February 2026

தூவானம் -16

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -16 Read More »

திரையிட்டு விலகாதே! -35 (முடிவு🩷)

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -35 (முடிவு🩷) Read More »

மௌன ராகம் 14

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 14 Read More »

ஏகா காதலன் – 7

அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்..

ஏகா காதலன் – 7 Read More »

அத்தியாயம் 7

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

அத்தியாயம் 7 Read More »

தோளில் சாயும் நேரம் 10

நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது.

தோளில் சாயும் நேரம் 10 Read More »

மௌன ராகம் 13

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 13 Read More »

Epi – 15 – மாமன் முறை

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi – 15 – மாமன் முறை Read More »

திரையிட்டு விலகாதே! -34

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -34 Read More »

அவனே என் உலகம்

ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு… பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய,
அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள்.
நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க,
உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?…. இவர்கள் காதல் வென்றதா?…

அவனே என் உலகம் Read More »

You cannot copy content of this page