August 2026

நேசப்பிணி-25

  இரவு முழுவதும் குமரன் அயராது வண்டியை ஓட்டிக் கொண்டே இருந்தான்.    ‘எப்படியாவது தங்கள் திட்டத்தை வெற்றி பெற செய்திட வேண்டும்!’ என்பதுதான் அவனது மனதில் இருந்த ஒரே குறிக்கோள்.    அவனது உடல் சோர்வடைந்து இருந்தாலும், அந்த எண்ணம் அவனை மேலும் உத்வேகப்படுத்தியது. அதிகாலை நேரம் நெருங்க நெருங்க, சிட்டியின் வெளிச்சம் தூரத்தில் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது.‌ வயிற்று வலி சற்று குறைந்திருந்த ரமேஷ், தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தான்.   “ஊருக்குள்ள வந்துட்டோமா குமரா?”   […]

நேசப்பிணி-25 Read More »

நேசப்பிணி-24

  வனதுர்க்கை கோவிலில் இருந்து, மயிலாவும் அவளுடைய அம்மாவும் காட்டுப்பாதை வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். சூரியனின் பொன்னிறக் கதிர்கள் மரக்கிளைகளின் ஊடாக வரிவரியாய் விழுந்து, அந்தப் பாதைக்கு ஒருவித அழகைக் கொடுத்திருந்தது. கோவிலுக்குச் சென்று வந்ததன் விளைவாக, மயிலாவின் மனதிலும் ஒருவித அமைதி குடிகொண்டிருந்தது. எனவே காட்டின் அழகை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தாள்.   அந்த சமயத்தில்தான், அவர்களுக்குப் பின்னால் யாரோ நடமாடுவது போன்ற சத்தம் கேட்டது. பேச்சி பயத்துடன் மகளை இறுகப் பற்றிக் கொண்டார். இருவரும்

நேசப்பிணி-24 Read More »

நேசப்பிணி-23

  பாண்டிய மன்னனிடம் நீதி கேட்க செல்லும் கண்ணகி போல, கையில் அந்த துணி பையை தூக்கி கொண்டு செவத்தம்மா பாட்டியின் குடிசையை நோக்கிச் சென்றாள் மயிலா. அவளது ஒவ்வொரு அடியிலும் அடிமனதின் ஆவேசமும், உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த துக்கமும் வெளிப்பட்டது. அவள் குடிசையை அடைந்தவுடன், வாசலில் நின்றிருந்த குமரன் அவள் கையில் இருந்த அந்தத் துணிப் பையைப் பார்த்தான்.    மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு அவளை வழி மறித்து நின்றவன், “இது எப்படி உன் கைக்கு

நேசப்பிணி-23 Read More »

நேசப்பிணி-22

  பாட்டி கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டு முடித்த மயிலாவுக்கு, அவன் லட்சிய வெறியினை புரிந்து கொள்ள முடிந்தது.   அவனுக்குத் தன் கடமைதான் முக்கியம். அதற்காக அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை அவள் இப்போது முழுமையாக உணர்ந்து கொண்டாள். அதற்காக அவள் கொடுத்த விலை அதிகப்படி!    ‘நான் அவசரமாய் இந்த திருமண பந்தத்தில் நுழைந்ததால், இரண்டு பேரின் வாழ்வையும் சிக்கலாக்கி விட்டேன்!’ என்று நினைத்து அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.     ‘இனி தன்

நேசப்பிணி-22 Read More »

நேசப்பிணி-21

  செவத்தம்மா பாட்டி அசந்து தூங்கி கொண்டிருக்க அவர் தூக்கத்தை கலைத்தது யாரோ ஒருவனின் முனகல் சத்தம். இரவு நேரம், ஆற்றங்கரை ஓரம், ஆள் அரவமற்ற இடம் என்பதால், பாட்டி அந்த சத்தம் கேட்டதும் அடித்துபிடித்து எழுந்து உக்காந்தார். இருளும் குளிரும் அதை அமானுஷ்ய சக்தியாக எண்ணச் சொல்லி அவர் மனதை அச்சுறுத்திற்று.   “ம்மா… ம்மா…” என்று உதவி கேட்கும் வகையில் குரல் தெளிவாக கேட்கவும், தேடி பார்க்க நினைத்து மண்டபத்தை விட்டு வெளியே நடந்தார். அங்கே ஓடைக்கு அருகில்

நேசப்பிணி-21 Read More »

நேசப்பிணி-20

  குமரன் மயிலாவோடு ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்த போது, வீட்டின் கொல்லைப் பக்கம் ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது. உடனே குமரன் பரபரவென செயல்பட்டான். ஏதோ முக்கியமான தருணம் வந்துவிட்டது என்பதை போல அவனது கண்கள் மின்னியது. வேகமாகத் தன் அறைக்குள் சென்று பரண் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்து சில முக்கியமான பேப்பர்களையும், ஒரு சிறிய பென் டிரைவையும் எடுத்துக் கொண்டு வாசல் பக்கம் நடந்தான்.   மரத்தின் மறைவில், முகமூடி அணிந்த ஒரு நபர் அமைதியாக நின்று

நேசப்பிணி-20 Read More »

நேசப்பிணி-19

  குமரன் சொல்வது உண்மைதான் என்பதை மயிலாவின் மூளை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது. ஆனால் அவனது குரலில் இருந்த உறுதியும், கண்களில் தெரிந்த தீவிரமும் அவளைக் குழப்பியது. அவள் உடல் மிகவும் சோர்வடைந்து துவள, துப்பாக்கியை லேசாகத் தளர்த்தினாள்.   அந்த ஒரு சிறிய இடைவெளியை கவனித்த குமரன், மின்னல் வேகத்தில் பாய்ந்து அவள் கையில் இருந்து அந்தத் துப்பாக்கியை லாவகமாகப் பறித்துக் கொண்டான்! இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருந்தது. துப்பாக்கியைத் தன் முதுகு பக்கம் பத்திரமாக ஒளித்து

நேசப்பிணி-19 Read More »

நேசப்பிணி-18

குமரன் பதற்றத்துடன் அவளைச் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தான். கோவில் முழுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. பிறர் அறியாமல் அவளைத் தேடிட‌ படாதபாடு பட்டான் அவன்.    பலவிதமான முகங்கள் அவளைப் போல தோற்றம் காட்டி, அவனுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தின. அவளது புடவையின் நிறம், அவளது உயரம் என எல்லாவற்றையும் மனதில் இருத்தி கூட்டத்திற்குள் பார்வையால் ஊடுருவினான். ஆனாலும், அந்த பாதகத்தி இவன் கண்ணில் படவில்லை!    ‘எங்கே போனாள் இவள்?’ என்ற கேள்வி அவனது இதயத்தை வேகமாக

நேசப்பிணி-18 Read More »

நேசப்பிணி-17

  சிறுத்தை காட்டுக்குள் சென்றது உறுதியான பிறகுதான் குமரன் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அவனது கையில் சிறுத்தை கீறிய காயத்திலிருந்து இன்னமும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதற்குள் மயிலா அந்த நொடியின் அவசரத்தை உணர்ந்து, வேகமாக ஓடிச் சென்று ஊர் மக்களை உதவிக்கு அழைத்தாள்.    கையில் கிடைத்த கம்புகளையும், அரிவாள்களையும் எடுத்துக்கொண்டு அவர்கள் பதற்றத்துடன் அந்த இடத்தை நோக்கி வந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் எரியும் நெருப்பு பந்தங்கள் இருந்தது. அவை அந்த இருண்ட இரவையே வெளிச்சமாக்கி

நேசப்பிணி-17 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!