இறுதி அத்தியாயம்
காலையில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கும் ஓடி ஓடி களைத்தவன் அவள் தோளில் தலை சாய்க்க இவ்வளவு நேரமும் அடக்கி வைத்த பாரமெல்லாம் கண்ணீராய் வெளியேறியது. முதலில் யாழினியும் அணைத்தவள் அவன் கண்ணீரைக் கண்டு திடுக்கிட்டாள். “ஆதி“ “…..” “ஆதி“ “…..” “ஆதி இங்கே பாருடா. இங்க பாரு. நீ என்ன சின்ன குழந்தையா?” என்று யாழினி கேட்க ஆதி தன்னை கட்டுப்படுத்தியவன் அவளை தன் கை வளைவில் கொண்டு வந்தான். “பேபி என்ன மன்னிச்சிடு. நான் அப்போ வேணும்னே தப்பு செஞ்சேன். ஆனா இன்னைக்கு அவ்ளோ கவனமா இருந்தும் எப்டி தவறவிட்டேனு தெரில” என்று ஆதி பேச ஆரம்பித்த போது விஷ்ணுவும், மித்ராவும் உள்ளே வந்தார்கள். “பில் பே பண்ணியாச்சு மச்சி. கிளம்பலாம்” என்றவுடன் யாழினி வீட்டுக்கு அனைவரும் சென்றார்கள். அனைவரையும் வரவேற்ற யாழினியின் பெற்றோர் நடந்ததை விசாரிக்க அவர்களிடம் அனைத்தும் கூறினான். “அங்கிள் ஆன்ட்டி நான் யாழினிக்கிட்ட தனியா பேசணும்” என சொல்ல குணசேகரன் அனுமதி கொடுக்க யாழினியின் அறையை நோக்கி சென்றான். “பேபி“ அவனை பார்த்தவள் ஓடி வந்து அணைத்து கொண்டாள். “பேபி பேபி” என்றவன் முத்தத்தால் அவளை அர்ச்சித்தான். “நான் இன்னைக்கு ரொம்ப பயந்துட்டேன் பேபி” என்றவனை முறைத்தவள் “காலைல கிளம்பறப்ப ஒரு வார்த்த சொல்லிட்டு போனா என்ன?. உன் முகமே சரியில்லனு எவ்ளோ கவலப்பட்டேன் தெரியுமா?” “நம்ம டிமார்ட்ல பாம் இருக்குனு வினித் சொன்னான் பேபி. எனக்கு அந்த பதட்டத்துல ஒண்ணும் புரில. ஆனா உன்கிட்ட சொல்லி நீயும் பயந்திட்டினா என்ன பண்றதுனு தான் ஒண்ணும் சொல்லல“ “என்ன சொல்ற ஆதி. யார் பாம் வைச்சது?” என்ற யாழினியின் நடுங்கிய குரலில் “ஒண்ணும் இல்லடா. அத டிஃபியூஸ் பண்ணியாச்சு. வச்சது வசுதேவ்” என்று தலை குனிந்தபடி கூறினான். “ஆதி அவன் பண்ண தப்புக்கு நீ ஏன்டா தலைகுனியற?” “அவன் என்ன தான் கெட்டது பண்ணாலும் அவனோட கம்பெனியே பாம் வைக்கற அளவுக்கு போவானு நினக்கல. அதுவும் நம்ம கம்பெனி தான. அவன எப்படி கொண்டு வரணும்னு நினச்சேன்” என ஆதி வேதனையுடன் கூற “விடு ஆதி. அவன சரி பண்ணிடலாம். நான் பாத்துக்கறேன்” என்று சொன்னவளை கசப்புடன் பார்த்தான். “உன்ன எப்படி கடத்தினாங்க பேபி?” “நீ ஆஃபிஸ்க்கு வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கறதா தேவ் சொன்னானு வெளிய வந்தப்ப கடத்திட்டு போயிட்டாங்க“ “நான் அப்போ இருந்த பதட்டத்துல ஒண்ணும் யோசிக்கல“ “அது தேவ்வோட பிளான் பேபி. பார்ட்டிலயும் அவனுங்க தான் பிளான் பண்ணிருக்காங்க“ “என்ன மன்னிச்சிடு பேபி. என்னால அப்பயும் உனக்கு சந்தோஷம் இல்ல. […]
