January 2026

அத்தியாயம்- 2

அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது.

காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும்.

சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான்.

சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள்.

சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார்.

சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு.

அத்தியாயம்- 2 Read More »

மௌன ராகம் 2

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 2 Read More »

விழி😍 பிம்பம்🪞- 1

“சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். “”கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள்.
இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், “”இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்”” எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்…”

விழி😍 பிம்பம்🪞- 1 Read More »

நெஞ்சம் துடிக்குது கொஞ்சம் டீசர்

கவுதம் பிரபாகரன் – பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்…. நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்…

நெஞ்சம் துடிக்குது கொஞ்சம் டீசர் Read More »

நலம் தானா ஊதாப் பூவே!!

நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு…

நலம் தானா ஊதாப் பூவே!! Read More »

மௌனத்தின் முதல் வரி

புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்?

மௌனத்தின் முதல் வரி Read More »

பகை வளர்ந்தது

ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு… பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய,
அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள்.
நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க,
உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?…. இவர்கள் காதல் வென்றதா?…

பகை வளர்ந்தது Read More »

அவள் முதல் அவள் வரை

அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது.

காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும்.

சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான்.

சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள்.

சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார்.

சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு.

அவள் முதல் அவள் வரை Read More »

அத்தியாயம் 01

இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது அப்போது சகோதரன் தனது மகளை சகோதரி மகனுடன் திருமணம் செய்ய கேட்டது உடனே சம்மதம் சொல்லகிறார்.

திருமணமான பிறகு, இந்த இரு ஜோடிகள் எவ்வாறு ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் உறவை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே கதை.

அத்தியாயம் 01 Read More »

இதயத்தின் மொழி

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!