August 2026

அத்தியாயம் – 6

வெகுநேரம் கழித்தே இமைகளை மெல்ல திறந்த நேசமல்லி முதலில் தேடியது என்னவோ உத்தமனை தான். தன் அருகில் அவன் இல்லை என்றதும் பதற்றமாக எழுந்துக் கொள்ள போனவளை பார்த்தபடியே “நான் எங்கேயும் ஓடி போகல. இங்கே தான் இருக்கேன்” என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்து உள்ளே வந்தான். குழந்தை செய்த வேலையில் அவனின் ஆடை முழுவதும் வீணாகி போனதால் வேறு ஆடையை மாற்றுவதற்காக வீடு சென்று திரும்ப வந்து இருந்தான் உத்தமன். வீடு சென்றவனுக்கு மூளை […]

அத்தியாயம் – 6 Read More »

அத்தியாயம் – 5

வார்ட்டினுள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளை அழுத்தமாக பார்த்தபடி அமர்ந்து இருந்தவனின் சிந்தனைகள் முழுவதும் சிறிது நேரத்திற்கு முன் மருத்துவர் கூறியதை பற்றியே தான் யோசித்துக் கொண்டு இருந்தன. “இங்க பாருங்க உத்தமன். உங்க மனைவிக்கு இப்போ பழசு எதுவும் ஞாபகத்துல இல்ல. ஐ மீன் நேசமல்லிக்கு மெமரி லாஸ். இது பெர்மன்ட்டா இல்லையானு இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. எப்போ வேணாலும் அவங்களுக்கு திரும்ப எல்லா நினைவுகளும் வர வாய்ப்பு இருக்கு. அண்ட் வராமல் போகவும் சான்ஸ்

அத்தியாயம் – 5 Read More »

அத்தியாயம் – 4

மருத்துவமனை வளாகத்தினுள் நுழைந்தவன் வேகமாக உள்ளேச் செல்ல, அவன் எதிரே அவசரமாக சில மருத்துவ உபகரணங்களை எடுத்தபடி ஓடி வந்த செவிலியரோ, “சார் எங்கே போனீங்க. உங்க வைஃப் ரொம்ப பயப்படுறாங்க. கையில இருந்த டிரிப்ஸ் எல்லாத்தையும் பிடுங்கி போட்டுட்டாங்க. பெட்ல இருந்து வேற கீழே விழுந்துட்டாங்க சார்.  எங்களால அவங்கள கட்டுப்படுத்தவே முடியல” என்று கூறியதை கேட்டதும் தான், அப்பெண்ணின் மனநிலையில் இருக்கும் வீரியம் என்னவென்று அவனுக்கு புரிந்தது. மனதினுள்ளே ‘ஒரு வேளை பைத்தியக்காரியா இருப்பாளோ’

அத்தியாயம் – 4 Read More »

அத்தியாயம் -3

அடுத்த நாள் அதிகாலையில் மெல்ல முழிப்பு தட்ட, கொஞ்சம் நஞ்சம் இருந்த போதையும் மொத்தமாக தெளிந்து எழுந்து  இருக்கரத்தாலும் தலையை பிடித்துக் கொண்டு அமந்தான் உத்தமன். “ஆ… தலைவலிக்குதே” என்று தலையை அழுத்தி விட்டு நிமிர்ந்து அவன் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தான். விழிகளை சுருக்கி நேற்று நடந்ததை எல்லாம் சிந்தனைக்கு கொண்டு வந்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “டேய் உத்தமா என்னடா பண்ணி வச்சி இருக்க. ஆக்சிடென்ட் பண்ணதுக்காக அந்த குண்டச்சியை ஹாஸ்ப்பிட்டல் கூட்டி வந்து சேர்த்த

அத்தியாயம் -3 Read More »

அத்தியாயம் – 2

சிறு தூரம் கூட சென்று இருந்து இருக்க மாட்டான் அவன். சடன் பிரேக் போட்டு அப்படியே நின்றவன் விழிகள், முன் கண்ணாடி வழியாக அங்கே மழையில் நனைந்தபடி குருதி வழிய பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பவளை அழுத்தமாக பார்த்தான். ஏனோ அவன் மனம் வெறுப்பாக இருந்தது. இவனின் இந்த இரக்க குணத்தை அடியோடு வெறுத்து போக நினைத்தவனுக்கு மீண்டும் யாரென்றே தெரியாத ஒருத்தியின் மீது இரக்கம் பட வைத்தது. அப்படியே இமைகளை மூடி இருக்கையில் சாய்ந்தவன் மூளை

அத்தியாயம் – 2 Read More »

அத்தியாயம் – 1

அந்த கதவின் துளை வழியாக பார்த்தவளின் விழிகள் பயத்தில் நடுங்கி போக, உடன் உயிர் பயமும் வந்து ஒட்டிக் கொண்டது. கருவில் வேறு ஒன்பது மாத குழந்தை. படபடப்பிலும் அச்சத்திலும் பிரசவ வலி நேர்ந்து விடுமோ என்ற பயமும் சேர்ந்துக் கொள்ள, அமைதியான அந்த இரவு நேரத்தில் மூச்சு சத்தம் கூட யாருக்கும் கேட்டு விட கூடாதென்று பயந்தாள் பெண்ணவள். நடுங்கிக் கொண்டு இருந்த இதயத்தோடு ஒன்பது மாத கருவை சுமந்துக் கொண்டு யாருக்கும் சத்தம் கேட்காதவாறு

அத்தியாயம் – 1 Read More »

தாரகையின் மாயோன் -15

மாயோன் – 15 கார்த்திக் அனைவரையும் சமாதானப்படுத்தியவன் ஒரு விஷயத்தைக் கூற அனைவரும் அதிர்ச்சியில் நின்றனர். “டேய் அவளுக்கு எதுவும் ஆகாது டா .இது பயப்படக் கூடிய விஷயம் தான். இருந்தாலும் அவ்வளவு சீரியஸ் இல்ல. உங்களை விடவும் இப்போது எனக்குதான் அவளின் உடல் நிலை பற்றி கவலை அதிகமா இருக்கு, அவளுக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னால தாங்க முடியாதுடா புரிஞ்சுக்கோங்க” என்று கலங்கினான். இதில் அனைவரும் அதிர்ச்சியாக  சரவணராஜன் மட்டும் தன் மகனை பார்த்து சிரித்தவர்

தாரகையின் மாயோன் -15 Read More »

நீ எந்தன் நேசப்பிணி!

வனத்தின் மடியில் பூத்த ஒரு விசித்திர காதல் காவியம், ‘நீ எந்தன் நேசப்பிணி!’… பழிச்சொல்லால் இணைந்த இந்தப் பந்தம் இவர்களுடையது. மயிலாவின் காதல் வலைக்குள் சிக்கியது வெறும் வேங்கையல்ல! வனத்தின் அரசன்… தன் காதலால் அவனைச் சிறை பிடித்துவிடலாம் என அவள் கணக்கு போட, வேங்கையின் வேகம் அவளை நிலைகுலையச் செய்கிறது. மயிலாவின் பிடிவாதம் இறுதிவரை நீடிக்குமா? அல்லது அவனது கோபத் தீயில் அவளின் வனமே கருகிப் போகுமா? வாருங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

நீ எந்தன் நேசப்பிணி! Read More »

இறுதி அத்தியாயம்

  கிராமத்தில், மயிலா தன்னுடைய குடிசையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். கனவுகளின் ஊடே சில சமயம் குமரனின் முகம் வந்து போனது. அவன் சிரித்தபடி அவளை அழைப்பது போலவும், பிறகு சட்டென இருள் சூழ்ந்து அவன் மறைந்து போவது போலவும் கனவுகள் வந்தன. ஒவ்வொரு முறை திடுக்கிட்டு விழிக்கும்போதும் அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.    இரண்டு நாட்களில் வருவதாகச் சொல்லிச் சென்றவன் இன்னும் வரவில்லை. அவன் வருவதற்கான எந்தத் தகவலும் அவளுக்குக் கிடைக்கவில்லை. அவன் முகம் பார்த்தால்தான்

இறுதி அத்தியாயம் Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!