January 2026

என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே

தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். ***

இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்..
****

குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்..

என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே Read More »

மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1

கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது.
​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன.
​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?
​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது.

மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1 Read More »

அத்தியாயம் 1

பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள்.
இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை.

அத்தியாயம் 1 Read More »

Epi -1 – முதல் பார்வை

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi -1 – முதல் பார்வை Read More »

அத்தியாயம் – 1

மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம்.
பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு.

அத்தியாயம் – 1 Read More »

திரையிட்டு விலகாதே! -1

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -1 Read More »

தோளில் சாயும் நேரம் 01

நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது.

தோளில் சாயும் நேரம் 01 Read More »

காதல் இதுதானா ? – காதல் 13

ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்… எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?… என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை.

உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி.

காதல் இதுதானா ? – காதல் 13 Read More »

கண்கள் பேசுதே – அத்தியாயம் -1

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே – அத்தியாயம் -1 Read More »

உன்னில் சிறையாகிறேன் – 1

இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம்,

காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி,

மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி,

உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன்,

உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன்,

ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்” இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது , 

உன்னில் சிறையாகிறேன் – 1 Read More »

You cannot copy content of this page