அத்தியாயம் 24
கோவிலில், முருகனின் எழில் மிகுந்த தோற்றம் வர்ஷினியின் கண்களை நிறைத்திருந்தது. அன்று செவ்வாய்கிழமை ஆதலால் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தார்கள். முருகனை கண் குளிர தரிசித்து, கோவில் பிரகாரத்தை சுற்றி விட்டு இருவரும் சற்று அமரலாம் என்று மண்டபத்தின் படியில் அமர்ந்தனர். அப்போது ஒரு மூதாட்டியை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு வந்தார்கள். அதை தள்ளிக் கொண்டு வந்தவரை பார்த்ததும் வர்ஷினி, இவங்கள எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று உற்று நோக்க, அவங்க விசாலாக்ஷி அத்தை […]
