April 2026

அத்தியாயம் 4

மித்ராவும்,யாழினியும் தியேட்டரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். “ஏய் யாழி.. மெல்லமா போடி. ரேஸ்ல போற மாதிரி ஓட்டற?” “ஆன்லைன்ல டிக் புக் பண்ணா மட்டும் போதாது. சீக்கிரம் கிளம்பி வரவும் தெரியணும்” என்று மித்ராவை முறைத்தபடி கூறினாள். “ஏய் கிளம்பறப்ப அம்மா புடிச்சிகிட்டாங்க யாழி வேல செய்யறது இல்லேனு.சமாளிச்சிட்டு வரதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு“ அதை கேட்டவள் சிரித்து கொண்டே “அதுக்கு இன்னும் வளரணும் மித்து” என்றாள். “அப்டியா மேடம். நான் வேணா ஆன்ட்டி கிட்ட சொல்லட்டுமா?” “அமைதியா இருடி பக்கி.அவங்க புலம்ப ஆரம்பிச்சிட்டா நிறுத்த மாட்டாங்க“ “தெரியுதுல்ல. என்னய மட்டும் சொல்ற” என்று மித்ரா முறுக்கி கொள்ள “கூல் பேபி” என்று அவளை சமாதானம் செய்தாள். தியேட்டர் வந்ததும் டூவிலரை பார்க் செய்தார்கள். யாழினிக்கு பிடித்த ஹூரோ படம் ஆதலால் தியேட்டருக்கு வந்தார்கள். திரையில் ஹூரோ பெயர் போட ஆரம்பித்தவுடன் இவர்கள் லூட்டி ஆரம்பமானது. யாழினி,மித்ரா இருவரும் டைட்டில் கார்டில் இருந்து ஆரம்பித்தவர்கள் எந்த சீனையும் விடவில்லை. ஹூரோவின் அறிமுக பாடலுக்கு இவர்களும் சேர்ந்து ஆடினார்கள். ஒவ்வொரு சீனுக்கும் விசில் சத்தமும், ஹூரோவின் பெயரை கத்திக் கொண்டும் இருந்தார்கள். இவர்களுக்கு பின்னால் ஆதியும்,விஷ்ணுவும் இருந்தார்கள். முதலில் யாரோ என்ற அலட்சியத்தில் இருந்த விஷ்ணு மித்ரா விசிலடிப்பதை பார்த்ததும் அதிர்ந்தான். ‘ஆபிஸ்ல இந்த பூனையும் பால் குடிக்குமா ரேஞ்ச்ல இருக்கா?. இப்போ இந்த ஆட்டம் போடறாளே?’ என்று ஜெர்க் ஆனான். அவர்கள் இருவரையும் பார்த்த ஆதிக்கோ கோபம் உச்சத்தில் ஏறியது. “டேய் என்னடா ஒரு படம் கூட நிம்மதியா பாக்க முடியல. ஆபிஸ்ல தான் இதுங்க தொல்ல தாங்க முடியலனா… இங்கயுமா?” என்று அவன் பல்லை கடித்தான். “மச்சி அதுக்கு நான் என்னடா பண்ணட்டும்?. அதிசயமா தியேட்டருக்கு வந்திருக்க. என்ஜாய் பண்ணேன்டா“ விஷ்ணுவின் புலம்பலில் ஆதி அமைதியானான். ‘ஹப்பா மல இறங்கிட்டான் சாமி. தாங்க் காட்‘ என்று விஷ்ணு மனதிற்குள் நினைத்து கொண்டே ஆதியை பார்க்க அவனோ யாழினியை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தான். ‘ஆஹா.. இது வேறயா?. இதுக்கா அப்படி விரப்பா இருந்தான். இருடா வரேன்‘ என கருவிக் கொண்டே “மச்சி” என்றழைக்க ஆதி ‘ஆஃபிஸ்க்கு வரப்போ எப்டி இருக்கா?.இந்த பாட்டுக்கு என்ன எக்ஸ்பிரஸன் காட்டறா?’ என்று திகைப்பாய் பார்த்தவன் தன்னை மறந்து அவளை ரசித்தான். அவளது ப்ளூ ஜூன்ஸூம், ஒய்ட் காட்டன் சர்ட்டும் அந்த பாடலுக்குண்டான அவளது நடன அசைவுகளும் அவனை வேறு உலகத்திற்கு அழைத்து சென்றன. அவனை கூப்பிட்டவன் பக்கத்திலிருந்த மித்ராவை கவனித்தான். அவள் யாழினியோடு சேர்ந்து அடித்த லூட்டியில் தன்னை மறந்து சிரித்தான். அவன் சிரிப்பதை கவனித்த ஆதி அவனை முறைத்தான். […]

அத்தியாயம் 4 Read More »

அத்தியாயம் 3

அதிதேவ் அறையில் இருந்து வந்ததும் மேனேஜர் யாழினி மற்றும் மித்ரா இருவரையும் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்டில் உள்ளவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் பவித்ராவை அறிமுகப்படுத்தியவர் “பவித்ரா இவங்க நியூலி அப்பாய்ன்டேட். இவங்களுக்கு நீங்க டிரெயின் பண்ணிருங்க”  என்று சொல்ல அவள் அவர்களை பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள். “ஹாய் ஐயம் யாழினி“ “ஐயம் பவித்ரா” என்று அவர்கள் அறிமுகப்படுத்தி கொள்ள “நீங்க அல்ரெடி பிரண்ட்ஸா?” என்ற பவித்ராவின் கேள்வியில் சிரித்த யாழினி “நாங்க இரண்டு பேரும் ஒட்டி பிறக்காத இரட்டை பிறவிகள்” என்று கூறினாள். அவளது பதிலில் பவித்ரா வியப்பாய் பார்த்தாள். “என்ன யோசிக்கறீங்க பவித்ரா?.நாங்க சின்ன வயசில இருந்தே பிரண்ட்ஸ்“ “ஓ.. சூப்பர்“ “அப்றம் பவித்ரா நமக்குள்ள நோ ஃபார்மாலிட்டிஸ். இந்த நீங்க வாங்க போங்க எல்லாம் வேணாம்.ஓகே?” யாழினியின் பேச்சில் பவித்ரா புன்னகைத்தாள். “என்ன பாக்கறீங்க பவித்ரா?.அவ எப்பவுமே இப்டித்தான்” என்று சொல்லி மித்ரா சிரித்தாள். பின்பு அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போது கார்த்திக் பவித்ரா இடத்திற்கு வந்தான். “என்ன கார்த்திக் என்ன வேணும்?” “ஸ்டீல் கம்பெனி பர்சேஸ் டீடெல்ய்ஸ் வந்திடுச்சா?” அவன் கேட்ட கேள்வியில் கார்த்திக்கை பவித்ரா முறைத்தாள். “அத நேத்தே உன்கிட்ட கொடுத்திட்டேன்“ “ஓ சாரி. நான் மறந்துட்டேன்” என்று அவன் சிரித்தான். “வழியுது. துடச்சிக்கோ“ “என்ன பவி இப்டி சொல்லிட்ட?.இவங்கள இன்ட்ரடியூஸ் பண்ணவே இல்ல” என்று மித்ராவையும்,யாழினியையும் காட்டினான். “ஓ… சார் அதுக்கு தான் டீடெய்ல்ஸ் கேக்க வந்திங்களோ?” என்றபடி அவனை முறைத்தாள். அவன் ஒரு மாதிரி சிரித்தான். அதை பார்த்த யாழினிக்கு அவனை அறைய வேண்டும் போல் இருந்தது. அடிக்க கையை உயர்த்தியவளை மித்ரா தடுத்து நிறுத்தினாள். யாழினி மித்ராவை கண்களால் எரித்தாள். “அமைதியா இருடி” என்று பார்வையாலேயே கெஞ்சியவளை பார்த்ததும் அவள் அமைதியானாள். பவித்ரா அவர்களை அறிமுகப்படுத்த அவன் ஈஈ என்று இளித்தபடி கை நீட்டினான். ‘ஆடு தானா வருது‘ என்று நினைத்தபடி யாழினி அவனிடம் கை கொடுத்தாள். முதலில் சிரித்தபடி இருந்த அவன் முகம் பின்பு அஷ்ட கோணலாகியது. அவர்கள் முன் அவன் முகம் மாறாமல் இருக்க பெரிதும் போராடினான். “இவ மித்ரா” என்று அவள் அறிமுகப்படுத்த “சார் அர்ஜென்ட்டா ஒர்க் முடிக்க சொன்னாரு பவி. நான் கிளம்பறேன்” என்றவன் அவர்களை திரும்பி பார்க்காமல் சென்றான். அதை பார்த்த யாழினியோ விழுந்து விழுந்து சிரித்தாள். “ஏன்டி சிரிக்கற?” அதற்கு பதில் சொல்லாமல் பவித்ராவை பார்த்த யாழினி “இவன் எப்டி பவி?. ஜொள்ளு ஆறா போகுது“என்று கேட்டாள். “அவன் கிட்ட கவனமா இருக்கணும் யாழினி. அவன் அவ்வளவு நல்லவன் இல்ல“ அதை கேட்டு சிரித்த யாழினி “இனி அவன் நம்ம கிட்ட கவனமாக இருப்பான்”

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 2

அதிதேவ் அடுத்த நாள் காலையில் எழுந்தவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.அவனுக்கு நேற்று நடந்தது ஞாபகம் வந்தது. “டேய் எந்திரிச்சிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே விஷ்ணு உள்ளே வந்தான். அவன் தலையைப் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து “ஏன்டா தலை வலிக்குதா?” என்று கேட்டான். “அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான்“ “டேய் மச்சி நீ ரெஸ்ட் எடு. நான் ஆஃபிஸ பாத்துக்கறேன்“ “இல்லடா.நிறைய ஒர்க் இருக்கு” என்றவன் எழுந்து கிளம்பத் தயாரானான். ‘அதான,சார் நாம சொல்றது கேட்டுட்டாலும்‘ என்று பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியேறினான். அதிதேவ்–ஆறடி உயரம்,கூர்மையான கண்கள்,வலிமையான தோள்கள்,அலை அலையான கேசம்,அதிகமாக பேசாத அவனது குணம் அனைவரையும் எட்ட நிற்க வைக்கும். விஷ்ணுவும்,அதிதேவும் நண்பர்கள்.ஒரு முறை ஆதி பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆதியுடைய அப்பாவின் எதிரிகள் அவனை கடத்த முயற்சி செய்தார்கள்.ஆதி அவர்களிடம் போராடும் போது அவனை விஷ்ணு அவர்களிடமிருந்து காப்பாற்றினான்.அப்போதிருந்து இருவரும் உயிருக்குயிரான நண்பர்களானார்கள். விஷ்ணு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன்.ஆதி அவனைப் பற்றிய விவரங்களை கேட்டுக் கொண்டவன் தன் அப்பாவிடம் சொல்லி அவனை தன்னுடனே தங்க வைத்தான்.முதலில் தயங்கிய விஷ்ணு பின் ஆதியின் பிடிவாதத்தில் அவனுடனே இருந்தான். ஆதியுடைய அப்பா ஜெயதேவ் எப்போதும் பிஸினஸ் என்று உலகைச் சுற்றி கொண்டிருப்பவர்.அவருக்கு மகனின் மேல் பாசம் அதிகம்.எப்போது ஊரிலிருந்து வந்தாலும் அவனுடன் நேரத்தைச் செலவழிப்பார்.ஆனால் ஆதியுடைய அம்மாவுக்கு பணம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது. இதனால் தனிமையில் இருந்தவன் விஷ்ணுவைப் பார்த்ததும் தன்னுடனே இருக்கும்படி வைத்துக் கொண்டான். ஆதி வெளியே வந்ததும் விஷ்ணுவும்,ஆதியும் சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பினார்கள். கார் அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் முன் நின்றது. வாட்ச்மேன் பணிவுடன் வந்து  கார்க் கதவை திறந்தான். விஷ்ணுவுடன் பேசிக் கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தான். தேவ் இண்டஸ்ட்ரீஸ். அவனது பிஸினஸ் சாம்ராஜ்யம். கட்டிடக் கலையில் தொடங்கி சாப்ட்வேர் வரை பல தொழில்கள் அவன் மேற்பார்வையில் உள்ளன. “ஆதி,இன்னைக்கு நியூ கேண்டிடேட்ஸ் ஜாயின்ட் பண்ண வராங்கடா“ “ஓகேடா. அவங்க வந்தா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும். தென் வீ வில் கால்.ஓகே?” “ஓகேடா” என்று கூறி விட்டு விஷ்ணு தன் கேபினிற்கு சென்றான். இங்கு யாழினியும், மித்ராவும் மித்துவின் ஸ்கூட்டியில் கிளம்பினார்கள். பிரமாண்டமான தேவ் இன்டஸ்ட்ரீஸ் கட்டடத்தைப் பார்த்து வாயை பிளந்தபடி நின்றாள். “ஏய் லூசு ஏன்டி இப்டி பாத்து தொலைக்கற?” என்று மித்ராவை யாழினி திட்டினாள். “இல்லடி. பில்டிங் பாத்தாவே மலப்பா இருக்கு” என்று கூறினாள். “கம்முனு வா” என்று அவளுடன் சென்றாள். அவர்கள் உள்ளே வந்த போது ரிஷப்சனில் இருந்த பெண்ணிடம் விசாரித்து விட்டு உள்ளே சென்றார்கள். “என்னடி வந்து எவ்ளோ நேரம் ஆச்சு. இன்னும் கூப்டல?” “பாக்கலாம். இரு” என்று யாழினி கூறினாள். இந்நிலையில் விஷ்ணு அவன் ரூமிலிருந்து வெளியே வந்தான். “ஏய் இந்த பக்கி எங்க இங்க வந்தான்?” என்று மித்ரா விஷ்ணுவைப் பார்த்து கூறினாள். “யார்டி?” “அதான்டி அந்த வொயிட் சர்ட்.. மாடல் மாதிரி இருக்கானே?” “ஏன்டி எங்க போனாலும் சைட் அடிக்கறத மட்டும் விடாதிங்கடீ“ “இல்லடி.அவன நேத்து பார்ட்டியிலே பார்த்தோம்டி“ அப்படியா என்பது போல மித்ராவை ஒரு பார்வை பார்த்தாள். “ஆமா. நீ ஒருத்தன் கூட சண்ட போட்டுட்டு இருந்தியே. அவன் கூட இவன் இருந்தான்” என்று விவரம் சொன்னாள். மித்ரா அவனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது யாழினி அவனைக் கூப்பிட்டாள். “எதுக்கு அவன கூப்பிடற?” என்று மித்ரா கேட்டாள். “எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது. டைம் பாஸ் ஆக வேண்டாமா?” என்று யாழினி சொன்னாள். “ஏய்.. அடங்கவே மாட்டாயாடி” என்று மித்ரா அடிக்குரலில் கேட்டாள். “ஹேய் மிஸ்டர் இங்க வா“

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம் 1

நகரத்தின் மையப் பகுதி.நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.நகரம் முழுவதும் நிசப்தமாக இருக்க அந்த இடம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அது ஒரு உயர் தரமான கேளிக்கை விடுதி.வாயிலின் முகப்பில் பாதுகாவலர்கள் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். உள்ளே வண்ணமயமாக காட்சியளித்தது.ஆண்களும்,பெண்களும் இளமை பொங்க இசைக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தனர். சற்று தள்ளி நான்கு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.அவர்களின் கையில் மது பானம் இருந்தது. அவன் மதுவை வேகமாக குடித்துக் கொண்டிருந்தான். “டேய் என்னடா ஆச்சு அவனுக்கு?.ஏன் இப்டி குடிக்கிறான்?” “நானும் வந்ததுல இருந்தது கேக்கறேன்.எதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்கறடா மச்சி“ “பாஸு அவன பத்தி தெரியாதா?.அவன் சொல்லணும்னு நினச்ச தான சொல்வான்?” என்றவன் “மச்சான் என்னடா?” என்று ஆதியைப் பார்த்து கேட்டான். அவர்களை முறைத்தவன் கண்களில் ஒரு உருவம் வந்தது.அதை நினைத்தவன் கண்களில் ரௌத்ரம் தோன்றியது. அவனது விழியைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.மேற்கொண்டு கேட்க முடியாமல் திணறினார்கள். இந்நிலையில் அங்கு திடீரென்று நிசப்தம் குடி கொண்டது.ஒரு பெண் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தாள்.அவளை பார்த்ததவன் விறு விறுவென்று அங்கே போனான்.அவன் நண்பர்கள் அவனை பார்த்து திகைத்தார்கள். முதலில் சுதாரித்த விஷ்ணு அவன் பின்னே ஓடினான். அங்கே போன ஆதி நேராக சென்று அவள் கையை முறுக்கினான்.அதில் ஒரு நிமிடம் திகைத்தவள் திரும்பி அவனை பார்வையால் எரித்தாள். “டேய் கைய விடுடா” என்று அவனிடம் கத்தினாள். “எதுக்குடி அவன அடிச்ச?” “ஹலோ மைன்ட் யுவர் வேர்ட்ஸ்“ “ஏய் பதில சொல்லுடி” என்று அவன் கத்தினான். இவர்கள் சண்டையை மற்றவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆதியுடைய நண்பர்கள் அவனை சமாதானப்படுத்த முயற்சித்த போது அவர்களை பார்வையாலே எட்ட நிறுத்தினான். அந்த நிமிடத்தில் அவள் நச்சென்று அவன் கால்களை மிதித்தாள்.அதில் துள்ளிக் கொண்டு அவள் கைகளை விட்டான். “ஏய்” என்று கத்தியவன் அவள் கண்களில் தெரிந்த தீட்சண்யத்தில் திகைத்து நின்றான். மேனேஜர் அவள் அடித்ததை பார்த்து சமாதானம் செய்ய வந்தவன் ஆதியுடன் நடந்த சண்டையைப் பார்த்து வாயடைத்து நின்றான். “என்ன?” என்பது போல ஆதியைப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்தினாள். “ஹு ஆர் யூ மேன்?.இங்க என்ன நடந்ததுனு தெரியுமா?” “இதுக்கு ஆராய்ச்சி வேற பண்ணணுமா?.நீ இப்டி அரை குறையா ஆடிட்டு இருந்தா எவனா இருந்தாலும் இப்டி தான் பிஹேவ் பண்ணுவான்?” என்று ஆதி கூறினான். “ஃபர்ஸ்ட் நீங்க ஒழுங்கா இருங்கடி.அப்றம் மத்தவங்கள அடிக்கலாம்” என்று ஆத்திரத்துடன் கூறினான். ‘இன்னைக்கு இவனுக்கு என்ன ஆச்சு?’ என்று அவன் நண்பர்கள் திகைத்தார்கள். அதைக் கேட்டு அவள் ஆத்திரத்துடன் அவனை அறைய வந்தாள்.அவளுடைய தோழிகள் அவளை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர். “போடி” என்று ஆத்திரத்துடன் அவன் டேபிளை உதைத்தான்.அவனது நண்பர்கள் அவனை டேபிளுக்கு இழுத்துக் கொண்டு சென்றார்கள். அமர்ந்தவன் அங்கிருந்த முழு பாட்டிலை எடுத்து கவிழ்த்தான். “டேய் ஓவராயிடுச்சு.கிளம்பலாம் வாடா” என்று அவனை கூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.                              ******* “ஏய் எதுக்குடி என்ன கூட்டிட்டு வந்தீங்க?.அவன் என்ன பேச்சு பேசறான்?.அவன சும்மா விட சொல்றியா?” என்று அவள் தோழிகளிடம் சண்டையிட்டாள். “அம்மா பரதேவதையே,இதுக்கே ஆன்டி என்ன சொல்வாங்களோனு பயந்திட்டு இருக்கேன்.உனக்கு அவன் கூட சண்ட போடலனு தான் கவலையா இருக்கு” என்று மித்ரா சொன்னாள். “ஏய் அவன் எவ்ளோ ஹேன்ட்சமா இருந்தான் இல்லடி” என்று பார்கவி சொன்னாள். “அடிங்..ஏன்டி இங்க என்ன பிரச்சனை போய்ட்டிருக்கு?.அவன நீ சைட் அடிச்சிட்டு இருந்தியா?” என்று அவளை மொத்தினாள்.அவளது செயலில் பார்கவி அமைதியானாள். அவளை முறைத்தவள் “அதெல்லாம் மாலுவ எப்டி கரெக்ட் பண்றதுனு தெரியும்.நீ வா” என்று தோழிகளுடன் சென்றாள். தனது பைக்கில் சென்றவள் வீட்டுக்கு அருகில் வந்தவுடன் பைக்கை ஆஃப் செய்து தள்ளிக் கொண்டு வந்தாள். வீட்டினுள் வண்டியை நிறுத்தியவள் சத்தமில்லாமல் பூட்டை திறந்தாள்.

அத்தியாயம் 1 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!