May 2026

நேசப்பிணி-2

பஞ்சாயத்து முடிந்த பிறகு மயிலா உற்சாகத்தோடு துள்ளி குதித்தபடி, தன்னுடைய வீட்டுக்கு விரைந்தாள். தந்தனா மெட்டில், கண்டபடி ஸ்ருதியோடு தாளம் சேராமல் எதையெதையோ பாடிக் கொண்டே கால்கள் தரையில் படாதபடி பறந்தது அந்த பட்டாம்பூச்சி… “கடவுளே!! நடக்குறதெல்லாம் கனவா இல்ல நிஜம்மான்னு எனக்கே தெரியலியே!! வர வெள்ளி கிழமை எனக்கும் என் மச்சானுக்கும் கண்ணாலம்… ஐயோ.. நெனச்சாலே புல்லரிக்கிதே!” என்று நினைத்துக் கொண்டே அவள் வீட்டை நெருங்கும் போது, யாரோ ஒரு பெண் அழுது கொண்டிருக்கும் சத்தம்

நேசப்பிணி-2 Read More »

நேசப்பிணி-1

பசுமையான மலைச் சரிவுகளின் இடையே பனியால் நனைந்த மரங்களில் நீர் சொட்ட, காலை நேரக் காற்று வந்து இலைகளை உலர வைத்தது. அதனுக்கு பின்னணி இசை போல தூரத்தில் அருவிகள் பாட்டிசைக்க, அப்பகுதியில் இருந்த குட்டி குட்டி குடிசை வீட்டு கூரைகளில் இருந்து புகை மெல்ல எழுந்து வானைத் தழுவிற்று. மலர்களின் நறுமணமும், பறவைகளின் கீதமும் அவ்விடத்தை ஒருவித அமைதியில் ஆழ்த்த, அவற்றை கலைக்காமல் மெலிதாய் படர்ந்தது சூரிய ஒளிக்கீற்று‌. இத்தகைய இயற்கை அதிரும் வண்ணம், “ஐயோ

நேசப்பிணி-1 Read More »

அத்தியாயம் 22

  ஐஸ் ஸ்லெட்டில் இருவரும் சென்று கொண்டிருந்த போது அபிஷேக் ஜோஸ்வினியின் அருகாமையை ஆழ்ந்து அனுபவித்தான். ஐஸ் ஸ்லெட் மிக வேகமாக சென்று கொண்டிருந்த போது அவன் ஜோஸ்வினியின் மகிழ்ச்சியை ரசித்தான். அப்போது அவர்களுக்கு அருகில் வந்த ஒரு ஸ்லெட் கட்டுப்படுத்த முடியாமல் அவர்களை இடித்து சென்றது. அதில் அவர்களது ஸ்லெட் பேலன்ஸ் இல்லாமல் குப்புற கவிழ்ந்தது. திடீரென்று இப்படி நிகழ்ந்ததில் அதிர்ச்சியான அபிஷேக் ஜோஸ்வினியை கட்டி பிடித்தபடி உருண்டான். ஜோஸ்வினிக்கு என்ன நடந்தது என்று புரியவே

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

அத்தியாயம் 21 அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அபிஷேக்கின் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் அபிஷேக்கின் அழைப்பில் ரிஷப்சன் பார்ட்டிக்கு வந்திருந்தனர். அபிஷேக்கின் ரெஸ்ட்டாரன்ட்டிலேயே அவர்களது. ரிசப்ஷன் ஃபங்ஷனை அரேன்ஜ் செய்திருந்தான். ஜோஸ்வினி தான் அவனது நண்பர்களை பார்த்து திணறி கொண்டிருந்தாள். அவர்களது பிரெஞ்சும், எதற்கெடுத்தாலும் கட்டி பிடிப்பதும் என ஜோஸ் வினிக்கு எதிலும் மனம் ஒட்டவில்லை. அவளுக்கு ஒரே ஒரு ஆறுதல். அவளுடைய அம்மாவும், அப்பாவும் அவளோடு இருந்தது தான். ஆம். ஜோஸ்வினியின்

அத்தியாயம் 21 Read More »

அத்தியாயம் 20

  ஜோஸ்வினியின் கண்கள் எதிரே தெரிந்த காட்சியை பார்த்ததும் விழிகள் வெளியே வந்து விடுவது போல பார்த்தாள். காரை நிறுத்திய அபிஷேக் அவளுடைய பாவனையில் துணுக்குற்றான். ‘என்ன இவங்க இப்டி பாக்குறாங்க?’ என்று யோசனையுடன் பார்வை போன திசையை பார்த்தவன் அப்படியே கடுப்பாகி நின்றான். ஏனெனில் அங்கே ஒரு ஜோடி உதடோடு உதடு முத்தமிட்டபடி தங்களை மறந்த நிலையில் சஞ்சரித்திருந்தார்கள். ‘அடப்பாவிகளா…  கைய கூட பிடிக்க முடியாத சிட்சுவேஷன்ல இருக்கேன். ஏன்டா இப்டி கடுப்பேத்தறீங்க?’ என்று மனசாட்சியை

அத்தியாயம் 20 Read More »

அத்தியாயம் 19

  பாரீஸ் ஜோஸ்வினி பிரான்ஸ் வந்து ஏறக்குறைய ஒரு வாரம் ஆகியிருந்தது. அவளுக்கு அவன் வீட்டை அடையும் வரையும் கூட ஒன்றும் தெரியவில்லை அபிஷேக்கை பற்றி. அபிஷேக் எப்போதுமே சாதாரணமாக இருப்பதால் அவனை அவ்வளவு பெரிய பணக்காரனாக அவனை எதிர்பார்க்கவில்லை. அவன் ரெஸ்ட்டாரென்ட் பற்றி சொன்ன போது கூட அதனை பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளாதவள் அவனது‌‌ வீட்டை பார்த்து மலைத்தாள். ஏறக்குறைய ஒரு அரண்மனையை ஒத்திருந்தது அவனது வீடு. வீட்டில் இரண்டு கார்கள் நின்றிருந்தது. அவன் சென்னையில்

அத்தியாயம் 19 Read More »

அத்தியாயம் 18

  திருமணம் முடிந்ததும் ஜோஸ்வினியின் பெற்றோர் அவளை அபிஷேக்கின் சென்னை வீட்டில் அழைத்துச் சென்றவர்கள் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு உடனே கிளம்பினார்கள். அவர்கள் கிளம்பியதை பார்த்ததும் தன்னையறியாமல் அழுதவள்  காயத்ரியை கட்டி பிடித்து கதறினாள். அதை பார்த்து பதறிய அபிஷேக் அவளை சமாதானம் செய்ய முயன்றான். ஆனால் ஜோஸ்வினியோ இருந்த கோபத்தில் அவனை உதறி விட்டு சென்றாள். இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியுற்றனர். அதனை பார்த்த அபிஷேக்கின் பாட்டி வள்ளியம்மாள் ஜோஸ்வினியை திட்டினார். “ஏ… பொண்ணே

அத்தியாயம் 18 Read More »

அத்தியாயம் 17

  எதுவோ துரத்துவது போல அங்கிருந்து வெளியேறியவள் எப்படி தன் வீட்டை அடைந்தாள் என்று புரியவில்லை. அபிஷேக்கை தான் ஏன் அடிக்காமல் விட்டோம் என்று தவித்தாள். அவளுக்கு தன்னை நினைத்தே கழிவிரக்கமாக இருந்தது. நண்பனாக இருந்தவன் திடீரென்று இப்படி மாறியதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவள் அபிஷேக்கை நினைத்து ஒவ்வொரு கனமும் டென்ஷனாக இருந்தாள். அதே சமயம் ஷியாமை என்ன செய்தானோ என்ற பயமும், வெறுப்பும் அவன் மீது இருந்தது. அவன் சொன்னது வேறு அவளுக்கு ஞாபகம்

அத்தியாயம் 17 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!