January 2026

மௌன ராகம் 8

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 8 Read More »

அத்தியாயம்-3

ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்….

அத்தியாயம்-3 Read More »

நலம் தானா ஊதாப் பூவே!! -3

நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு…

நலம் தானா ஊதாப் பூவே!! -3 Read More »

முரடன் 2

நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான்.

நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது.

பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக.

முரடன் 2 Read More »

அத்தியாயம்- 4

அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது.

காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும்.

சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான்.

சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள்.

சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார்.

சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு.

அத்தியாயம்- 4 Read More »

தூவானம் -3

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -3 Read More »

தோளில் சாயும் நேரம் 04

நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது.

தோளில் சாயும் நேரம் 04 Read More »

அத்தியாயம் 3

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 01

ஊடகத்துறையில் தன்னை ஒரு அடையாள சின்னமாக மாற்ற வேண்டுமென அயராது உழைக்கும் நாயகி ரேவதி சந்திரிக்கா, அவள் அறியாது செய்த தவறால் அவளை பழிவாங்க துடிக்கும் நாயகன் விஷ்வ ஆதித்யா தமிழ் அன்னைக்கும் சிங்கள அரசியல்வாதியான தந்தைக்கும் மகனாக பிறந்தவனுக்கு பிறவியிலேயே அரக்க குணம் உண்டு அது மட்டுமல்ல அவனுக்கு வித்தியாசமான ஒரு பழக்கமும் உண்டு அதை நாயகி கண்டுபிடித்தாளா? என்பதை சின்ன சின்ன திருப்பங்களுடன் பார்க்கலாம்

இவர்களின் காதல் மோதலுடன் சின்ன சின்ன ட்விஸ்ட்

அத்தியாயம் 01 Read More »

இதயத்தின் மொழி -3

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி -3 Read More »

You cannot copy content of this page