நிஜமாகும் நினைவுகள்
நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம்
நிஜமாகும் நினைவுகள் Read More »
நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம்
நிஜமாகும் நினைவுகள் Read More »
நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது.
தோளில் சாயும் நேரம் 02 Read More »
குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை
கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்
ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு… பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய,
அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள்.
நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க,
உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?…. இவர்கள் காதல் வென்றதா?…
நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்!
கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன?
2. உருகும் மனதில் உறைபனியாய் Read More »
திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி …. எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது…… தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்…… தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி….. ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை……. கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன…. தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது….. காத்திருந்து பார்ப்போம்.
கண் கொண்டு பாரடா (டி ) என்னை Read More »
கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.
ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.
அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?
தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?
விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?
காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?
அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.
வெந்து தணிந்த இதயம்-2 Read More »
காதல் இருந்தது! 💝
அவள் காத்திருந்தாள்…
ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.
இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?
அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?
திரையிட்டு விலகாதே! -4 Read More »
அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது.
காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும்.
சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான்.
சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள்.
சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார்.
சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு.
You cannot copy content of this page