November 2025

காதல் – 3

அந்த பிரம்மாண்ட வீடு பூ தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதும், வாசலில்‌ கட்டியிருந்த வாழைமரமும் தெரிவித்தது அது ஒரு திருமணம் நடக்கவிருக்கும் வீடென்று.

காதல் – 3 Read More »

ஆரெழில் – 1

ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது.

அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது.

ஆரெழில் – 1 Read More »

வேண்டினேன் – 4

நாச்சியப்பன் கண்டிப்பு மிகுந்த வாத்தியார். அவர் பிள்ளை என்பதால், எப்போதும் உடல் நலனில் அதிக அக்கறை கொண்டவன். அது போக, அவனுக்கு இயற்கையாகவே அழகான உடலும், ஆளைக் கவரும் முகமும் கிடைத்திருந்தது. சிரித்தால், சாட்சாத் அந்த கிருஷ்ண பரமாத்மா போல அப்படியே மனதை மயக்கி விடுவான். ஆனால் எள்ளளவும் சிரிக்க மாட்டான்… அவனின் பால்ய வயது சிநேகிதனான ரவி, கேமரா விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவன். எனவே இருவரும் சேர்ந்து விளையாட்டாக ஒரு‌‌ குக்கிங் வீடியோ எடுத்து

வேண்டினேன் – 4 Read More »

வேண்டினேன் – 3

மீராவுக்கு கண்ணனின் கோபத்தைப் பார்த்து உள் காய்ச்சலே வந்துவிட்டது. அவள் நடுங்கியபடி, பயத்தில் சிலை போல நின்றாள். இதற்குள், உள்ளே வந்திருந்த நகுல், கண்ணனின் காலில் விழுந்துவிட்டான். “டேய் அண்ணா, என் கேர்ள் ஃப்ரெண்ட் என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாடா. அவளுக்கு பர்த்டே வருது. கண்டிப்பா நீ சீஃப் கெஸ்ட்டா எங்க கூட ஹோட்டலுக்கு வந்தே ஆகணும்” என்று கெஞ்சினான். அவளும் இன்ஸ்டாவில் பிரபலமாக முயற்சித்துக் கொண்டிருப்பவள்தான். தன்னை பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டுகிறாள் என்று தெரியாத

வேண்டினேன் – 3 Read More »

அத்தியாயம் 2

யாதவ் அவன் கரத்தை ராம் கரத்திலிருந்து உருவிய போது ராம் அவன் உயிர்க் காதலி தன் காதலனிடமிருந்து கரத்தை விலக்கியது போல் முகத்தில் பாவனைகளை கொண்டு வந்தான். அதை முகம் சுருக்கி பார்த்த யாதவ், வெளிப்படையாக தன் நெற்றியில் அடித்துக் கொண்டு “சரி சொல்லி தொலை. என்ன பண்ணனும்?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டான். இது தான் நல்ல சந்தர்பம் என்று ராம், சட்டென்று யாதவ்வை அணைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “மச்சி ஆபிஸ்ல இருந்து போன்டா.

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம் 1

அந்த அழகான பூங்காவில் அமர்ந்து கணவன் மற்றும் குழந்தைகள் விளையாடுவதை ஆறு மாத கருவை சுமந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜோதிகாவின் அலைப்பேசி அலறியது. உடன் பிறந்த தங்கை யாஷ்மிகா அழைப்பு அவளின் உடல் அதிர்வை வெளிப்படையாகவே காட்டிக் கொடுத்தது அர்ஜூனுக்கு. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே மனைவியிடம் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, ஜோதிகாவோ தன் கைப்பேசியில் வந்துக் கொண்டு இருந்த அழைப்பை காட்டினாள். அதே நேரம் அர்ஜூனின் அலைப்பேசியும் சத்தத்தை கொடுக்க,

அத்தியாயம் 1 Read More »

வேண்டினேன் – 2

மீரா பின்னால் சென்று சுவற்றில் முட்டிக்கொள்ள, அவளை இன்னும் நெருங்கினான். இருவரது முகங்களும் சில இன்ச் இடைவெளியில் இருந்தது. அவன் கண்களை அத்தனை அருகில் பார்ப்பது, கழுத்தை கவ்வ காத்திருக்கும் சிங்கத்தை பார்ப்பது போல பயமாக இருந்தது மீராவுக்கு. “மீரா…” அவன் சொன்ன விதமே, அவளது இதயத் துடிப்பை நிறுத்துவது போல் இருந்தது. “உன் பயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…” என்று அவன் சொல்ல, இவளோ எச்சில் விழுங்கினாள். “பாவம், என்ன பத்தி தெரியாம வந்து மாட்டிக்கிட்ட.

வேண்டினேன் – 2 Read More »

வேண்டினேன் – 1

சென்னை மாநகர்… காலை பொழுது, மெல்ல மெல்ல விடியத் தொடங்கி இருந்தது. தூங்கிக் கொண்டிருந்த நகர மக்கள், இன்னும் விழித்துக் கொள்ளாதிருக்க, சாலைகளில் ஆங்காங்கே சிலர் மட்டும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களின் காலடி சத்தம், அந்த அமைதியான தெருக்களில் ஒரு மெல்லிய இசையைப் போல ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த அதிகாலைப் பொழுதின் அழகை மேலும் மெருகூட்ட, எங்கோ ஒரு டீக்கடையில் இருந்து வரும் இஞ்சி டீயின் வாசம் காற்றில் கலந்து அந்த இடத்தையே ரம்மியமாக்கியது. வாகனப்

வேண்டினேன் – 1 Read More »

நிஜம் – 2

அடுத்தகணம் அவள் முகம் மாறியது. மிகுந்த கோபத்தோடு அவனின் கைகளை பற்றியவள், ஆவேசமாக தன் கழுத்திலிருந்து கையை நகர்த்தினாள். அவன் பிடி விலகியது ஒரு நிமிடம் என்றாலும், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் அவள். ”உன்ன நான் சும்மாவே விட மாட்டேன் டா. உன்ன…” என்று கூறியபடி அவனை அடிப்பதற்காக கை ஓங்கினாள்.  ஆவேசமாக கரம் உயர்த்தியவள், அவளை அறியாமல் மயங்கி கீழே சரிந்தாள். நொடி நேரத்தில் ஒரு விதமான மனக் கலக்கத்திற்கு ஆளானான் மகேந்திரன்.

நிஜம் – 2 Read More »

நிஜம் – 1

இந்தியாவின் இதிகாச கதைகளை இன்றளவும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஓர் உன்னதமான நகரம் ராமேஸ்வரம். கடல் அலைகள் தொட்டும் தொடாமல் கரையை முத்தமிட்டு நகர்ந்து கொண்டிருக்க, காற்றில் மிதந்து வரும் ஈரப்பதத்தில், சரி பாதி வீதம் கருவாட்டு வாசம் கலந்து பரவி இருந்தது.  அங்கு மாசி கருவாடு விற்பனைக்கு பெயர் போன நிறுவனம், சுந்தரம் அன்ட் கோ. ராமேஸ்வரத்தில் பூர்வீக குடியாய் வாழும் சுந்தரலிங்கம் குடும்பத்திற்கு சொந்தமானது. கடற்கரையை ஒட்டியிருந்த தெருவின் கடைசியில் தான் வீற்றிருந்தது அவரின் பிரம்மாண்ட

நிஜம் – 1 Read More »

You cannot copy content of this page