அத்தியாயம் – 1
அத்தியாயம்- 1 மெத்தையில் இருந்து கண்விழித்தவளுக்கு தலைவலி அதிகமாகவே இருந்தது. எழுந்து அமர்ந்தவள் தலையை இருக்கரத்தாலும் தாங்கிக் கொண்டு இருக்கால்களிலும் கைகளை அழுத்தியபடி அப்படியே குனிந்து இருந்தவளுக்கு மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் சிந்தியது. கலங்கிய நயனங்களோடு இமைகளை திறந்தவள் நேத்திரத்தில் முதலில் விழுந்தது என்னவோ அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த புது மஞ்சள் கயிற்றில் தான். அதை பார்க்க பார்க்க அவளுக்குள் ஆத்திரம் பல மடங்கு அதிகரித்தது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் வலுக்கட்டாயமாக […]
