January 2026

ஏகா காதலன் – 6

அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்..

ஏகா காதலன் – 6 Read More »

இதயத்தின் மொழி _12

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி _12 Read More »

மௌன ராகம் 12

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 12 Read More »

அத்தியாயம் 5

தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா…

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 10

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 10 Read More »

வீழ்ந்தேனடி உன் விழியில்

திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம்.

தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன்.

சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள்.

இவர்களில் யார் நினைப்பது நடக்கும்.
பார்க்கலாம்.

வீழ்ந்தேனடி உன் விழியில் Read More »

அத்தியாயம் 4

தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா…

அத்தியாயம் 4 Read More »

நலம் தானா ஊதாப் பூவே!! -5

நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு…

நலம் தானா ஊதாப் பூவே!! -5 Read More »

காற்றினிலே வரும் கீதம் 11

ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர்.
குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான்.
கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள்.
ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது.
அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன்.
அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..?
கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..?
அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..?
அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..
இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது..

காற்றினிலே வரும் கீதம் 11 Read More »

தூவானம் -14

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -14 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!