என் துணை – 2
ஆர்யனைக் கண்டதும் தன்னைச் சுற்றி நிகழும் சூழலையே மறந்து, தன் நிகழ்கால நொடிகளையும் துறந்து, உயிர்ச்சிற்பம் போல் அசையாது, அவனை மட்டுமே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள் திரவ்யா. மொத்த உலகமும் ஓர் நொடி இருளாக மாறிப்போக, அந்த இருளில் தோன்றிய வெளிச்சமாக ஆர்யன் திரவ்யாவின் கற்பனையில் தெரிந்தான். அவர்கள் அருகில் நெருங்கி வந்த ஆர்யன் யாரிடமும் எதுவும் பேசாமல் அவளோடு நின்ற இரு குழந்தைகளையும் பார்த்தான். இரு வாண்டுகளும் அன்னையின் ஆடையைப் பற்றியபடி அவனைப் […]
