August 2026

அசுரன்-2

ஆரம்பத்தில் இருந்தே ஜோ பிறரை நம்பாமல் முக்கிய வேலைகளைத் தானே எடுத்துச் செய்வது அவன் வழக்கம். அன்றும் அப்படித்தான் ஒரு ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டிய சூழ்நிலை.    தன்னுடைய உயிர் நண்பன் மோகனுடன், மும்பையின் வெளிப்புறத்தில் இருக்கும் சொகுசு பங்களாவில் முகாமிட்டான்.   எதிர்பார்த்தபடியே ஒப்பந்தம் நல்லபடியாய் நிகழ்ந்தேறியது. நள்ளிரவு என்றும் பாராமல் ஒப்பந்த வேலை முடிந்ததும் ஜோ அங்கிருந்து புறப்பட ஆயத்தமானான்.   இருவரும் பங்களாவில் இருந்து வெளியில் வரும் நேரத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு, ஜோவின் […]

அசுரன்-2 Read More »

அசுரன்-1

எண் திசைதனில் எத்திசை கண்டாலும் ஒரே வண்ணமே ஒழுகிடும் இரவு நேரமது..   அழகு தேவதைப் பெண்ணான நிலவு மகள், தனது நட்சத்திர தோழிகளுடன் வானத்து வீதிதனில் இன்பமயமாய் உலா போய்க் கொண்டிருந்தாள்….   தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை கொட்டித்தீர்த்த காரணத்தினால், மும்பை மாநகரின் வீதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிய படி காணப்பட்டது…   இதோ இப்பொழுதும், விடாது பொழியும் மழையின் துவக்கச் சாரல் அடிக்க ஆரம்பித்துவிட்டது…   குளிருக்கு இதமாக தன்னுடைய கனத்த போர்வையை

அசுரன்-1 Read More »

இறுதி அத்தியாயம்

அன்று இரவு ஒரு வழியாக உத்தமனை சரிக்கட்டி ராதிகாவை அவர்களுடன் தங்கிக் கொள்ள சம்மதிக்க வைத்த அங்கயற்கண்ணி, இரவு உணவை தயாரிக்க தொடங்கினாள். வழக்கம் போல் உத்தமனும் அவளுக்கு உதவி செய்ய போக, அப்பொழுது அறையிலிருந்து வெளியே வந்த ராதிகாவுக்கோ இதை பார்த்ததும் ஏனோ மனம் வெறுமையாக இருந்தது. இருவரையும் ஒன்றாக சமையலறையில் பார்த்ததுமே மீண்டும் உள்ளேச் சென்று கதவை மூடிக் கொண்டு அதன் மீது சாய்ந்து நின்றவள் விழிகளின் ஓரம் கண்ணீர் வழிந்தது. பொக்கிஷமாக கிடைத்த

இறுதி அத்தியாயம் Read More »

அத்தியாயம்- 23

வீட்டின் கதவை கடும் சினத்தோடு திறந்துக் கொண்டு நேராக உள்ளேச் சென்றவனின் மனம் உலையாக கொதித்துக் கொண்டு இருந்தது. அவன் பின்னால் வந்த அங்கயற்கண்ணியோ ராதிகாவை உள்ளே வருமாறு அழைத்தாள். ராதிகாவோ தயங்கி நிற்க, “அட வாங்க” என்று அவளின் கரத்தை பிடித்து உள்ளே இழுத்துச் சென்றவள் ராதிகாவை சோபாவில் அமர வைத்து விட்டு குடிப்பதற்கு தண்ணீரை கொடுத்தவள், “இருங்க பாப்பாவை படுக்க வச்சிட்டு வரேன்” என்று சொன்னவளிடம், சரியென்று தலையாட்டினாலும், “பேபிக்கு எத்தனை மாசம்?” என்று

அத்தியாயம்- 23 Read More »

அத்தியாயம்- 22

மெல்ல மயக்கம் தெளிந்து கண்களை திறந்த ராதிகாவோ சுற்றி முற்றி பார்த்தாள். பார்த்தவுடனே புரிந்தது அது மருத்துவமனை என்று. பின் அங்கே கையில் குழந்தை ஒன்றை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்த உத்தமனை பார்த்ததுமே, அவளுக்கு கண்கள் கலங்கி போயின. “உத்தமன்” என்று மீண்டும் அவன் பெயரை அவள் அழைக்க, குழந்தையிடம் தன் கவனத்தை வைத்துக் கொண்டு இருந்தவன் நிமிர்ந்து அவளை பார்த்தான். என்ன வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு கூட அவன் கேட்கவில்லை. அருகிலிருந்த நேசமல்லி

அத்தியாயம்- 22 Read More »

அத்தியாயம்- 21

மறுநாள் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு வந்து இருந்தார்கள் உத்தமனும் அங்கயற்கண்ணியும். குழந்தையை கையில் வைத்துக் கொண்டு சிடுசிடுவென அமர்ந்து இருந்த உத்தமனை பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் அருகில் அமர்ந்து இருந்தாள் நேசமல்லி. “சிரிக்காதடி” என்று உத்தமன் மெதுவாக சொல்ல, “பின்ன சிரிக்காம என்ன பண்ண சொல்றீங்கப்பா. குழந்தைக்கு தான் ஊசி போட வந்தோம். ஆனால் நீங்க பண்றதை எல்லாம் பார்த்தால் என்னவோ உங்களுக்கு ஊசி போட வந்தது போல பண்ணிட்டு இருக்கீங்க” என்றவளை

அத்தியாயம்- 21 Read More »

அத்தியாயம்- 20

அன்றிலிருந்து அவர்கள் வாழ்க்கை இதமாக பயணித்துக் கொண்டு இருந்தாலும், உத்தமனின் மனதில் மட்டும் அங்கயற்கண்ணிக்கு எப்பொழுது பழைய ஞாபகம் வருமோ என்ற சிறு அச்சம் இருக்க தான் செய்தது. உள்ளத்தில் பயம் இருந்தாலும், அவனின் பெரிய நேசமல்லியின் மீதும் சின்ன நேசமல்லியின் மீதும் அளவுகடந்த காதலை வைத்து இருந்தான் இந்த உத்தமன். இப்பொழுது எல்லாம் அங்கயற்கண்ணியின் உடல் எடையை கூட பற்களை கடித்து தாங்குவதில்லை. அவள் எடையை தாங்கி தாங்கி அவனுக்கு பழகி போய் இருக்க, அவளே

அத்தியாயம்- 20 Read More »

அத்தியாயம்- 19

உத்தமன் கூறியதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்த அங்கயற்கண்ணி  “அப்போ நான்னா உங்களுக்கு இஷ்டமா?” என்று கேட்டாள். “ரொம்ப இஷ்டம்” என்று உணர்வு பூர்வமாக உத்தமன் சொல்ல, அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி தான். இது தான் வேதனையிலும் இன்பம் காண்பதோ. குனிந்து நின்று இருந்தவனை விழிகளால் தன் அருகில் வருமாறு அழைக்க, அவனும் சிறு புன்னகையுடன் மேலும் அவள் முகத்தருகே குனிந்தவனின் இதழில் இதழ் பதித்தாள் நேசமல்லி. இதை சற்றும் எதிர்பார்க்காத உத்தமனோ சட்டென்று

அத்தியாயம்- 19 Read More »

அத்தியாயம்- 18

வெகுநேரமாகியும் உத்தமன் குளியலறையை விட்டு வெளியே வராமல் இருப்பதை கவனித்த நேசமல்லியோ சற்று பதற்றமாகி தான் போனாள். குழந்தையை கரத்தில் ஏந்திக் கொண்டு மெதுவாக  படுக்கையறைக்குள் நுழைந்தவள் யோசனையுடன் “ஏன் இவரு இவ்வளவு நேரம் வெளியே வராமல் இருக்காரு. ஒருவேளை பாத்ரூமுக்குள்ள வழுக்கி விழுந்து மயங்கிட்டாரோ” என்று பதறியவள் பிள்ளையை தொட்டிலில் கிடத்தி விட்டு வேகமாக குளியலறை கதவை படார் படார் என்று தட்டி “ப்பா என்னாச்சு? மூச்சு பேச்சு ஏதாவது இருக்கா? இல்ல மயங்கி போயிட்டீங்களா?”

அத்தியாயம்- 18 Read More »

அத்தியாயம்- 17

நடந்ததை நினைத்து பார்த்த உத்தமன் நிலை மொத்தமாக உரு குலைந்து போக, அப்படியே காரில் அமர்ந்து இருந்தவனின் கன்னங்களில் அவன் கண்ணீர் தடங்கள். உத்தமனின் உள்ளம், தேகம், வதனம், கரங்கள் என மொத்த அங்கமும் நடுங்க ஆரம்பிக்க, அவனால் நிலை கொள்ளவே முடியவில்லை. இப்பொழுது தான் போதையில் நடந்தவை அனைத்தும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து அவனை சித்திரவதை செய்ய, போதையில் அவன் செய்த தவறுகளை எண்ணி வெட்கி போனான். உடன் அன்று இரவு அவன் ராதிகாவுடன் சேரவில்லை

அத்தியாயம்- 17 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!