அவள் திடீரென்று விழவும் திகைத்தவன் பின் வண்டியை நிறுத்தி ஒரு முறை அவளை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன் தன்னை மறந்த சந்தோஷத்தில் “யாஹீ” என கத்தினான்.
அவனுடைய நல்ல நேரம் ஜோஸ்வினி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததில் அவள் அதை உணரவில்லை.
******
அடுத்த நாள் ஜோஸ்வினி கண் விழிக்கையில் இதமான காலை நேர வெயில் அவள் மீது விழுந்தது.
அந்த இதத்தில் கண் விழித்தவள் தன் கண்ணெதிரே கண்ட இயற்கை காட்சியில் திகைத்து போனாள்.
சுற்றிலும் பச்சை நிற வயல்வெளி இருந்தது. அதில் தனது மனதை பறி கொடுத்தவளுக்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடுகள் பட்டது. அதற்கு இடையில் ஒரு ஓரமாக ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருக்க அதற்கும் சற்று சம்பந்தமே இல்லாமல் ரயில் சென்று கொண்டிருந்தது.
அந்த காட்சி ஏதோ ஓவியன் ஒருவன் வரைந்து வைத்தது போல இருந்தது. அதில் இருந்து அவளால் கண்களை அகற்ற முடியவில்லை.
இவளை பார்த்த அபிஷேக்
“ஹலோ மேடம்” என்று சொடக்கிட்டான்.
அதில் திகைத்து போய் அவனை பார்த்தாள்.
“இது எந்த பிளேஸ்?”
“ஃபர்ஸ்ட் ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வாங்க ஜோ”
“நீ எந்த பிளேஸ்னு சொல்லு?”
“இப்போ தானே எந்திரீச்சிங்க ஜோ. இப்பவே சண்ட போடணுமா?”
“டேய் நீ இப்போ சொல்ல போறியா? இல்லையா?”
“ஸ்விஸ் வந்திருக்கோம் ஜோ”
“வாட்?”
“என்ன வாட்? நம்ம ஹனிமூன் வந்திருக்கோம்”
“என்னது ஹனிமூனா? யார கேட்டு முடிவு பண்ண? நான் என் ஃபேமிலி கூட ஆசையா இருக்கலாம்னு நினச்சா நீ உன் இஷ்டப்படி பண்ற?” என்றவள் வந்த ஆத்திரத்தில் கைக்கு கிடைத்ததை எடுத்து அவனை அடித்தாள்.
“ஜோ ஸ்டாப். நிறுத்துங்க. ஏன் இவ்ளோ கோபப்படறீங்க?”
“டேய் நானும் பாத்திட்டிருக்கேன். நீ எல்லாம் உன் இஷ்டப்படி தான் செய்வியா? என்ன நினச்சிட்டிருக்க?” என்றவள் கத்திக் கொண்டிருக்க அவனோ
“நீங்க தான் ஜோ என்ன இப்டி செய்ய வெச்சீங்க” என அவள் மேல் அசால்ட்டாக பழியை போட்டான்.
“நான் என்ன பண்ணேன்?” என அவள் திகைப்பாய் கேட்டாள்.
“அங்கிள், ஆன்ட்டி வந்தப்ப அப்டியா அழுவாங்க? என்ன எல்லாரும் என்ன நினைப்பாங்க?”
“ம்ம்… நல்லா பாத்துக்கலனு நினைப்பாங்க”
“ஜோ”
“நீ என் வாய கிளறாத. எனக்கு வீட்டுக்கு போகணும்”
“வில் யு ப்ளீஸ் ஷட் அப்? அல்ரெடி நீ பண்ண குளறுபடில அவங்களுக்கு நீ நல்லா தான் இருக்கியோனு டவுட். அதான் இந்த ட்ரிப் அர்ஜென்ட்டா பிளேன் பண்ணேன்”
“அவங்க கொழம்பட்டும். என்னைய கேட்டா கட்டி வச்சாங்க? அன்னைக்கு அப்படி அழுதேன்… யாரும் என்ன கண்டுக்காம தானே போங்க. இப்போ மட்டும் அவங்களுக்கு என்னவாம்?” என்றவள் கோபமான குரலில் சொல்ல அபிஷேக் அதற்கு மேல் கோபமாக பேசினான்.
“இதுக்கு மேல ஏதாவது பேசின அப்படியே அறைஞ்சிருவேன் பாத்துக்கோ. அவங்க உன் பேரண்ட்ஸ். உனக்கு நல்லது தான் நினைப்பாங்க. அத மைன்ட்ல வெச்சுக்கோ” என்றவன்
“சும்மா சண்ட போட்டுட்டே இருக்காத. இங்க நீ ரிலாக்ஸ் பண்ண தான் வந்தது. எப்படியும் உன் பேரன்ட்ஸ் ஃபிப்டின் டேஸ் இருப்பாங்க. சோ டோன்ட் வொர்ரி”
“அப்றம்… நீ ஏன் இத ஹனிமூன்னு நினக்கிற? ஃப்ரீமூன்னு நினச்சிக்கோ”
“என்ன? என்ன சொன்ன?”
“நான் உன் ஃபிரண்ட் தானே ஜோ. சோ ஃப்ரண்ட் மூனுனு நினச்சிக்கோனு சொன்னேன் ஜோ” என்றவன் சமாளிக்க அவளுக்கு தான் சந்தேகமாக இருந்தது.
இவனது பேச்சுக்கும், பாவனைக்கும் சம்பந்தம் இல்லையோ என்று.
“என்ன ஜோ?”
“நந்திங்” என்றவள் அவனையே ஆராய்ச்சி பார்வை பார்க்க அவன் தான் மனதிற்குள் புலம்பினான்.
‘அவனவன் நடு ரோட்ல கூட ரொமான்ஸ் பண்றான். உன் நேரம் பாத்தியாடா? வாய்விட்டு ஓப்பனா கூட சொல்ல முடியல. ஃப்ரீமூனுனு சொல்லி சமாளிக்க வேண்டியதா இருக்கு. ஆனாலும்டா நீ ரொம்ப பாவம்’ என்று உள்ளுக்குள் தன்னை மறந்து புலம்பியவன் வெளியே கெத்தாக சிரித்து வைத்தான்.
“உங்களோட திங்க்ஸ்லா இந்த கேஸ்ல இருக்கு ஜோ. நீங்க ஃபிரஸ்ஸாகி வாங்க. நான் ஃபிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணிருக்கேன். சாப்பிடலாம்” என சொன்னதும் அவள் குளித்து ரெடியானாள்.
அவள் வந்ததும் அவளுக்கு உணவை எடுத்து வைத்தவன் தானும் சாப்பிட்டான்.
“ஜோ இன்னைக்கு ஜேன்ங்ஃபரூ போலாம். அங்க ரொம்ப குளிரா இருக்கும். உங்களுக்கு வின்டர் கோட், கிளவுஸ், ஷீஸ் எல்லாமே எடுத்து வெச்சிருக்கேன். போட்டுட்டு ரெடியா இருங்க”
“எங்க போறோம்?”
“இன்னும் கொஞ்ச நேரத்துல ட்ரெயின். சரி வாங்க ஜோ… கிளம்பலாம்” என்றவன் கிளம்பி செல்ல அவளுக்கு அங்கு இருந்த புதுமையான சூழலில் தனது மனக் குழப்பத்தை கொஞ்சம் மறக்க ஆரம்பித்தாள்.
அவர்கள் போகும் வழியில் வெள்ளை பூக்களை போல பனிக்கட்டியாக இருந்தது. அவளுக்கு அதை ஒவ்வொன்றும் பார்க்க பார்க்க பரவசமாக ஒவ்வொன்றையும் ரசித்து கொண்டே வந்தாள்.
அபிஷேக் அவளை ஒரு புன்னகையுடன் பார்த்தபடியே வந்தான்.
அவர்கள் இறங்கியதும் சுற்றிலும் இருந்த பனி மலையை பார்த்த ஜோஸ்வினி சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.
சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அவனுக்கு முத்தமிட அவன் திகைத்து போய் விழித்தான். அதை எல்லாம் அவள் கண்டு கொள்ளவில்லை.
சுற்றிலும் இருந்த பனி மலை அவளை வேறொரு உலகத்திற்கு அழைத்து சென்றது.
“வாங்க. நம்ம இன்னும் மேலே போகணும்” என்றவன் லிஃப்ட் மூலம் அவளை மேலே அழைத்து சென்றான். அது வெகு வேகமாக அவர்களை மேலே அழைத்து கொண்டு சென்றது.
லிப்டில் இருந்து வெளியே வந்ததும் சுற்றிலும் பனி மலைகள் இருக்க இன்னும் அதிகப்படியான குளிரில் அவளையறியாமல் அவள் கை அபிஷேக்கை பற்றியது.
அவள் அபிஷேக்கிடம் ஏதோ கேட்க வர அவளுக்கு வாயில் இருந்து புகை தான் வந்தது.
சுற்றிலும் வேடிக்கை பார்த்தவள் மெல்ல அவளிடமிருந்து விலக அவளை யோசனையாய் பார்த்தான்.
ஆனால் அவளோ அங்கிருந்த பனிக்கட்டியை எடுத்து அவன் மீது வீச ஆரம்பித்தாள்.
முதலில் தடுத்தவன் பின் அவனும் அவள் மீது வீச ஆரம்பித்தான்.
இப்படியே சிறிது நேரம் தன்னை மறந்து விளையாடியவள் ஒரு கட்டத்தில் குளிரை சமாளிக்க முடியாமல் அவனிடமே ஒண்டினாள்.
“பக்கி என்னடா இவ்ளோ குளிரா இருக்கு?”
முதலில் அவளது பக்கியில் திகைத்தவன் ஜோஸ்வினி பழையபடி பேசியதை நினைத்து அவனது உள்ளம் குத்தாட்டம் போட்டது.
“இந்த பிளேஸ் எர்த்ல இருந்து 4158 மீட்டர்ல இருக்குதுங்க ஜோ. இங்க ஃபுல்லா ஐஸ் மௌன்ட்டைன்ஸ் அதிகம். இந்த ப்ளேஸ் ரொம்ப ஹைட்ல இருக்குறதால குளிரும் அதிகம்” என்றவன்
“ஏன் செர்ரி ரொம்ப குளிருதா?”
“இல்ல. ஐ வில் மேனேஜ்”
“சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?”
“எதுவும் வேணாம்டா” என்றவள்
“அங்க என்ன எடுத்துட்டு போறாங்க?”
“ஐஸ் ஸ்கேட்டிங் பண்ணுவாங்க”
“உனக்கு பண்ண தெரியுமா?”
“தெரியுமே”
“அப்படினா நீ போய் பிளே பண்ணு”
“ஜோ”
“என்ன?”
“உங்கள தனியா விட்டுட்டு எப்படி?”
“நான் பேபி பாரு. போடா. என்ஜாய் பண்ணு”
“இல்லங்க ஜோ. ரெண்டு மெம்பர்ஸ் போற மாதிரி அதுல போகலாம்” என்று சொல்லியவன் அதனை புக் செய்தான்.
“வாவ்… சூப்பர்டா” என்றவள் அவனுக்காக வெயிட் செய்தாள்.
பின் இருவரும் ஐஸ் ஸ்லெட்டில் பனிக்கட்டியில் சென்றனர். அது ஒவ்வொன்றும் புதிதாக இருக்க அவள் அதை அனுபவித்தாள்.
அபிஷேக்கும் அவனது அருகாமையை அனுபவித்தபடி இருந்தான்.
ஸ்லெட் ஆரம்பத்தில் ஸ்மூத்தாக சென்றது. அபிஷேக் ஜோஸ்வினியின் அருகாமையில் தன்னை மறந்த வேளையில்…
