July 2026

நேசப்பிணி-16

குமரன் கொட்டகைக்குள் மெதுவாக நுழைந்தான். இருள் சூழ்ந்திருந்த அந்த சிறிய இடத்தில் மயிலா சுருண்டு படுத்திருந்தாள். உறக்கத்தில் அழுதிடும் அவளின் மெல்லிய முனகல் சத்தம் அவனது இதயத்தை பிசைந்தது. அவளை எழுப்பாமல், அப்படியே தூக்கிச் சென்று வீட்டிற்குள் படுக்க வைக்கலாம் என்று நினைத்தான். எனவே மிகவும் கவனமாக அவளைத் தூக்க முயன்றான்.   ஆனால் அவனது எதிர்பார்ப்புக்கு மாறாக, அவன் தொட்டதும் மயிலா சட்டென விழித்துக் கொண்டாள். குமரன் தான்‌ தூக்குகிறான் என்று தெரிந்ததும், வெறி கொண்டவளைப் […]

நேசப்பிணி-16 Read More »

நேசப்பிணி-15

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது. எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டு, வம்பு இழுத்துக் கொண்டு இருக்கக்கூடிய மயிலா, இப்போது எல்லாம் மிகவும் அமைதியாகி விட்டாள்.    குமரனும் அவளிடம் வலிய சென்று பேசவில்லை. ஆனால், அவன் மனதில் அவளால் ஒரு நெருடல் உருவாகி இருந்தது. அதை காதல் என்று அறிந்து கொண்டவனுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக மனம் ரணமாக ஆரம்பித்தது. ஆனாலும், மயிலாவிடம் இறங்கிச் சென்று இதைப் பற்றி பேசவில்லை அவன்.    மீண்டும் ஒரு மாலை நேரம்…    தோட்டத்து வேலைகளை முடித்து

நேசப்பிணி-15 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் _ 14     ஸ்ருதி, “அம்மா எனக்குத் தெரிந்ததை மட்டும் நான் சொல்றேன் என்றவள் என் பக்கத்தில் படுத்திருந்த இனியா நான் எழுந்து பார்க்கும்போது இல்ல. அதனால நான் பயந்து போய் தேடின.. எங்கேயும் அவள் இல்லாததால் இவங்க மூன்று பேரையும் எழுப்பினேன் .எனக்கு அவ்வளவு தான் தெரியும்” என்றாள். “ஆமாம்மா அவ வந்து எழுப்பியதும் எங்களுக்கும் ஒன்னும் புரியல .நாங்க எல்லா இடத்திலேயும் தேடி பார்த்தோம் எங்கேயும் இல்லை . உங்க அறையும் மூடி

தாரகையின் மாயோன் Read More »

நேசப்பிணி-14

ஒரு நாள் அந்தி சாயும் நேரம்… பறவைகள் கூட்டுக்கு திரும்பும் அந்நேரத்தில், அந்த மலைக்கிராமம் சற்று சலசலப்போடு அடங்கத் தொடங்கியது. மயிலா விறகு அடுப்புக்காக சுள்ளி பொறுக்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்றாள்.    அவள் பாதங்கள் அடர்ந்த மரங்களின் ஊடாகச் சென்ற ஒற்றையடிப் பாதையில் தளர்வோடு நடந்து கொண்டிருந்தன. மரக்கிளைகளின் இலைகளுக்கிடையே சூரியனின் பொன்னிறக் கதிர்கள் மெல்லியதாக ஊடுருவின. அப்பகுதியில் பறவைகளின் ரீங்காரம் மட்டும் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. அவள் சுள்ளி பொறுக்கியவாறே நடந்து சென்றபோது, சற்று தூரத்தில் தெரிந்த

நேசப்பிணி-14 Read More »

நேசப்பிணி-13

அந்தச் சிறிய குகைக்குள் இருவரும் நெருக்கமாக ஒண்டிக்கொண்டனர். வெளியே பெருமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. அடர்ந்த மரங்களின் இலைகளின் ஊடாக நீர் குகைக்குள் தெறித்தது. இது போதாதென பாறையினில் வழிந்து வந்த நீரும் அவர்கள் மீது பட்டு வழிந்தது.   யானைகளோ, ‘இன்றைக்கு ஒரு முடிவு தெரியாமல் நகர மாட்டோம்!’ என்பது போல, அந்த இடத்திலேயே அசையாமல் நின்றிருந்தன.    “இன்னிக்கி பொழுது இப்படித்தான் போகுமா மச்சான்?” என்று கேட்டவளை திரும்பி பார்த்தான்.   மயிலாவின் புடவை

நேசப்பிணி-13 Read More »

நேசப்பிணி-12

இந்த பயணம் தொடங்கிய நொடியில் இருந்து குமரன் மயிலாவிடம் காட்டிய அக்கறை அவளது மனதை சக்கரையாய் கரைத்து விட்டிருந்தது… அவனது கனிவான பார்வை, அவளது பாதுகாப்பைப் பற்றிய கவலை, சின்ன சின்ன உதவிகள் எல்லாமே அவளது இதயத்தில் புதிய நம்பிக்கைக் கீற்றுகளை விதைத்திருந்தன. அவனிடம் இருந்த வெறுப்பும் கோபமும் தொலைந்து, ஒரு மெல்லிய காதல் பார்வை தெரிந்தது. அவனது கரங்களின் ஸ்பரிசம் ஒவ்வொரு முறை அவளது உடலில் படும் போதும் மின்சாரத்தை பாய்ச்சுவது போலிருந்தது.  ‘என் மச்சான்

நேசப்பிணி-12 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!