April 2026

அத்தியாயம் 20.2

“ஆதி அழாதடா. நம்ம என்னனு கன்பார்மா கேட்டுக்கலாம்டா. நீ ஃபீல் பண்ணாத. அப்பா நம்மோட தான் இருப்பார்” என்று சமாதானப்படுத்தினான். ஆதி அவனை நிராசையாக பார்த்தான். “அழக்கூடாது ஆதி” என்று அவனை ஆறுதலாய் அணைத்தான். விஷ்ணு விமான கம்பெனிக்கு போன் செய்து விசாரிக்க அந்த செய்தி உறுதி என்றே தெரிந்தது. ஆதியும், விஷ்ணுவும் ஆதியின் வீட்டுக்கு போகும் போது லலிதா அங்கே அழுது கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் அவன் தம்பி அமைதியாக இருந்தான். ஆதி அவர்களிடம் எப்போதும் ஏதும் வைத்து கொள்வதில்லை. இப்போது அங்கே செல்ல “வீட்ட விட்டு வெளிய போடா அனாதை பயலே. இத்தன நாள நல்லா இருந்தாரு… இவன் பிஸினஸ் பாக்கறேனு உள்ள வந்து அவங்க அப்பாவ கொன்னுட்டான்” என்று எல்லார் முன்னும் ஆதி பழி போட்டாள். “டேய் வெளிய போடா” என்று வசுதேவ் துரத்த ஆதியின் ரௌத்திர பார்வையில் ஒரு அடி தள்ளி நின்றான். விஷ்ணு வசுதேவிடம் சண்டைக்கு போக அவனை தடுத்தவன் அந்த வீட்டை விட்டு கிளம்பினான். ஆதி மௌனமாக கார் ஓட்டி கொண்டு வந்தான். அந்த மௌனம் விஷ்ணுவுக்கு பீதியை கிளப்பியது. விஷ்ணு பேசலாம் என்று நினைக்க ஆதியே பேச ஆரம்பித்தான். “ மச்சி இங்க இருந்தா மூச்சு முட்டியே செத்துடுவேன் போல இருக்கு. நான் ஊட்டிக்கு போகட்டுமாடா?” “ஏன்டா மச்சான் இப்டி பேசற?. உனக்கு நான் இருக்கேன்டா. இப்படி பேசாத. நீ போய்ட்டு வா. நானும் வரட்டுமா?” “இல்லடா. இங்க ஆஃபிஸ் பாக்கணும். நீ இங்க என்ன நடக்குதுனு எனக்கு போன் பண்ணனும். சோ நீ இங்க இருக்கணும்டா“ “ஓகேடா. நான் பாத்துக்கறேன்” என்ற விஷ்ணு அவனை ஊட்டிக்கு அனுப்பினான். ஆதிக்கு ஒவ்வொன்றாய் நினைக்கும்போது கண்ணீர் பெருகியது. அதே சமயம் கோபமும் வந்தது. அவன் தனக்குள் இறுகி போய் அமர்ந்திருந்தான். அப்போது யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க அவன் திரும்பி பார்த்தான். ஒரு பெண் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள். அவனை பார்த்ததும் நின்றவள் “சார்… ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. என்ன துரத்திட்டு வராங்க” என்று அழுது கொண்டே சொன்னவளை புழுப்போல பார்த்தான். “என்ன நடிக்கிறயா?. அவனும் உங்க குரூப் தான?. உனக்கு தேவ பணம் தான?. இந்தா” என்று பர்சில் இருந்த பணத்தை எடுத்து நீட்ட அவளோ அவன் கண்களை ஊடுருவுவது போல் பார்த்தவள் சட்டென அவன் பணத்தை வாங்கியவுடன் அவன் அவளை ஏளனமாக பார்க்க அவளோ அதை அவன் முகத்தில் விசிறி எறிந்தாள். பின்பு அவனை ஒரு முறை பார்த்தவள் சட்டென அங்கிருந்து ஓடினாள். அவனை அந்த பார்வை ஏதோ செய்தது. ஆனால் மேற்கொண்டு அதை பற்றி யோசிக்காமல் பணத்தை எடுத்து கொண்டிருக்கும் போது இன்னும் இருவர் அந்த பக்கமாக ஓடினர். […]

அத்தியாயம் 20.2 Read More »

அத்தியாயம் 20.1

சுற்றிலும் மரங்கள் சூழ்ந்திருக்க அந்த மலை பிரதேசத்தின் இரவு நேரக் குளிரினை கூட உணர முடியாமல் அதிதேவ் இறுகி போய் படுத்திருந்தான். ஆதியின் மனம் அவனது அப்பாவின் இழப்பை ஏற்று கொள்ள முடியாமல் துவண்டு போயிருந்தது. அதிதேவ் – ஜெயதேவுக்கும் கயல்விழிக்கும் பிறந்த மகன். அவனது அம்மா அதிதேவ் பிறந்த போது காலமானார். கயல்விழி அதிதேவின் முதல் மனைவி. ஜெயதேவும் கயல்விழியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கயல்விழி உடனான காதலில் ஜெயதேவின் வீட்டினருக்கு உடன்பாடு இல்லாததால் அவர்களது காதலை எதிர்த்தனர். ஜெயதேவ் அவரது வீட்டினரை எதிர்த்து திருமணம் செய்ததால் வீட்டை விட்டு வெளியேறினார். முதல் இரு வாரங்கள் தம்பதியர் சந்தோஷமாக களித்தனர். ஜெயதேவ் தனது நண்பன் சுரேஷின் உதவியால் வேலையில் சேர்ந்தார். நாட்கள் இறக்கை கட்டி செல்ல கயல்விழி கர்ப்பம் ஆனார். ஜெயதேவ் அவரை கண்ணும், கருத்துமாக பார்த்து கொண்டார். கயல்விழி மன்த்லி செக்கப்புக்காக ஹாஸ்பிடல் போன போது அவருடைய பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மருத்துவர் கூறினார். அதை கேட்ட கயல்விழி அதிர்ந்து போனார். ஆனால் ஜெய்யிடம் இதை பற்றிய எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தார். பிரசவம் நெருங்க நெருங்க அவருக்கு பயம் ஏற்பட்டது. கடைசியில் கயல்விழிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் போது டாக்டர் சொன்ன செய்தியை கேட்டு ஜெய் மனம் உடைந்தார். கயல்விழியின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர் கூறவும் ஒன்றும் புரியாமல் ஜெயதேவ் திணறினார். பிரசவத்திற்கு சென்ற கயல்விழி பிணமாக தான் வந்தார். அவரால் கயல்விழி இறந்ததை நம்ப முடியவில்லை. அதிலிருந்து வெளிவராமல் தவித்தவரை அவரது குடும்பம் அரவணைத்தது. ஜெய் கயல்விழியின் எதிர்பாராத இழப்பை ஏற்று கொள்ள முடியாமல் திணறினார். நாட்கள் அதன் போக்கில் செல்ல அதிதேவ் அவன் பாட்டியிடம் வளர்ந்தான். முதலில் எதிலும் கவனம் செல்லாமல் இருந்தவர் பின்னர் மெல்ல மெல்ல தனது தொழிலில் கவனம் செலுத்தினார். தமயந்திக்கு அவரது மகன் இளம் வயதில் இப்படி இருப்பது மிகவும் வேதனையாக இருக்க அவர் தனது மகனை இன்னொரு திருமணம் செய்ய வற்புறுத்தினார். ஆனால் ஜெயதேவ் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க அதிதேவின் ஐந்தாவது வயதில் அன்னையின் வேதனை தாங்காமல் திருமணத்திற்கு சம்மதித்தார். லலிதா கே.என் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வாரிசு. இவளது பெற்றோர்கள் பிஸினஸில் இருப்பதால் இவளை யாரும் அதிகம் கண்டு கொள்ளவில்லை. தான் தோன்றித்தனமாக வளர்ந்தாள். எப்போதும் டிஸ்கோத்தே, பப், பார்ட்டி என்று இருப்பவள். அவளுக்கு ஏற்கனவே ஜெயதேவின் மீது ஒரு கண் இருந்தது. அவள் ஒரு கணக்கு போட்டு காய் நகர்த்த யோசிக்க ஜெயதேவ் அவள் கண்களில் மண்ணை தூவினார். இவளது எண்ணம் பற்றி அவளது நட்பு வட்டாரங்களுக்கும் தெரியுமாதலால் ஜெய்யின் திருமண செய்தியால் லலிதாவிற்கு தலைகுனிவாக ஆகி விட்டது. அப்போதே அவளுக்கு ஜெயதேவின் மேல் கோபம் இருந்தது. இப்போது திரும்பவும் ஜெய்க்கு திருமணம் நடக்கப் போவதை தெரிந்ததும் கெட்டியாக பிடித்து கொண்டாள். ஆனால் அவள் இலவச இணைப்பாக அதிதேவை எதிர்பார்க்கவில்லை. இப்போதும் ஜெய்யால் அவமானம் அடைந்ததை போல் உணர்ந்தாள். அந்த கோபம் பழிவெறியாக மாறி ஏதும் அறியாத குழந்தையின் மேல் சென்றது. ஜெய்யின் முன்னால் நல்ல விதமாக நடந்து கொள்பவள் அவர் சற்று அப்பால் நகர்ந்ததும் குழந்தையை கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். திருமணம் முடிந்தவுடன் வந்த முதல் நாளில் “ஆதி நம்மோட குழந்த. நமக்கு அவன் மட்டும் போதும்” என்று கூற அப்போதைக்கு ஒன்றும் பேசாமல் தலையாட்டியவள் மனதில் நெருப்பு எரிந்தது. கட்டிலில் ஆதி படுத்திருப்பதை பார்த்ததும் அவனை தூக்கி போடும் வெறி வந்தது. தனது மனதினை காட்டாமல் மறைத்து கொண்டவள் அமைதியாக படுத்தாள். என்ன செய்வது என்ற யோசனை செய்து கொண்டிருந்தவள் சிந்தித்து ஒரு முடிவெடுத்ததும் நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள். அடுத்த நாள் ஜெய் அருகில் இருக்கும் போது ஆதியை அன்பாக கொஞ்சினாள். ஆதிக்கு முதலில் இருந்தே என்ன காரணம் என்றே தெரியாமல் அவளை பிடிக்காமல் போனது. அவன் சின்ன பையன் ஆதலால் தனது உணர்வுகளை மறைக்காமல் காட்ட ஜெய் அவன் மேல் கோபம் கொண்டார். இது லலிதாவுக்கு இன்னும் வசதியாக போனது. இவள் வயிறு முட்ட  சாப்பிட ஆதி சாப்பிட்டானா? இல்லையா?

அத்தியாயம் 20.1 Read More »

அத்தியாயம் 19

அந்த வேர்ஹவுஸ் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அதிதேவின் மேற்பார்வையில் கீழ் வந்த பின்னால் அவர்களுக்கு ஆர்டர்கள் அதிகரித்திருந்தன. அதிதேவின் ஊக்குவிப்பினால் அவர்கள் உற்சாகமாக வேலை செய்தார்கள். அவன் அனைத்து ஊழியர்களிடமும் காட்டும் அக்கறையினால் அவர்கள் உள்ளம் நெகிழ்ந்தார்கள். ஒருவர் புத்தகம் எடுத்து தர இன்னொருவர் புத்தகத்தை பாலிதீன் கவர் செய்து அவற்றை அட்டை பெட்டிக்குள் போட்டு பேக் செய்தார்கள். இன்னொருவர் அவர்களின் முகவரி ஒட்டியவுடன் அதை குறித்து கொண்டார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுக்க பேக்கிங் துரிதமாக முடிந்து ஆர்டர் சீக்கிரம் கஸ்டமர்களின் வீட்டுக்கு சென்று அவர்களின் நன்மதிப்பை அதிகரிக்க செய்தது. இதனால் நாளுக்கு நாள் அவனது சைட்டில் புத்தகங்கள் ஏராளமாக விற்றன. அப்போது ஒரு நாள் அவனது போனுக்கு ஒரு கால் வந்தது. அதை பேசியவுடன் மிகுந்த சந்தோஷமாக விசிலடித்து கொண்டிருந்தான். அதை கவனித்து கொண்டிருந்த விஷ்ணு “என்னடா?” என்று கேட்டான். “டேய் நம்ம கம்பெனில இன்வெஸ்ட் பண்றோம்னு சொல்லி இருக்காங்கடா” என்று சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டான். “சூப்பர் ஆதி” என்றவன் அவனை புன்னகையுடன் அணைத்து கொண்டான். “சரிடா. ஆஃபிஸ் போகணும். வா” என்றவன் விஷ்ணுவுடன் அலுவலகம் கிளம்பினான். இருவரும் காரில் இருந்து இறங்கியதும் அதிதேவ் இதழ்களில் புன்னகையுடன் தனது அலுவல் அறைக்கு வந்தான். ‘இதென்னடா நம்ம ஆதிவாசி இவ்ளோ புன்னகையோட வரான்?’ என்று யாழினி யோசனையுடன் பார்த்தாள். “யட்சிணி என்ன பாக்கற?” “யட்சிணியா?. அப்டி எல்லாம் யாரும் இங்க இல்ல சார்“ “நீ தான் யட்சிணி” என்றவனை விஷ்ணு ஆச்சரியமாக பார்க்க அவனை பார்த்து ஆதி கண் சிமிட்டினான். “அண்ணா உங்க பாஸ்க்கு என்னாச்சு?. அதிசயமா கோல்கேட் விளம்பரத்துக்கு வர மாதிரி வராரு“ “சாரோட கம்பெனில இன்வெஸ்ட் பண்ண ரெடியா இருக்காங்கனா இப்டி தான் இருப்பாரு?” என்று திரும்ப விஷ்ணு கேள்வி கேட்டான். “எங்களுக்கு ட்ரீட் எதும் இல்லயா சார்?” என்று யாழினி கேட்க “ட்ரீட்டா?” என்று யோசித்தவன் “பார்ட்டி அரேன்ஜ் பண்ணனும். டேய் யாழினி கூட இருந்து பாத்துக்கோ” என்றான். இருவரும் சரி என்று தலையாட்டினார்கள். “உன்னால மேனேஜ் பண்ண முடியுதா யாழினி?” என்று அக்கறையாக விசாரித்தான். “நோ ப்ராப்ளம் சார்” என்றவள் “ஆனா…” என்று ஆரம்பித்த போது தேவ் உள்ளே வந்தான். ஆதியை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத தேவ் திகைத்து நின்றான். “வாடா தேவ்” என்று ஆதி வரவேற்க அதில் சுதாரித்தவன் “ஆதி எப்போ வந்த?. ஏன்டா என்கிட்ட பவர் கொடுக்கமாட்டியா?. உனக்கு என் மேல நம்பிக்கையில்லையா?” என்றவனை கூர்ந்து பார்த்தவன் “அப்டி இல்லடா. அவங்களுக்கு எல்லா டீடெய்ல்ஸூம் தெரியும். அதான்” என்று சமாதானப்படுத்தினான். “ஆதி இவங்க ஒவ்வொனுக்கும் ஏதோ குற்றவாளிய பாக்கற மாதிரி என்ன விசாரிக்கறாங்கடா”

அத்தியாயம் 19 Read More »

அத்தியாயம் 18

அதிதேவ் இரவு உணவுக்கான சமையலை செய்து கொண்டிருந்தான். விஷ்ணு அவனுக்கு உதவி செய்ய அவர்கள் இருவரும் பேசி கொண்டே சமையலை முடித்திருந்தார்கள். ஆதி விஷ்ணுவுக்கும், அவனுக்கும் உணவு பரிமாறி விட்டு சாப்பிட ஆரம்பித்தான். விஷ்ணு உணவை அளந்து கொண்டிருந்தான். அதை கவனித்த ஆதி “மச்சி சாப்பிடு” என்றவனிடம் திடீரென்று ஞாபகம் வந்தவனாக “ஆதி அந்த டெண்டர் என்னாச்சுடா?” “ஏன்டா மிஸ்ஸாகுமா என்ன?” என்று ஒற்றை புருவம் உயர்த்தினான். அந்த செய்கையில் விஷ்ணுவின் முகம் தானாக மலர்ந்தது. “ஒழுங்கா சாப்பிடுடா. என்ன யோசிச்சிட்டிருக்க?” என்று ஆதி கடிந்தான். “டேய் நீ பண்றதெல்லாம் சாப்பிடணுமேனு நானே நொந்து நூடுல்ஸா இருக்கறேன். இதுல இவன் வெறும் நூடுல்ஸ் செஞ்சிட்டு இவன் அக்கப்போர் தாங்கலயே” என்றபடி விஷ்ணு சலித்து கொண்டான். “டேய்…” “ஏன் மச்சான்?” “என்கிட்ட அடி வாங்காம சாப்பிடு” என்று ஆதி விளையாட்டாய் சொல்ல விஷ்ணு அதற்கு மேல் ஏதும் பேசாமல் சாப்பிட்டான். பின் இருவரும் உறங்க செல்ல விஷ்ணு புரண்டு புரண்டு படுத்தபடி இருந்தான். அதை கவனித்தவன் விஷ்ணுவை தட்டி கொடுக்க அவனோ ஆதியின் மடியில் படுத்து தூங்க ஆரம்பித்தான். ஆதியோ ஒரு பெரு மூச்சுடன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அன்று அலுவலகத்தில் நடந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. யாழினியின் கேள்வியால் விஷ்ணு அதிர்ந்து நிற்க ஆதியோ கோபத்துடன் அவளை அடித்தான். இதை எதிர்பார்க்காத விஷ்ணு திகைத்து நின்றான். ஒரு சில நிமிடங்களில் சுதாரித்தவன் “யாழினி என்ன பேசற நீ?” என்று அதட்டினான். “டேய் அடிக்கறதா இருந்தா என்ன அடிடா. அவளுக்கு என்ன தெரியும்?” என்ற விஷ்ணுவின் கேள்வியில் ஆதியின் கண்கள் சிவந்த நிறத்தை காட்டியது. “ஜஸ்ட் ஷட் அப்” என்று ஆதி கத்த அதற்கு மேல் ஒன்றும் பேச தோன்றாமல் யாழினியை வெளியே கூட்டி சென்றான். யாழினியோ ஆதி அடித்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தாள். “யாழுமா… சாரிடா. ப்ளீஸ்” என்று அவளை சமாதானப்படுத்த அவள் இறுக்கத்தோடு அமர்ந்திருந்தாள். என்ன செய்வது என்று புரியாமல் தவித்தவன் மித்ராவை அழைத்தான். அதை கவனித்தவள் அவனிடம் இருந்து செல்லை பறித்து ஆஃப் செய்தாள். “யாழினி“ ஒரு நிமிடம் தன்னை நிதானப்படுத்தி கொண்டவள் “அண்ணா ஐ ஆம் ஓகே” என்றவளிடம் “நீ அவன் மேல கோபப்படாதேமா” என்று முடித்தான். “இனஃப் அண்ணா. என்ன கொஞ்ச நேரம் தனியா விடுங்க” என்றவளிடம் மௌனமாக வெளியேறினான். தனது அறைக்கு வந்து அமர்ந்தவனின் மனதில் சொல்லொணா வலி எழுந்தது. ஏனோ தன்னை அனைவரும் தவிர்க்கிறார்களோ என்ற யோசனை வந்தது. அந்த நினைப்பை தாங்க முடியாதவனாக மித்ராவிற்கு போன் செய்தவன் “பேபி” என்று வலி நிறைந்த குரலில் கூப்பிட்டான். அந்த குரல் அவளை ஏதோ செய்ய உடனே அவனை பார்க்க கிளம்பினாள். அவள் உள்ளே நுழைந்த போது விஷ்ணு எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

அத்தியாயம் 18 Read More »

அத்தியாயம் 17

அடுத்த நாள் காலையில் காளியப்பன் பேப்பர் படித்து கொண்டிருக்கும் போது அதில் இருந்த செய்தியை பார்த்து துணுக்குற்றார். அவரை பற்றிய ஒரு துணுக்கு செய்தி அதில் இடம் பெற்றிருந்தது. அவரது கன்ஸ்ட்ரக்ஸன் கம்பெனியின் பெயர் குறிப்பிட்டு கோர்ட்டில் ஸ்டே வாங்கியிருப்பதாக அமைச்சரின் பெயரை மறைமுகமாக குறிக்கப்பட்டு நக்கலடிக்கப்பட்டிருந்தது. அதை பார்த்தவர் வெகுண்டெழுந்து வினித்தை கூப்பிட்டார். “வினித் டேய்… வினித்“ “என்ன டாடி?. ஏன் கூப்பிடறீங்க?” “இவன் எந்த பத்திரிகைடா?. நமக்கு ஸ்டே வந்ததுலா போட்ருக்கான்“ “என்ன சொல்றீங்க?” என்றவன் அதிர்ச்சியுடன் வாங்கி அதை படித்தான். “டாடி இதென்ன உங்கள பத்தி ஒவ்வொரு டீடெயிலா வரும்னு போட்ருக்கான்“ “யார்டா இது?. எந்த பத்திரிக்கை?” “ஏதோ தேவன் குரல்னு போட்ருக்கு” என்றவன் உடனே கார்த்திக்கு போன் செய்தான். கார்த்திக்கை என்ன தான் அடித்து விரட்டினாலும் ஒரு கட்டத்தில் அவனின் கெஞ்சல் தாங்காமல் தனது கையாளாக வைத்து கொண்டான். “ஹலோ சொல்லுங்க சார்“ “டேய் தேவன் குரல் பத்திரிக்கை யாரோடதுனு டீடெய்ல் கேட்டு சொல்லு“ “தேவன் குரலா… புது பேரா இருக்கு“ “டேய் நான் அபிப்பராயம் கேக்கல. டீடெய்ல்ய்ஸ் கேட்டேன்“ “நான் என்கொயர் பண்ணிட்டு சொல்றேன் சார்“ வினித் கார்த்தியுடன் பேசி கொண்டிருந்த போது காளியப்பன் வினித்தை முறைத்து கொண்டிருந்தான். “என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?” “அவன் என்னத்த கொண்டு வருவானு அவன்கிட்ட கேக்க சொல்லிட்டு இருக்க?. வேற ஆளே கிடைக்கலயா?” “டென்ஷன் ஆகாதீங்க டாடி” என்றவன் யோசனையோடே அமர்ந்திருந்தான்.                                       ******* ஆதியும், விஷ்ணுவும் அலுவலகத்தில் நுழைந்த போது யாழினி ஆதியை முறைத்தபடி அமர்ந்திருந்தாள். “யாழினி என்னென்ன செட்யூல் சொல்லுங்க“ அவளோ எதுவும் கூறாமல் அமர்ந்திருந்தாள். “யாழினி கேக்கறேன்ல. பதில் சொல்லு” என்ற அவனுடைய கர்ஜனையில் பதில் கூறினாள்.   அவளுக்கு சில இன்ஸ்ட்ரக்ஸன்களை கொடுத்தவன் தனது வேலையை கணிணியில் தொடங்கினான். சிறிது நேரத்தில் யாழினியை கூப்பிட்டவன் தனது வேர் ஹவுஸுக்கு போவதற்காக கிளம்பினான். அவனுடன் யாழினியும் கிளம்பினாள். விஷ்ணு அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவனுக்கு திடீரென்று  மித்ரா நியாபகம் வந்தது. ‘மேடம் என்ன தேடினாங்களாமே?. என்ன தான் பண்றாங்கனு பாப்போம்‘ என்று நினைத்தவன் மித்ராவிற்கு அழைத்தான். “ஹலோ” என்ற விஷ்ணுவின் குரலில் வார்த்தை வராமல் தடுமாறினாள். “சொல்லுங்க சார்“ “கம் டு மை ரூம்” என்று கடுமையான குரலில் சொல்லிவிட்டு போனை வைத்தான். ‘அய்யோ… எதுக்கு இவன் இப்டி திட்டறான்?’

அத்தியாயம் 17 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!