April 2026

அத்தியாயம் – 5

தன்னறையில் அமர்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்த தேவகாந்ததின் முன் அனுமதி வாங்கி வந்து நின்றான் வேலன். “என்ன விசியம் ?” “சார் நம்ம குமரன் கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் கூட போட்ட காண்ட்ராக் நேத்தோட முடிஞ்சது. இன்னைக்கு லோடு போக வெய்டிங்ல இருக்கு. அப்ரூவல் இருந்தா தான் நம்ம பிராசஸ் பண்ண முடியும் “  “அப்போ கேன்சல் பண்ணிரு “ “சார். இது மூலமா நமக்கு வருசத்துக்கு இலட்சக்கான பணம் லாபம் வந்துக்கிட்டு இருக்கு. எப்படி திடீருன்னு […]

அத்தியாயம் – 5 Read More »

அத்தியாயம் – 4

துருவின் பதிலுக்காக ஆதுரி அவனையேப் பார்த்தவாறு இருக்க, சில நொடி மௌனம் மட்டும் தான் நீடித்தது. “உனக்கு விருப்பம் இல்லைன்னா விடு துரு. அப்பா தான் ஏதோ “ என்று தந்தை தன்னிடம் கூறியதைப் பற்றி கூறிக் கேட்க, “எனக்கு ஓகே தான் ஆதுரி. கல்யாணம் பண்ணாம நான் ஒன்னும் காலம் முழுக்க சன்னியாசியாவா இருக்கப் போறேன். கண்டிப்பா பண்ணுவேன். அது நீயா இருந்தா பிரச்சனை இருக்காது பியூச்சர்ல. இருந்தாலும் என் பேமிலி மெம்பெர்ஸ் கிட்ட கேட்கணும்.

அத்தியாயம் – 4 Read More »

அத்தியாயம் – 3

தேவகாந்தன் – தியாகராஜன், அமராவதி தம்பதியரின் மூத்த மகன். இவனுக்கு ஒரு தம்பி வேலன், தங்கை விமலா. தான் நினைத்த ஒன்று எந்த உலகத்தில் எந்த முடுக்கில் இருந்தாலும் தன் கரங்களுக்கு கொண்டு வந்தால் தான் இவனின் மூச்சே செயல்படும். தூய்மை குணம் கொண்ட தூயவன் என்றெல்லாம் சொல்லி விட முடியாது இவனை. தன் குடும்பத்தாரை கூட தனக்கு கீழே தான் வைத்திருக்க வேண்டுமென நினைப்பவன். மாதுவை தவிர, மது, பிஸ்னஸ். இல்லீகல் சம்பாத்தியம், ரௌடிசம் என்று

அத்தியாயம் – 3 Read More »

அத்தியாயம் – 2

ஆதுரி, துருபதன் இருவருமே கல்லூரி பருவத்தில் இருந்த உயிர் நண்பர்கள். ஆதுரி சிறு வயதில் இருந்தே சென்னையில் வளர்ந்தவள் அவளின் பூர்வீகமே சென்னை தான். ஆனால் துருபதனுக்கு அப்படியில்லை. மதுரை அருகே இருக்கும் ஒரு சிறிய கிராமம். குடும்பத்தார் அனைவரும் அங்கு இருக்க படிப்பதற்க்காக மட்டுமே இங்கு வந்தான். ஒரே வயதினைக் கொண்ட இருவருமே ஒரே பிரிவினை எடுத்து கல்லூரியில் படிக்க நட்பு வளர்ந்தது. துருபதன் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டான்.  முதல் சில மாதங்கள் யாரென்றே தெரியாது

அத்தியாயம் – 2 Read More »

அத்தியாயம் – 1

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று ஏட்டில் எழுதி வைத்தது போல, எல்லா ஊர்மக்களும் வாழுமிடம் தான் சென்னை. தமிழகத்தின் முதன்மை வாசிகளை தன்னம்பிக்கை வாசிகளாக மாற்றும் சென்னையில் எப்போதும், எந்த நொடியும் பரப்பரப்பு தான். அப்படிபட்ட சென்னையில் முக்கியமான இரண்டு இடங்கள். ஒன்று குமரன் கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ். மற்றொன்று டி.ஆர் ஃபேப்ரிக் பிரைவேட் லிமிட். தமிழ்நாட்டில் மட்டுமல்லாதது இந்தியா முழுவதும் தங்களின் கிளைகளைப் பரப்பவது தான் இவர்களின் நோக்கம். அதற்க்காக இருவருக்குமிடையில் போட்டி என்பது

அத்தியாயம் – 1 Read More »

சுவாசம் – 7

தம்பியின் புகைப்படத்தை வெறித்தபடியே தம்பி கடந்த காலத்தில் தன்னிடம் பகிர்ந்து கொண்ட காதலை பற்றி சத்தியனிடம் கூறினான். அக்னி கூறியவையை திகைப்புடன் கேட்டவனோ “அப்போ நீயும் ஸ்வீட் ஹார்ட்டும் ஒருத்தர் ஒருத்தர் அப்போவே பாத்துருக்கீங்க ரைட்?” என்றதும் அந்நிகழ்வை நினைத்து லேசாக இதழ் விரித்தவன் “பாத்துருக்கோம்.. ஆனா நான் தான் சூர்யாவோட அண்ணன் அவளுக்கு தெரியாது” “அப்புறம் ஏன்டா தெரியாத மாதிரி கேட்ட” “அது தான் நல்லதுன்னு தோணுச்சு.. ஸ்கூல் படிக்கும் போது பாத்தது.. சோ நான்

சுவாசம் – 7 Read More »

முரடன் 10

பகுதி 10 “என்னடி இப்படி திடீர்னு சொல்ற, இந்த மாசம் முழுக்க நீ வேலைக்கு வருவேனு நினைச்சேன்” என வருத்தமாக கூறிய தோழியிடம்… “மேரேஜுக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. அதனால இனிமே வேலைக்கு போக வேண்டாம்னு அப்பா சொல்லிட்டாரு. அதான் இன்னைக்கே கடையில சொல்லிட்டு போயிட்டலானு நினைக்கிறேன்” என்றாள் ரூபிணி. “ஏய் ரூபி, அட்லீஸ்ட் இன்னும் ரெண்டு நாளைக்கு மட்டுமாது வாடி. நீயும் நானும் எங்கயாவது வெளியில போயிட்டு வரலாம்” என அவள் கூற…

முரடன் 10 Read More »

32. அவளை மறக்கத்தான் (இறுதிப் பகுதி)

.32. அவளை மறக்கத்தான். லண்டன். தினேஷ்   கோபத்தில் ஜெனியை தரக்குறைவாக பேசிவிட்டு, தூங்க போய் விட்டான். இனி மேல் அவனுடன் இருக்க  அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.   விடியற்காலை 4 மணி  இருக்கும். O டிகிரி  டெம்பரேச்சர் இருந்தது. இலேசாக  ஐஸ்கட்டியாக மழை பெய்தது. அதை  பொருட்படுத்தாமல், தன் உடமைகள் மற்றும் நிகேதன் உடைமைகளை எடுத்துக் கொண்டு   தன் காரில் கிளம்பினாள். அந்த அதிகாலை வேளையிலும் டிராபிக் இருந்தது . ஒரு மணி

32. அவளை மறக்கத்தான் (இறுதிப் பகுதி) Read More »

அத்தியாயம் 20

  ​ரஞ்சன் உண்டு முடித்து எழுந்தவுடன் மரகதம் பேசினார், “ரஞ்சன் உன் கூட பேசணும்,” என்றார்.  அலுவலகத்திற்குத் திரும்பி நடந்தவன் திரும்பாமல் அப்படியே நிற்க,  அவரும் கையை கழுவி விட்டு எழுந்தவர், “மரத்தடிக்கு வா,” என்று விட்டு அவனை கடந்து சென்றார்.  நேரத்தைப் பார்த்தவன் அவர் பின்னே நடந்தான்.  மரத்தடியில் இருவரும் அமர்ந்திருக்க, ரஞ்சன் கையை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி நேரே பார்த்தபடி அமர்ந்திருந்தான். ​மரகதம் அவனைத் திரும்பிப் பார்த்தார்.  “உன்கிட்ட நான் இத்தனை நாள் பேசாமல்

அத்தியாயம் 20 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!