January 2026

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 1

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன??

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 1 Read More »

அத்தியாயம் -3

வேனலின் வெண்பூவே.

இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன்.
அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா?

அத்தியாயம் -3 Read More »

விழி😍 பிம்பம் 🪞 – 4

“சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். “”கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள்.
இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், “”இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்”” எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்…”

விழி😍 பிம்பம் 🪞 – 4 Read More »

மாண்புமிகு காதலன்

ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன்

மாண்புமிகு காதலன் Read More »

கண்கள் பேசுதே அத்தியாயம் -3

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே அத்தியாயம் -3 Read More »

இதழ் – 5

கதை சுருக்கம் :
காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை

இதழ் – 5 Read More »

முரடன் 3

நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான்.

நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது.

பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக.

முரடன் 3 Read More »

திரையிட்டு விலகாதே! -15

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -15 Read More »

ரசிகை – 4

நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்!

ரசிகை – 4 Read More »

காற்றினிலே வரும் கீதம் 4

ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர்.
குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான்.
கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள்.
ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது.
அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன்.
அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..?
கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..?
அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..?
அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..
இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது..

காற்றினிலே வரும் கீதம் 4 Read More »

You cannot copy content of this page