அத்தியாயம் 25
பாற்கரனின் வாழ்க்கையில் காலச் சக்கரம் சுழன்று, அந்த ஆறு மாதங்களும் ஓடி மறைந்திருந்தன. பார்கவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது. வீடே கொண்டாட்டத்தில் இருக்க வேண்டிய சூழல் அது. தொட்டிலில் படுத்துக்கொண்டு அந்தப் பிஞ்சு உயிர், ஒருமாத குழந்தை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது.. பார்கவி உறங்கும் குழந்தையை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. “கரன்..” என்றாள் பார்கவி.. “ம்ம்.. சொல்லு..” என்றான், “நைட் எல்லாம் சோபாவுல படுத்தீயா?..” “ம்ம்.. ஆமா..” “ஏன், கட்டில்ல படுக்கலை நீ?..” என்ற கேள்வியில் […]
