April 2026

அத்தியாயம் – 24

அனைவரும் சூழ அமர்ந்திருந்த ஆதுரிக்கு என்னவோ போல் இருந்தது. அதை விட தன்னிடம் அவர்கள் எதையோ குறிவைத்தே கேள்வி கேட்பதுப் போல் இருந்தது. “உங்க அப்பா கிட்ட இதை பத்தி சொல்லிட்டையா ? நீ என்ன நினைக்கிற இந்த விசியத்துல ?” என்று அவளின் மாமனார் கேட்க, “இனிமே தான் சொல்லணும். அவரால இதை ஏத்துக்க முடியுமான்னு தெரியல ? அதை விட வேலன் நல்லா எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன் தான். உங்களோட அவ்வளோ பெரிய கம்பெனில வேலை […]

அத்தியாயம் – 24 Read More »

அத்தியாயம் – 23

மாமனார் கூறியதுச் சரியாக இருந்தாலுமே தன் மிரட்டலை மகன் கேட்பானா என்ன ? இப்படி தான் ஆதுரியை திருமணம் செய்து கொள்வதற்கு கோரிக்கை வைத்தால் அவனோ அது இரண்டையும் முறியடித்து விட்டு தன்னை எதிர்த்தவன் ஆகியிற்றே ? சரி நடப்பது நடக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம். மாமனார் கூறியதுப் போன்றே செய்து விடலாம் என முடிவெடுத்தார். அதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கவே, இப்போது என்ன செய்யக் காத்திருக்கிறானோ ? தங்களின் வீட்டுக்கு வந்த மருமகளை எண்ணி கவலை தான்

அத்தியாயம் – 23 Read More »

அத்தியாயம் – 22

மலர் படுக்கையில் விழுந்த ஆதுரி தன் இயலாமை அனைத்தையும் உள்ளுக்குள்ளே புதைத்து மருகியவாறு அவனைக் கண்டாள். ஆதுரி எப்படி விழுந்ததாலோ அப்படியே இருக்க, “சுத்தி இருக்குற இந்த பூ, அலங்காரம், கேண்டில் எல்லாத்தையும் விட நீ ரொம்ப அழகா அப்படியே இந்த புடவையில செக்ஸியா இருக்கே ? இப்படி அழகா இருந்தா எந்த மனுஷனுக்கு தான் உன் மேல ஆசை வராது சொல்லு. என்ன பார்க்குற ? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது உன் உடம்புக்காகன்னு நீ

அத்தியாயம் – 22 Read More »

அத்தியாயம் – 21

தன்னறையில் அமர்ந்திருந்த ஆதுரியின் மனமோ அனலாய் கொதித்தது. அவன் நினைத்ததை வெற்றிக்கரமாக நடத்தி விட்டான். அவனிடம் ஒவ்வொரு நொடியும் தான் தோற்றுக் கொண்டே இருக்க, தன்னையே தான் வெறுத்த உணர்வு தான். மணப்பெண் அலங்காரத்தை தானே கலைக்க, கழுத்தில் தொங்கிய திருமாங்கல்யம் காணும் போது தான் இதற்காக துருபதனை பகடையாக்கியதை நினைத்தாள். ஒரு வாரத்திற்கு முன் தேவகாந்தன் ஆதுரியின் கைபேசியிருக்கு அழைக்க அழைப்பினை எடுத்தாள். “உன்னை பார்க்கணும். லொகேஷன் ஷேர் பண்ணுறேன் வந்திரு “ எனக் கூறி

அத்தியாயம் – 21 Read More »

அத்தியாயம் – 20

மணமேடையில் வந்து ஜோடிகள் இருவரும் அமர்ந்திருக்க, ஐயர் கூறச் சொன்ன மந்திரங்கள் அனைத்தையும் அப்படியே கூறிக் கொண்டிருந்தனர். தேவகாந்தன் அடிக்கடி வாசலைக் கண்டவாறே இருக்கவே, “என்னவா இருக்கும் ? யார் வரணும் நினைச்சிக்கிட்டு இருக்கான் உன் மகன் “ என்று தியாகராஜன் மனைவியிடம் கேட்க, “எனக்கு என்னங்க தெரியும் “ “அதுவும் சரி தான் “ “இப்படி தான் நீங்க ஒரு மெண்டல் அப்படிங்குறதை ஒத்துக்குறீங்க ? “ என்று இது தான் வாய்ப்பென நினைத்து கூறவே,

அத்தியாயம் – 20 Read More »

அத்தியாயம் – 19

ஆதுரியின் விழிகளோ அந்த மோதிரத்தைக் கண்டவாறே இருக்க, நினைவுகள் முழுவதுமே அதனைப் போட்ட துருபதனின் மீது தான். அன்று எவ்வளோ சந்தோஷமான நாளாக இருந்தது இந்த நிகழ்வு. கண்களின் இருந்து வெளிவரத் துடித்த கண்ணீரை அடக்கி அப்படியே உள்ளிழுத்துக் கொண்டு நிற்க, “அதை கழட்டு ஆதுரி “ பற்களைக் கடித்துக் கொண்டு சினமோடு கூறினான் தேவகாந்தன். “என்னால முடியாது ?” வலியோடுக் கூறவே, “நீ கழட்டலேனா நான் கழட்ட வேண்டியதா இருக்கும் “ என்கவே, மணமேடையில் நின்று

அத்தியாயம் – 19 Read More »

அத்தியாயம் – 18

நலங்கு விழா முடிந்ததுமே அன்றைய மாலையே மெஹந்தி விழா நடைபெற்றது. அதிலும் வழக்கம் போல் அனைவரும் கலந்துக் கொள்ள, தேவகாந்தனுக்கு இது சம்மந்தமில்லா ஒன்று என்பதால் அவனோ தன்னறையில் அமர்ந்து அலுவலக வேலையை கவனித்துக் கொண்டிருந்தான். ஹரிதாவின் விழிகளோ காலையிலிருந்து வேலனைத் தேடி தோற்றுப் போய் ஒரு வழியாக தங்கும் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டு பிடித்து விட்டாள். அனைவரும் இங்கு விழாவில் இருக்கவே, அவனின் பின்னோடு வேகமாகச் சென்றாள், அவள் தன்னை பின் தொடர்ந்து வருகிறாள் எனத்

அத்தியாயம் – 18 Read More »

அத்தியாயம் – 17

நாட்கள் கடந்து ஒரு வழியாக தேவகாந்தன், ஆதுரி இருவரின் திருமணக் கொண்டாட்டம் வந்து விட்டது. இன்னும் இரு நாட்களில் திருமணம் அன்று அவர்களுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி இருந்தது. அவர்களின் முறைப்படி வீட்டில் வைத்து தான் நடத்த வேண்டும் ஆனால் என்ன செய்ய ? தேவகாந்தன் தான் முன்னவே அனைத்தையும் முடிவு செய்து விட்டானே ! ஏற்பாடுச் செய்திருந்த ரிசார்ட்டில் ஈவன்ட் மேனேஜ்மெண்ட் ஆட்கள் அந்த இடத்தையே ஜொலிக்க வைப்பதுப் போல் தயாராக்கி வைத்திருக்க, இரு குடும்பத்தாரும்

அத்தியாயம் – 17 Read More »

அத்தியாயம் – 16

மெல்லிய டிசைனர் சேரி ஒன்றை அணிந்த ஆதுரி கண்ணாடியின் முன் நின்று தன்னைக் கண்டாள். சில நாட்களாவே மனம் சரியில்லாத காரணத்தால் உள்ளம் வாடியதைப் போல் மேனியும் வதங்கிப் போய் வித்தியாசமாகத் தென்பட்டாள். தன்னை தானேப் பார்க்க பிடிக்காதுப் போன உணர்வு. புடவையைக் கண்டதுமே, தன்னைப் பெண் பார்த்து விட்டுச் சென்ற அன்று துருபதன் கூறிய வார்த்தைகள் தான் நினைவில் ஒலித்தது. அதிலிருந்து அதிக நாட்கள் புடவையைத் தான் உடுத்தி வந்தாள். இப்போது அதை நினைக்கும் நொடியே

அத்தியாயம் – 16 Read More »

சுவாசம் – 8

சத்தியனுக்கு இரவு குடிப்பது வாடிக்கையாகி போக, அக்னியோ மது குவளையை கையில் எடுக்காததால் நண்பன் குடி பழக்கம் தெரியாமல் போனது. இப்படியே ஒரு வாரமும் கழிந்தது. இதழுக்கு சற்று வலி மட்டுப்பட்டிருக்க கைகளை சிறிது அசைக்க தொடங்கியவள், காலை கெந்தியப்படியே மெல்லமாக நடக்க ஆரம்பித்திருந்தாள். இஷாவோ இன்று மருத்துவமனைக்கு பரிசோதிப்பிற்கு வரும்படி அழைத்திருக்க, சத்தியனை அழுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு பெண்ணவளை தயாராக கூறி தானும் தயாராகி வந்திருந்தான். ஆடவன் தனக்காக வாங்கி குமித்திருந்த ஆடைகளில் ஒன்றை எடுத்து

சுவாசம் – 8 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!