April 2026

அத்தியாயம் 16

அடுத்த நாள் காலையில் அலுவலகம் வந்த ஆதி யாழினிக்கு நிறைய கட்டளைகள் பிறப்பித்தான். “யாழினி நியூ சைட்க்கு ஆர்டர் பண்ண திங்க்ஸ் வந்திடுச்சா?” “வந்திடுச்சி சார்“ “சரி. மேகஸின்ஸ்ல ஆட் கொடுங்க.ஓகே?. பில்லிங் அன்ட் பேக்கிங் புரோசஸ் அன்ட் டிரைவர்ஸ். இது ஒரு ஆட் கொடுங்க. தென் அனதர் இன்டர்வியூ ஃபார் கிராஜூவேட்ஸ். கொடுத்துட்டு இன்ஃபார்ம் பண்ணுங்க யாழினி“ “சரி சார்“ “நம்ம இது வரையும் ஆர்டர் பண்ணது கரெக்டா டெலிவர் பண்றாங்களானு   ஃபாலோ பண்ணுங்க“ “இப்போ நானும், விஷ்ணுவும் நம்ம நியூ சைட்க்கு போய் பாத்திட்டு வந்தறோம்” என்று கிளம்பினார்கள். ஆதியும், விஷ்ணுவும் அவர்கள் வேலை நடக்கும் சைட்டுக்கு சென்றார்கள். அது டிமார்ட்டின் வொர்க்வேர் ஹவுஸாக தயாராகி கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 2.5 லட்சம் சதுரடியில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருந்தது. ஆதி தனது கம்பெனியின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு இப்போதில் இருந்தே அதற்கான வேலைகளை ஆரம்பித்திருந்தான். ஆதி ஒவ்வொன்றாக கவனித்து கொண்டிருக்க விஷ்ணு ஏதோ யோசனையிலேயே இருந்தான். அதை கவனித்த ஆதி “மச்சான் என்னாச்சுடா?” என்று விசாரிக்க “மச்சி நேத்து நல்லா தான இருந்த?. அப்றம் ஏன்டா திடீர்னு மூட் ஆஃப் ஆன?” என்று கேட்க ஆதியின் முகம் இறுகியது. “அதப் பத்தி உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் கிடையாது. நீ என்கிட்ட எல்லாமே சொல்றியா என்ன?” “ஆதி…” அவனது கேள்வியில் திடுக்கிட்டான். “நீ கரெக்டா இரு. நானும் கரெக்டா இருக்கறேன்” என்று ஆதி அழுத்தமான குரலில் கூறினான். விஷ்ணு ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாய் நின்றான். “மச்சி அந்த டெண்டர் என்னாச்சு?” “இன்னைக்கு என்னனு தெரிஞ்சிரும்டா“ “நா சொன்ன மாதிரி தான அனுப்பின?” “ஆமா ஆதி“ “ஓகே. பாக்கலாம். இன்னைக்கு என்ன நடக்கும் போகுதுனு நான் ஆவலா இருக்கேன்“ “மச்சி” என்றவனை பார்த்து கண் சிமிட்டினான்.                          *********** வசி ராஜை பார்க்க சென்றபோது அவன் வசியின் மீது ஏக கோபத்தில் இருந்தான். “வசி நான் என்ன சொன்னேன்?. நீ என்ன பண்ணி வெச்சிருக்க?” “ஜி நான் நீங்க சொன்னது எல்லாமே பண்ணேன் ஜி“ “எங்க எல்லாம் பண்ணீங்க?. அதான் சரியா தப்பா பண்ற தானே?” “ஜி கூல்.நான் சூப்பர் ஐடியா வெச்சிருக்கேன். அது வொர்க் அவுட் ஆகும்” என்றவன் அதை பற்றி விவரிக்க அதை கேட்ட ராஜின் முகம் பிரகாசமானது. “டன்” என்றபடி சந்தோஷத்துடன் ராஜ் சென்றான். […]

அத்தியாயம் 16 Read More »

அத்தியாயம் 15

யாழினி வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தவளின் கண்களில் திருப்பிய பக்கமெல்லாம் ஆதியின் முகமே காட்டியது. ஆதியின் அதிரடியான செயலில் வியப்பில் ஆழ்ந்து கொண்டிருந்தவளுக்கு திடீரென்று கேட்ட செல்போனின் சங்கீதம் அவளை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தது. மித்ரா கைபேசியில் அழைத்திருந்தாள். “சொல்லுடி. என்ன?” “அண்ணா இந்த வீக் எண்ட் பிக்னிக் போறோம்னு சொன்னாங்களேடி. அங்கிள் கிட்ட எதும் கேட்டியா?” “ச்சே… இல்லடி. மறந்திட்டேன்“ “நீ கேட்டு சொல்லு யாழி. நீ பர்மிஷன் வாங்கினா தான் நான் பர்மிஷன் வாங்க முடியும்“ “டோன்ட் வொர்ரி பேபி. டேடி இருக்காங்கல்ல. நான் கேட்டுட்டு சொல்றேன். ஓகேவா?” “ஓகே” என்று போனை வைத்தவள் அதை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஆதி யாழினியையும், மித்ராவையும் அழைத்தவன் அலுவலகத்தில் அந்த வார இறுதியில் பிக்னிக் அரேன்ஜ் செய்திருப்பதாக கூறினான். என்ன சொல்லி அனுமதி கேட்பது என்று சிந்தித்து கொண்டிருக்கும்போது குணசேகரன் வந்தார். “என்னடா… என்ன யோசனை?” “ஒண்ணும் இல்ல டாடி” என்றவள் “டாடி ஆஃபிஸ்ல பிக்னிக் அரேன்ஜ் பண்ணிருக்காங்க. போகட்டுமா டாடி?” “எந்த பிளேஸ் மா?” “கோனா… சம் திங் லைக் தட் டாடி“ “போயிட்டு வாடா” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போது “இப்ப எதுக்கு உனக்கு பிக்னிக்?” என்று கேட்டு கொண்டே மாலதி வந்தார். “ம்மா… சும்மா இரும்மா… வொர்க் போனதுல இருந்து எங்கயும் போறதில்ல. அப்பா சொல்லுங்கப்பா” என்று சிணுங்கினாள். “மாலு அவ போய்ட்டு வரட்டுமே. விடு” என்றவர் யாழினியிடம் போக அனுமதி வழங்கினார். அவரை சந்தோஷத்துடன் கொஞ்சியவள் மித்ராவிற்கு போன் செய்து பேசிவிட்டு அவளது குடும்பத்தாரிடமும் அனுமதி கேட்டவள் அவர்கள் அனுமதி கொடுத்த சந்தோஷத்தில் அன்று காலையில் இருவரும்  கிளம்பினர். விஷ்ணு போன் செய்து ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு இருவரையும் வர சொன்னான். தோழிகள் இருவரும் அந்த நிறுத்தத்தில் பேசி கொண்டிருக்கும் போது அவர்கள் அருகில் ஒரு கார் இடிப்பது போல் வேகமாக வந்து கிரீச்சிட்டு நின்றது. கார் நின்ற வேகத்தில் தோழிகள் இருவரும் பயந்து போய் பார்க்க, விஷ்ணுவோ ஆதி நிறுத்தியதில் அதிர்ந்து போய் திட்ட ஆரம்பித்தான். “மச்சி என்னாச்சு?. ஏன் இப்டி ஸ்டாப் பண்ண?” “டேய்… சொல்லுடா” என்று விஷ்ணு கேட்டு கொண்டிருக்க ஆதியோ சிலை போல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். “டேய்… மச்சான்” என்று ஆதியை விஷ்ணு உலுக்க ஆதி கனவில் இருந்து விழிப்பவன் போல் விழித்தான்.

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

விஷ்ணுவின் மடியிலேயே படுத்து தூங்கிய ஆதி விடிந்த பின் தான் கண் விழித்தான். தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் குழம்பியவன் விஷ்ணுவின் மடியில் படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டான். விஷ்ணுவோ ஆதியின் முதுகில் கை வைத்தபடி கட்டிலில் அமர்ந்தவாறே தூங்கி கொண்டிருந்தான். ‘இவன் ஏன் இப்டி தூங்கறான்?. நம்ம எப்படி இவன் மடியில படுத்தோம்?’ என்று யோசித்தவனுக்கு நேற்று நடந்தது அறைகுறையாக ஞாபகம் வந்தது. ஆதியின் அசைவை உணர்ந்த விஷ்ணு கண் விழித்தான். “மச்சான் என்னடா?” “சாரி மச்சி. நேத்து நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேன். நேத்து என்னனே தெரியல. ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தது” என்று ஆதி உள்ளே போன குரலில் விளக்கினான். “ஆதி… இப்டி பேசற மாதிரி இருந்தா என்கிட்ட பேசாத. ஏன்டா சாரி கேட்டு அந்நியப்படுத்தற?. என்னோட அப்பா, அம்மா, அண்ணா, தம்பி எல்லாமே நீ தான்டா. ப்ளீஸ்… இனி இந்த மாதிரி பேசாத” என்று கோபத்தில் ஆரம்பித்தவன் ஆதங்கத்தில் முடித்தான். “சரிடா. இன்னைக்கு நிறைய வேல இருக்கு. சீக்கிரம் கிளம்பணும்“ “ஓகே மச்சி. நீ ஃபர்ஸ்ட் ப்ரெஸ் ஆகிட்டு வா” என்றவன் அப்படியே சிறிது நேரம் படுத்தான். சிறிது நேரம் ஏதேதோ யோசித்து கொண்டிருந்தவனுக்கு மித்ராவை பற்றிய ஞாபகம் வந்தது. அவள் நினைவில் அவனுக்கு புன்னகை பூத்தது. அதை பார்த்த ஆதி, “மச்சி காலைலயே கனவா?” என்று கேட்டவனை பார்த்தவன் “ஒண்ணுமில்ல மச்சி” என்று சிரித்து கொண்டே வெளியேறினான். சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பியவர்கள் அலுவலகத்தை அடைந்தார்கள். ஆதி தனது அறைக்கு சென்றவுடன் யாழினியை கூப்பிட்டு மளமளவென்று வேலைகளை முடிக்க சொல்லி உத்தரவிட்டான். சிறிது நேரம் வேலை பார்த்தவன் விஜயை பார்க்க விஷ்ணுவையும் அழைத்து சென்றான். ஆதி மித்ராவை கடந்து செல்கையில் சிநேகமாக புன்னகைக்க அவளும் புன்னகைத்தாள். விஷ்ணுவை பார்த்ததும் உடனே தலைகுனிந்து கொண்டாள். விஷ்ணு நமுட்டு சிரிப்புடன் அவளை பார்த்தவாறு சென்றான். விஜயை  ஹாஸ்பிடலில் சந்தித்ததும் அவனை நலம் விசாரித்தார்கள். பிறகு விஷ்ணு ஏதோ தோன்ற சில கேள்விகள் கேட்டான். அதனை குழப்பமாக ஆதி கவனித்து கொண்டிருந்தான். சிறிது நேரம் அவனிடம் பேசியவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். “மச்சி என்னடா அவன்கிட்ட கேட்டுட்டு இருந்த?” “போன் வந்ததுனு சொன்னாங்கல்ல… அதான் விசாரிச்சேன்டா. ஏதாவது டிரேஸ் பண்ண முடியுமானு“ “ஓ… அப்டியா” என்றவன் “ஒருத்தன் நம்ம கஸ்டடில சிக்கிருக்கான்டா” என்றவுடன் விஷ்ணு அதிர்ச்சியாக அவனை பார்த்தான். “மச்சி என்ன சொல்ற?”

அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 13

மித்ரா அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில் யாழினி தேவ்வுடன் அலுவலகம் வந்தாள். யாழினியை பார்த்தவுடன் மித்ரா வேகமாக வந்தாள். “யாழி… ஏன்டி இவ்ளோ லேட்?. உனக்கு எத்தன டைம் கால் பண்றது?” என பதட்டத்துடன் திட்ட ஆரம்பித்தாள். “வெயிட் பண்ணுடி. நான் வந்து சொல்றேன். அண்ணாவ பாத்திட்டு வந்தறேன்” என்றவள் விஷ்ணுவின் அறையை நோக்கி சென்றாள். யாழினி விஷ்ணுவின் அறைக்குள் நுழையும் போது அங்கு தேவ்விடம் விஷ்ணு பேசி கொண்டிருந்தான். அவளை பார்த்தவுடன் “என்னமா?. ஆர் யூ ஓகே?. தேவ் ஏதேதோ சொல்றாங்க… ஆதி வேற இன்னும் காணோம்?” என்று படபடவென்று கேள்விகளை அடுக்கினான். “அண்ணா ரிலாக்ஸ். ஒண்ணும் இல்ல. நான் சேஃப் தான்“ “தேவ் ஆதி எங்க போனான்?” “அவன் விஜய பாத்திட்டு வரேன் போனான் விஷ்ணு. ஓகே. சரி  வொர்க் பாருங்க” என்றவன் அறையை விட்டு வெளியேறினான். “என்னடா?. என்னாச்சு?” என்று விஷ்ணு திரும்பவும் விசாரிக்க யாழினி நடந்ததை கூறினாள். “அவரு விஜய பாத்திட்டு வரேனு போனாருண்ணா. ஹீ கேன் சால்வ் திஸ்“ “என்னமா ரெக்கமெண்டேஷன்லா பலமா இருக்கு?” “ஹாஹா… அது அப்படி தான். அண்ணா இந்தாங்க பென் டிரைவ். இதுக்காக தான் அவனுங்க அவ்ளோ டிரை பண்ணானுங்க” என்றவள்  “அண்ணா எதுக்கு இப்படி பண்றாங்கண்ணா?. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?” விஷ்ணு சிறிது நேரம் யோசித்தவன் “பிஸினஸ்னு இருந்தா போட்டி இருக்க தானே செய்யும். நான் பாத்துக்கறேன்மா” என்றவன் “தனியா எங்கயும் போக வேணாம் யாழினி” என்று கவலையான குரலில் கூறினான். “டோண்ட் வொர்ரி அண்ணா” என்றவள் “மித்ரா தேடுவாண்ணா. அவ வர்றப்பவே திட்ட வந்தா. மீ எஸ்கேப்” என்றவளை பொறாமை பொங்க பார்த்தான். அவனது பார்வையை கவனித்தவள் “அண்ணா ஏதோ கருகற வாசம் வரல?” என்று விஷ்ணுவை யாழினி கலாய்க்க அதில் கோபப்படுவது போல அவளை அடிக்க கை ஓங்கவும் தேவ் கரெக்டாக உள்ளே வந்தான். “என்ன விஷ்ணு வொர்க் பண்ணாம என்ன பண்றீங்க?” என்று விஷ்ணுவை கேட்டவன் யாழினியை பார்த்து “அல்ரெடி வந்ததே லேட். உங்களுக்கு வொர்க் பாக்கணும்னு ஐடியா இல்லையா?” என்றவனை விசித்திரமாக பார்த்தாள். “ஹலோ பாத்திட்டே இருந்தா என்ன அர்த்தம்?.

அத்தியாயம் 13 Read More »

அத்தியாயம் 12

அதிதேவ் ஆஃபிஸ் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. “யாழினி பிரஸ் மீட்டுக்கு சொல்லீட்டிங்களா?” “எஸ் ஸார்“ “மீட்டிங்க்கு எல்லாம் ரெடியா இருக்கா?” “எஸ் ஸார்“ “எல்லாத்துக்கும் இன்ஃபார்ம் பண்ணீட்டிங்களா?” யாழினி பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள். கணிணியை நோண்டி கொண்டிருந்தவன் பதில் வராததால் அவளை பார்த்தான். அவளோ ஆதியை முறைத்து கொண்டிருந்தாள். “யாழினி கேட்டுட்டு இருக்கேன்ல… பதில் சொல்லாம என்ன பண்றீங்க?” அவளோ “சார் நீங்க எல்லாம் லிஸ்ட் பண்ணி சொல்லுங்க. ஏன்னா உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் எஸ் தான். சோ நீங்க ரெடியா?” என்று அசராமல் கேட்டாள். “அப்டினா கிளம்பலாம்” என்று அவன் சொல்லும் போதே விஷ்ணு வந்தான். “மச்சான் எல்லாம் ரெடிடா. போலாமா?” என்று கேட்க யாழினி அவனை பார்த்து முறைத்தாள். “என்னமா?” “ஒண்ணும் இல்லணா“ அவர்கள் வெளியே கிளம்பும்போது தேவ் எதிரில் வர “தேவ் நீ ஆஃபிஸ கவனிச்சிக்கோ. நாங்க போயிட்டு வந்தறோம்“ “ஓகே ஆதி. ஆல் த பெஸ்ட்” என்று புன்னகைத்தபடியே கூறினான். அவர்கள் மூன்று பேரும் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றார்கள். அதிதேவ் கம்பீரமான புன்னகையுடன் நடக்க அவனுக்கு இரு புறமும் விஷ்ணுவும், யாழினியும் நடந்தார்கள். நிருபர்கள் வரிசையாக அமர்ந்திருக்க அவர்கள் முன்னே அமர்ந்தான். “சார் எதுக்காக நீங்க கூப்டிருக்கீங்க?. நீங்க என்னவோ அறிவிக்க போறீங்கனு அனௌன்ஸ் பண்ணீங்களே?. என்னனு தெரிஞ்சிக்கலாமா?” “வெயிட். அதுக்கு தான நான் கூப்ட்ருக்கேன்“ என்று தனது பளீர் புன்னகையுடன் கூறினான். “நாங்க இன்னைக்கு புதுசா ஒரு சைட் லாஞ்ச் பண்ணிருக்கோம். இட்ஸ் ஜஸ்ட் லைக் புக் ஷாப்“ “சார்… புக் ஷாப்பா?” என நக்கலான குரலில் கேட்டவனை கவனித்தவன் கண்களாலேயே எரித்தான். அதில் அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. “யா… இட்ஸ் புக் ஷாப்… பட் இதுல போக போக நிறைய மாற்றங்கள் வரும்“ “சார் சைட் பேர் என்ன சார்?” “டீ மார்ட்” என்றவன் யாழினியை பார்க்க அவள் அந்த வெப்சைட்டை அனைவருக்கும் காண்பித்தாள். அதனை பார்த்தவர்கள் திகைத்தார்கள். அவற்றில் நிறைய அம்சங்கள் இருந்தது. “ஓகே கைஸ். தேங்க்ஸ் ஃபார் கம்மிங்” என்றவன் சட்டென முடித்து கொண்டான். ஆதி வெளியே வரும்போது ஒரு நிருபர் அவனிடம் “சார் நீங்க மினிஸ்டர் காளியப்பனுக்கு எதிரா ஸ்டே வாங்கினதா சொன்னாங்களே?. அது உண்மையா?”

அத்தியாயம் 12 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!