January 2026

காற்றினிலே வரும் கீதம் 2

ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர்.
குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான்.
கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள்.
ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது.
அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன்.
அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..?
கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..?
அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..?
அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..
இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது..

காற்றினிலே வரும் கீதம் 2 Read More »

தூரிகை 1❤️

இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்…

பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்…

ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா…

அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!!

காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!!
அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!!

தூரிகை 1❤️ Read More »

அத்தியாயம் 4

பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள்.
இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை.

அத்தியாயம் 4 Read More »

தூவானம் -2

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -2 Read More »

அத்தியாயம் -2

ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்….

அத்தியாயம் -2 Read More »

இதயத்தின் மொழி -2

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி -2 Read More »

ரசிகை 2

நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்!

ரசிகை 2 Read More »

Epi -6 – ஜான் இன்ட்ரோ

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi -6 – ஜான் இன்ட்ரோ Read More »

மௌன ராகம் 7

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 7 Read More »

ஆடி வரும் வண்ண மயிலே-02

அந்தி நேர மாலையிலே
தோகை விரித்தாடும்
அழகு மயிலே…

உன் தோகையில் தஞ்சம்
கொள்ள நான் வரவா
காவல்காரன் நான் உன்
காவலில் கைதாகவா…?

தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை…

அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு…

அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது.

சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை..

அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள்.

அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார்.

அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை.

அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆடி வரும் வண்ண மயிலே-02 Read More »

You cannot copy content of this page