காதலில் விஷமா அமுதமா நீ
ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்....
