அத்தியாயம் 11
ஆதி அலுவலகத்திற்கு வந்தவுடன் யாழினி அவனிடம் பேப்பர்களை காட்டினாள். அவற்றில் ஒரு சில திருத்தங்கள் சொன்னவன் அடுத்த நாள் எல்லாவற்றையும் ரெடியாக இருக்கும்படி பார்த்து கொள்ள சொன்னான். இதற்கிடையில் யாழினி அவள் ஆர்டர் செய்த புக் பார்சல் வீட்டுக்கு வந்தவுடன் அதை எடுத்து கொண்டு அலுவலகம் வந்தாள். “சார்“ “என்ன யாழினி?” “ஆர்டர் பண்ண புக் பார்சல் நேத்து வந்தது” என்றபடி பார்சலை கொடுத்தாள். “இங்க வைங்க. விஷ்ணு வரட்டும்” என்றவன் விஷ்ணுவிற்கு போன் செய்தான். “டேய் வாடா” என்றவன் அந்த பார்சலை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான். அதில் முகவரி,டெலிவரி நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது. “எப்போ ஆர்டர் பண்ணீங்க யாழினி?” “சன்டே சார்“ “நேத்து தான் வந்தது இல்லையா?” “எஸ் ஸார்“ ஆதி யாழினியிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது விஷ்ணு வந்தான். “என்னடா?” “ஆர்டர் பண்ண சொன்ன புக் வந்துடுச்சி. பாரு” என்றபடி பார்சலை கொடுத்தான். அது ஒரு அட்டையில் மடித்து பார்சலாக வைக்கப்பட்டு இருந்தது. பார்சலின் நடுவில் கம்பெனியின் பெயரை சுற்றி ஒட்டி இருந்தார்கள். அட்டையை பிரித்தவுடன் அதற்கான பில் உள்ளே இருந்தது. புத்தகம் பாலிதின் கவரால் சுற்றப்பட்டு இருந்தது. “டேய் ஆதி. . பாருடா எப்டி பேக் பண்ணிருக்காங்கனு!” “ஆமாடா. அதுக்கு தான் உன்ன கூப்டேன்” என்றவன் யாழினியிடம் “மெஸேஜ் ஏதாவது வந்ததா?” என்று விசாரித்தான். “ஆமா சார். எங்க இருந்து வந்தது, எப்படி டெலிவர் ஆகுதுனு எல்லாமே மெஸேஜ்ல வந்தது“ “டேய் பாத்தியா?. நம்மலும் பண்றப்ப இதுலாம் பண்ணனும்” என்று விஷ்ணுவிடம் சொன்னான். “ஓகேடா” என்றவனிடம் “தேவ் எங்க?” என்று விஷ்ணுவிடம் கேட்டான். “அவன் வொர்க் பாத்திட்டு இருப்பான். ஏன்டா?” சிறிது நேரம் யோசித்தவன் ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்டினான். “ஓகே யாழினி. இன்னைக்கு நான் சொன்ன வேல எல்லாம் முடிச்சிடுங்க. அதுக்கு முன்னாடி நம்ம கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேல இருக்கு“ ‘வெளியேவா?. இவனோடயா?’ என்ற யோசனையுடன் அவனை பார்த்தாள். “என்ன யோசனை?” “நத்திங் சார்“ “கொஞ்சம் நேரம் கழிச்சி கிளம்பலாம். வொர்க் பாருங்க“ […]
