April 2026

அத்தியாயம் – 34

தந்தைக் கொடுத்து கோப்புகளை மடிக்கணினியில் டைப் செய்துக் கொண்டிருந்த ஹரிதாவின் முன்னே வந்து நின்றான் வேலன். “ஹாய் !” சந்தோஷமாக கூற, “குட் மார்னிங் வேலன். என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க ?” “ஆமா. காஃபி குடிக்க போகலாம்மா ?” “வாங்க போகலாம். எனக்கு காஃபி தேவைப்படுது “ என்றவர்கள் காஃபி அருந்தும் இடத்திற்குச் சென்று ஆளுக்கொன்றை எடுத்துக் கொண்டனர். “ஏதாவது சொல்லணுமா ?” “ஊருல இருந்து உன் அக்காவும், என் அண்ணனும் வந்துட்டாங்க “ […]

அத்தியாயம் – 34 Read More »

அத்தியாயம் – 33

இருள் நிறைந்த இரவு. பிரகாசமான அழகிய நட்சத்திரங்களைக் கொண்ட வானத்தில் நிலவோ ஜொலிக்க நெஞ்சமோ அதைக் கண்டு ரசித்தது. காற்றின் வேகமும் மேனியை தழுவி குளுமையூட்ட, வானும். மண்ணும் மோகம் கொள்ள, போர்த்திக் கொள்ளும் போர்வையாய் இருந்தது இரவு. தன் விழிகளுக்கு இருளாக இருந்தாலும் நிலவுக்கு மட்டும் தான் தெரியுமாம் அவர்கள் கொண்டாடும் இன்பம் என்னவென்று. அப்படியான அந்த இரவுப் பொழுது தான் வாழ்வில் மறக்க முடியாத பொழுதாக அமைய இருந்தது ஆதுரிக்கும், தேவகாந்தனும். ஆதுரி சம்மதம்

அத்தியாயம் – 33 Read More »

அத்தியாயம் – 32

அமெரிக்காச் செல்ல அன்று இருவரையும் எர்போர்ட்டில் ட்ராப் செய்ய வந்திருந்தான் வேலன். “நான் வர்ற வரைக்கும் நீ நம்ம ஆபிஸ்க்கு அடிக்கடி வந்து போய் இரு. ஆள் இல்லைன்னு நினைச்சி அவங்க வேலையைக் காட்ட ஆரம்பிடிப்பாங்க. நான் நேரம் கிடைக்கும் போது குரூப் கால்ல பார்க்குறேன் “ என்க, “இங்க நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். நேரம் கிடைக்கும் போது நீங்க ரெண்டு பேரும் அங்க எங்கையாவது சுத்தி பார்க்க போங்க “ எனக் கூறி இருவரையும் வழியனுப்பி

அத்தியாயம் – 32 Read More »

அத்தியாயம் – 31

நாட்கள் கடக்க அன்று உலக மகா அதிசயமாக மது அருந்தாது அறைக்கு வந்துப் படுத்திருந்தான் தேவகாந்தன். அருகில் இருந்தவளிடம், “பால் காய்ச்சி கொண்டு வா ?” என்கவே, அப்போது தான் அவள் அதனை உணர்ந்தாள். சரியெனக் கூறி பாலினை சூடாகக் கொண்டு வந்துக் கொடுக்க வாங்கிக் பருகவே தன் பக்கம் சென்று அமர்ந்துக் கொண்டாள். “என்னாச்சு இவனுக்கு ? எப்பவும் குடிக்க தானே செய்வான் ?” நினைத்துக் கொண்டு அவ்வப்போது திரும்பி கடைக்கண்ணால் அவனைக் காண, “எதுக்கு

அத்தியாயம் – 31 Read More »

அத்தியாயம் – 30

மறுநாளிலிருந்து அவர்களுக்கு நாட்கள் வழக்கம் போல் செல்ல ஆரம்பித்தது. காலையில் வேலைக்குச் சென்றால் இரவு ஹெஸ்ட்ஹவுஸ் வந்து விடுவது தான் தேவகாந்தன் வழக்கம். அவனுக்கு தனியாக இருக்க அதிகம் பிடிக்கும் என்பதாலே வருடத்தில் முக்கால்வாசி இங்கு தான் கழிப்பான். இப்போது அவனோடு ஆதுரி இருக்க அவனுக்கோ அது பெரிதாகத் தெரியவில்லை. துயில் கொள்ளும் போது மட்டுமே இருவரும் அறைக்குள் ஒன்றாக சந்தித்துக் கொள்வர். மற்றபடி அவரவர் வேலையைத் தான் பார்த்தனர். சில நாட்கள் அதிகம் குடிப்பவன் சில

அத்தியாயம் – 30 Read More »

அத்தியாயம் – 29

கண்ணாடியின் முன் நின்று கண்ணீர் சிந்துபவளைத் தான் எழுந்ததுமே கண்டான் தேவகாந்தன். ‘எதுக்கு இப்படி காலையிலே அழுதுக்கிட்டு இருக்கா. நம்ம தான் ஒன்னுமே பண்ணலையே ? அவ பேமிலி மெம்பர்ஸ் வர்றதால சந்தோஷ தானே படணும் பீல் பண்ணுறாலே என்னவாக இருக்கும் ?’ தனக்கு தானே கேட்டுக் கொண்டு, “என்னாச்சு மேடம் ? காலங்காத்தால நல்ல தரிசனத்தை கொடுத்திருக்கே ?” நக்கலாகக் கேட்கவே,  ‘இவனால் தானே அவனையும் தன் நட்பினை இழக்க நேர்ந்தது ‘ நினைக்கும் போதே

அத்தியாயம் – 29 Read More »

அத்தியாயம் – 28

பாட்டி, தாத்தா இருவரையும் வழியனுப்பி வைத்து உள்ளே நுழைய, தேவகாந்தனைக் கண்ட அவனின் தந்தையோ தன் முடிவினை கூற நினைத்தார். “தேவா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ?” என்க, “தனியாவா, இல்லை எல்லார் முன்னாடியுமா ?” தன்னிடம் பேச வேண்டும் என்றால் ஏதாவது ஒரு காரணம் வைத்து தான் பேசுவார் என்பது தெரிந்தேக் கேட்டான். “உன்னோட விருப்பம் தான்ப்பா “ என்க, “வெளியே கார்டனுக்கு போகலாம் “ என்றதும், தந்தை, மகன் இருவர் மட்டுமே அந்த

அத்தியாயம் – 28 Read More »

அத்தியாயம் – 27

தேவகாந்தனுக்கு இரவு உணவினை சமைத்த ஆதுரி உடன் பாலையும் சூடுப்படுத்திக் கொண்டு அதனை எடுத்து வந்தாள். நடு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இசையை ஒலிர விட்டு மதுவோடு குதூகலமாக இருந்தவனோ தன் முன்னே வந்து நின்றவனைக் கண்டான். “ஹே ! வா வா, என்ன பிரீபேர் பண்ணுனே ?” என்க, அவனின் முன்னே வைக்கவே, அதனை எடுத்து ஒரு இஸ்பூன் உண்டான். “ஹ்ம்ம், நல்லா டேஸ்டா தான் இருக்கு. நல்லா தான் சமைப்பே போலே. என்ஜாய்

அத்தியாயம் – 27 Read More »

அத்தியாயம் – 26

தேவகாந்தன் தொழிலில் முன்னேறிச் சென்றுக் கொண்டேயிருக்க வருடங்கள் கடக்க, தங்களின் மூத்த மகனைக் கண்டு பெருமைப்பட்டனர்.  அமராவதி தன் பெற்றோரிடம் கூறும் போதெல்லாம், “உங்க வளர்ப்புல அதான் இப்படி முன்னேறிட்டு வரான். நினைச்சாலே பெருமையாக இருக்கு “ என்று அடிக்கடி கூற, அவர்களுக்கும் சந்தோஷமான தருணமாக இருந்தது. அவனை விட ஆறு வயது சிறியவனான வேலன் தன் கல்லூரி படிப்பினை முடிக்க, தேவகாந்தனை அழைத்தார் தந்தை. “இனிமே இவன் உன்னோட பொறுப்பு. உன்னை மாதிரி இவனை நம்பர்

அத்தியாயம் – 26 Read More »

அத்தியாயம் – 25

வேலைக்காரனை தூக்கிக் கொண்டு மற்றவர்கள் சென்று விட, ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். “தேவா எதுக்கு இப்படி பண்ணுறே ? பாவம் அவருக்கு வலிக்கும்ல “ “அதுக்காக என் கிட்ட கேட்காம வெட்டுவாரா. எனக்கு பிடிச்சது எப்பவும் எனக்கு மட்டும் தான் சொந்தம். என்ன கேட்காம பண்ணுனா இப்படி தான் பண்ணுவேன்  தாத்தா “ என்று சினத்தோடு கூறியவனோ அந்த மரத்தின் செடியை சரிப்படுத்த ஆயத்தமானான். “விடுங்கங்க, சின்ன பையன் ஏதோ புரிஞ்சிக்காம பேசுறான். வளர்ந்தா சரியாகிரும்

அத்தியாயம் – 25 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!