February 2026

இதழ் – 12

கதை சுருக்கம் :
காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை

இதழ் – 12 Read More »

இதயம் 1 1

சந்திர பிரகாஷ் – நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்…

இதயம் 1 1 Read More »

அத்தியாயம் 3

எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?…

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 13

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 13 Read More »

தூவானம் -17

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -17 Read More »

இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 7

சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது.

இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை.

இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள்.

நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும்
தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம்.

அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான்.

நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள்.

அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா?

அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா?

அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும்
நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா?

தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை
நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது?

அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களே
இந்தக் கதையின் பயணம்

இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 7 Read More »

நினைவு -5

உலகம் பார்த்த பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று. அழகிய இரு மனங்களின் உணர்வுகளின் காவியம்தான் காதல். அது ஒரு உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அழகிய உறவு.

உறவு என்பது அனைத்து மனங்களையும் ஒன்றிணைக்கும் பந்தம் மட்டுமல்ல; ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சியாக வாழக் காரணமாக அமைவதே இந்த உறவுதான். அப்படிப்பட்ட உறவில் அன்போடும் காதலோடும் தோன்றிய உறவு எவ்வளவு அழகானது.

இந்த உலகத்தில் மனிதன் பலவித உறவுகளுடனும் உணர்வுகளுடனும் பின்னிப் பிணைந்து இருக்கான். அப்படி உறவுகளோடு உணர்வுகளோடும் போராடும் இரண்டு அழகான இதயங்களைப் பத்திதான் இங்கு பார்க்கப் போறோம்.

இன்னும் தெளிவாகச் சொல்லணும்னா காதலின் வலியை, அதன் ஆழத்தை அனுபவிப்பதற்காகவே மறுபிறவி எடுக்கும் நாயகனையும், ஒட்டுமொத்த தூய காதலையும் ஒருங்கே பெறுவதற்குப் பிறந்த நாயகியையும் பற்றிய கதைதான் இது…

காதல் பலரிடம் பல பரிமாணங்களில் பல விதங்களில் வெளிப்படும். என்னுடைய பார்வையில்…

நினைவு -5 Read More »

மொழி – 7

சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி ‘பவித்திர பாரிஜாதம்’.

சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் ‘யஷ்வந்த்’.

யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி.

பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள்.

ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது.

சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை.

இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மொழி – 7 Read More »

Epi – 16 – சிக்கியது முந்தானை

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi – 16 – சிக்கியது முந்தானை Read More »

மௌன ராகம் 20

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 20 Read More »

You cannot copy content of this page