April 2026

அத்தியாயம் – 15

காரினை வேகத்தோடு செலுத்துக் கொண்டிருந்த ஆதுரிக்கு இப்போது எங்குச் செல்வது என்று கூட தெரியவில்லை. அவள் போக்கில் சென்றாள். “ஆதுரி ரிலாக்ஸ். எனக்கு தெரிஞ்சி இப்போ அவங்க நம்மளை பாலோ பண்ணலை. நீ மெல்ல ட்ரைவ் பண்ணு “என்க, “நம்ப முடியாது. சடன்னா முன்னே வர வாய்ப்பு இருக்கு “ “என்னால என்னை பாதுகாக்க முடியும். அவங்களால என்னை ஒன்னும் பண்ண முடியாது ஆதுரி. நீ பயப்பிடாதே “ “அவங்க கையில எவ்வளோ பெரிய அரிவாள் இருந்தது […]

அத்தியாயம் – 15 Read More »

அத்தியாயம் – 14

பெண் பார்த்து விட்டுச் சென்ற மறுநாளே தேவகாந்தன், ஆதுரி இருவருக்கும் திருமண தேதியை குறிக்க முடிவெடுத்தனர்.  “என்னைக்கு அவங்களோட கல்யாண தேதி முடிவானதோ அதே தேதி எனக்கும் அவளுக்கு கல்யாணம் நடக்கணும் “ என்றவனோ தேதியை கூறவே, “ஒவ்வொரு தடவையும் நீ தப்பு பண்ணிக்கிட்டே இருக்கே ? அப்படி என்னடா உனக்கு மோகம். ஒரு வேலை அந்த பையன் மேல எதுவும் பகை இருந்து பழிவாங்க ஆதுரியை கல்யாணம் பண்ண நினைக்கிறையா ?” என்று அவனின் தந்தையோ

அத்தியாயம் – 14 Read More »

அத்தியாயம் – 13

ஆதுரி கூறியதுப் பெற்றவர்களுக்கு மட்டும் அதிர்ச்சி இல்லை. அங்கே அவளைக் காண வந்த துருபதனுக்கும் தான். “ஆதுரி “ அதிர்ச்சியோடு அழைக்க, அப்போது தான் அவன் வந்ததையே உணர்ந்தனர். “வா துரு. நீ எப்போ வந்தே ?” என்று திருக்குமரன் முன்னே வந்து அவன் அதிர்ந்ததிலே கேட்டு விட்டான் என்பது புரிந்தே பேச்சினை மாற்ற நினைத்தார். “இவ எப்போ மேல இருந்து கீழே வந்தாலோ அப்போவே நான் உள்ளே வந்துட்டேன். உன்னால எப்படி இப்படி சொல்ல முடிஞ்சது

அத்தியாயம் – 13 Read More »

அத்தியாயம் – 12

தன் அறைக்கு வந்த ஆதுரி அவனின் தொடுகையும் இதழ் தீண்டலும் தீயாய் எரிய, மனமோ கசக்க வெறுப்பாய் உணர்ந்தாள். ஒரு அருவருப்பை தொட்டதுப் போல் மேனியெல்லாம் என்னவோச் செய்ய கைப்பையை படுக்கையில் வீசியவளோ குளியலறைக்குச் சென்றாள். சவரின் முன் அணிந்திருந்த உடையோடு அப்படியே நின்றவளின் எண்ணம் முழுவதும் தேவகாந்தனின் மீது தான். அவன் கூறிய வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்த வண்ணம் இருந்தது. அவன் தீண்டிய கரங்களையும், உதட்டையும் வெட்டி வீசத் தான் உள்ளம்

அத்தியாயம் – 12 Read More »

அத்தியாயம் – 11

அவளின் மூச்சுக்காற்று சுவாசம் உணர்ந்து வெகு அருகில் நெருங்கி செவ்விதழ் நோக்கி குனிந்தான். கொடூரனின் செயல் உணர்ந்தே தன் முகத்தை வெறுப்போடு திருப்பவே, அவனின் கோவத்தை சீண்டி தான் விட்டது. அவளின்  தாடையை  தன் ஒன்றை கையால் பற்றி முகத்தை அசைக்காதுச் செய்தவனோ, “உன்னை இப்போ இப்படியே நான்” என்றவாறு அதரத்தின் அருகே நெருங்கினான். மேனிகள் இரண்டும் உரசவே அருவருப்பாய் உணர்ந்தவளோ விழிகளின் அனலோடு நிற்கவே, தன்னைக் கண்டு இத்தனை வருடங்கள் பயந்தவர்களை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு, அவளின்

அத்தியாயம் – 11 Read More »

அத்தியாயம் – 10

மகனின் செய்யும் செயல் பிடிக்காது அவனுக்கே செக் வைப்பது போல் தொழிலா, பொண்ணா இரண்டையும் முன்னே வைத்தார். “சொல்லுப்பா ? ரெண்டுல எது வேணும் ?” என்க, ஏளனச் சிரிப்பு சிரித்தவனோ, “தப்பு பண்ணுறீங்கப்பா ? அப்பறம் பின்னாடி நீங்க தான் இதுக்கு வருந்த வேண்டியதா இருக்கும் “ என்று அப்போதே தந்தைக்கு முன் அறிவிப்பு செய்தான். “என்ன நடந்தாலும் பரவாயில்லை. இப்போ நீ இதுல எது வேணும்ன்னு சொல்லு “ “அப்பா, அண்ணனை பத்தி தெரிஞ்சும்

அத்தியாயம் – 10 Read More »

அத்தியாயம் – 9

நம்பியவர்களும் கைவிட்டு விட, என்ன செய்வது இப்போது என்ற எண்ணத்தில் எப்படியோ அலுவலகம் வந்துச் சேர்ந்தனர். இருவரின் முகமும் சரியில்லாது இருக்க அதனைக் கண்ட துருபதனோ என்னவென்றுக் கேட்டான். நடந்ததை ஆதுரி கூறவே, “எதுக்காக இப்படியெல்லாம் நடக்குது ? ஏதோ சரியில்லைன்னு தான் தோணுது. யாரோ இடஞ்சல் பண்ணுறாங்க “ என்று துருபதன் கேட்டதை வைத்துக் கூறினான். “யாரோ எல்லாம் இல்லை. அவன் தான் இதெல்லாம் பண்ணுறான். நம்ம கம்பெனி வேண்டான்னு சொன்னது கூட அவன் தான்.

அத்தியாயம் – 9 Read More »

அத்தியாயம் – 8

நிச்சியம் நல்லபடியாக முடிந்த சந்தோஷத்தில் திருக்குமரனின் குடும்பம் இருக்க, இன்னும் நாற்பது நாட்களில் திருமணம் என்பதால் அடுத்த ஏற்பாட்டினைச் செய்ய நினைத்தனர். வழக்கம் போல் அலுவலகம் செல்ல கிளம்பி வெளியே வந்த ஆதுரி, தங்கையின் வருகைக்காக காத்திருந்தாள். தினமும் தங்கையைச் செல்லும் வழியில் கல்லூரியின் விடுவது அவளின் வேலை தான். ஆதுரி வர இயலாத நேரம் கேப் புக் செய்து சென்று விடுவாள். அன்று அவளை அழைத்துக் கொண்டு கல்லூரி நோக்கி பயணித்தாள். அதே நேரம் இங்கே

அத்தியாயம் – 8 Read More »

அத்தியாயம் – 7

தன் தம்பியின் கைபேசியிருக்கு அழைத்த தேவகாந்தன் உடனே அறைக்கு வருமாறு கூறினான். அடுத்த இரு நொடிகளிலே என்னவோ ஏதோ என்று பதறி அடித்துக் கொண்டு வர, “கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி உன் கிட்ட பேசிட்டு போன பொண்ணு யாரு ? நல்லா தெரிஞ்ச பொண்ணு மாதிரி பேசுனே ? கூட இருந்த பெர்சன் யாரு ?” என்று மனதில் தோன்றிய கேள்விகள் அனைத்தையும் கேட்க,  ‘எதுக்கு அந்த பொண்ணை அண்ணே இவ்வளோ டீடைல்லா விசாரிக்கிறாரு ?’ யோசனையோடு

அத்தியாயம் – 7 Read More »

அத்தியாயம் – 6

நாட்கள் கடக்க அலுவலகத்தில் அமர்ந்து தந்தையோடுச் சேர்ந்து  தன் வேலையைப் பார்த்தவாறு இருந்தாள் ஆதுரி. திருக்குமரனின் கைபேசியிருக்கு அவர்களின் பேக்டரியில் இருந்து அழைப்பு வரவே எடுத்தார். “சொல்லுங்க ராஜன் ? என்ன விசியம் ?” “சார் ஒரு வாரமா மெட்டீரியல் எதுவுமே வரல. இருந்த மெட்டீரியல் முடிஞ்சிருச்சி. இனி வந்தா தான் வேலை நடக்கும். இந்த நேரம் தான் ஆபிஸ்ல இருந்து ரெண்டாயிரம் நம்ம பிரான்ட் டீஷர்ட் ஆடர் கேட்டிருக்காங்க. அது போக கவர்மெண்ட் காண்ட்ராக் வந்திருக்கு.

அத்தியாயம் – 6 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!