January 2026

அத்தியாயம் 4

படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது… அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்… அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா?

ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்?

காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே?

அத்தியாயம் 4 Read More »

அத்தியாயம் 4

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 4 Read More »

நிஜமாகும் நினைவுகள்

நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம்

நிஜமாகும் நினைவுகள் Read More »

காதல் இதுதானா ? – காதல் 21

ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்… எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?… என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை.

உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி.

காதல் இதுதானா ? – காதல் 21 Read More »

மௌன ராகம் 10

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 10 Read More »

வலியை சூடிய காதலே – 19

நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி,

ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான்,

ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது,

இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா?

வலியை சூடிய காதலே – 19 Read More »

தூவானம் -7

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -7 Read More »

அத்தியாயம் 5

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

அத்தியாயம் 5 Read More »

ரசிகை – 6

நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்!

ரசிகை – 6 Read More »

1.அத்தியாயம்

காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள்.

அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா?

தீண்டாமலே சுடும் தணல் நீயே!

இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை….

1.அத்தியாயம் Read More »

You cannot copy content of this page