August 2026

அசுரன்-12

நிலவினை தொலைத்துவிட்டு ஏங்கித் தவித்த வானம், தன் சோகத்தைப் பிறருக்கு உணர்த்த மேனியெங்கிலும் இருள் வண்ணம் பூசிக் கொண்ட நள்ளிரவுப் பொழுது அது.   என்றேனும் ஒரு நாள் என் தேவதைக்கு எனது காதலின் வீரியம் விளங்கும் எனும் நம்பிக்கையோடு நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தான் ஜோ.   அங்கிதா அமர்ந்திருந்த இடத்திற்கு நேர் மேலே சுவற்றில் கீறல் இருக்க, அதன் வழியே மழைத் தண்ணீர் கசிய  ஆரம்பித்தது.   வெளியில் மழை அதிகமாகப் பெய்த  காரணத்தினால், தண்ணீர் சொட்டு சொட்டாக […]

அசுரன்-12 Read More »

அசுரன்-11

காதலின் பிடியில் சிக்கித் தவிக்கும் அந்த பனி அரக்கன், மங்கை தேகம் தீண்டிய நொடிதனில் வெந்து தணலாகினான். அவன் தேகங்கொண்ட தீயின் அளவை, மூச்சுக் காற்றே முன்னுணர்த்தியது பூவையவளுக்கு.   “ஆ…” என்று கத்திக்கொண்டே விழுந்த வேகத்தில் எழுந்து நின்றாள் அவள்.   “என்னடி? என்ன பண்ணுற?.. இங்கிருந்து தப்பிச்சுப் போக சாவிய தேடுறயா?” என்று சடுதியில் பேச்சை மாற்றியிருந்தான் ஜோ..   பதறிப்போனவள், “ஐயோ இல்ல.. நான் துப்பாக்கியால உன்ன சுட்டேன்ல? அந்த காயத்துக்கு மருந்து எதும் போடலயே,

அசுரன்-11 Read More »

அசுரன்-10

பறவைகளின் கீச்சொலியாலும், பனிப் போர்வை கொண்ட புல் வெளியாலும் அந்த அதிகாலைப் பொழுது அழகாய் புலர்ந்து கொண்டிருந்தது.   அதன் அழகினை ரசிக்க விரும்பாத ஜோ, அங்கிதாவைத் தோளில் தூக்கியபடியே, ஒளிந்தும் மறைந்தும் நகர்ந்து சென்று கொண்டிருந்தான். ஒரு மரத்தடியைக் கண்டதும், அவன் கண்கள் சந்தோஷத்தில் மின்ன, பரவசத்தோடு அதனருகில் சென்று ஒளிந்தான்.   காவலர்கள் கூட்டம் மும்மரமாய் ஏதோ அளவளாவிட, அந்த அவகாசத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தான் ஜோ.   அவளை மரத்தடியில் சாய்ந்த வாக்கில் அமர்த்தியவன்

அசுரன்-10 Read More »

அசுரன்-9

துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு, மிகச்சரியாய் ஜோவின் இடது கையை பதம் பார்த்தது. மளமளவென வழிந்த ரத்தத்தைக் கண்டு அங்கிதா அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.    பிற உயிர்களைக் காப்பாற்றுவதே தன் வாழ்வின் லட்சியம் என்று வாழ்ந்திருந்த ஒருத்தி, ஒரு உயிரைக் காவு வாங்குவதற்காக முதல்முறையாக துப்பாக்கியைப் பயன்படுத்தியதால், அவள் உடல் அறிவைத் துறந்து அனிச்சையாய் செயலாற்றிக் கொண்டிருந்தது.   ஜோ, “முட்டாள்… புல்லட் சவுண்ட் கேட்டு எல்லாரும் இப்ப வெளியில வந்திடுவாங்க. கன்ன‌ முதல்ல திருப்பிக்கொடு” என்று அவள் கையிலிருந்த ஆயுதத்தை உடனடியாய் அபகரித்தான்.   அந்தக்

அசுரன்-9 Read More »

அசுரன்-8

  கேள்வி கேட்டவனையே அச்சுறுத்தும் படியான ஜோவின் உரையாடலைக் கேட்டு கவர்மெண்ட்டிற்கும் போலீசுக்கும் பயங்கர குழப்பம். தன் தலையைத் தப்புவிக்க அரசாங்கம், இந்த கேஸை காவலர்கள் பொறுப்பிலேயே விட்டுவிட்டது.   போதாக்குறைக்கு ஜோ இப்பொழுது இந்த நிமிடம் இந்தியாவிற்குள் எங்கு இருக்கிறான் என்பதே அவர்களுக்குத் தெரியாது…   அப்படியே ஜோ இருக்குமிடம் தெரிந்தாலும் அங்கு சென்று, அவனோடு சண்டையிட்டு அந்த பெண்ணை மீட்டு வரும் தைரியம் அவர்களிடம் கிடையாது. ஆதலால் வழக்கம்போல பூசி மொழுகிடும் வேலையைச் செய்தார்கள்…

அசுரன்-8 Read More »

அசுரன்-7

எப்போதும் எங்கேயும் இறங்கிப் போகாதவனுக்கு, இந்த சின்னஞ்சிறு சிட்டுக் குருவியிடம் தன் பலம் எடுபடாமல் போனதில் சற்றே திமிர் தலைதூக்கி விட்டிருந்தது.   போக்கு காட்டும் அவளைக் கண்டுகொள்ளாமல், தயார் நிலையிலிருந்த மற்ற அனைத்து அறைகளை, இறுதிப் பார்வையிடுவதற்காகப் புறப்பட்டுச் சென்றான் ஜோ…   அவன் அங்கிருந்து போன பிறகுதான் அங்கிதாவிற்கு உயிரே திரும்பி வந்தது‌‌. ஆசுவாசமாய் ஒரு இடத்தில் கால் நீட்டி அமர்ந்தாள். அசதியில் கண்களைச் சுழற்றிக் கொண்டு வர, அப்படியே உறங்கியும் போனாள்.   அப்பொழுதுதான் கூட்டத்தில் ஒருவன்

அசுரன்-7 Read More »

அசுரன்-6

காதலெனும் அசுரன் எத்தனை கொடூரமானவன்!!    சிரிக்கத் தெரியாத ஒருவனையும், சேவையுள்ளம் கொண்ட பெண்ணையும் இணைத்து நிறுத்தினால், பாவையவள் படப்போகும் பாடு எவ்வளவு?!?!   அங்கிதாவுக்கு மயக்க மருந்தின் உபயம்‌ இல்லாமலேயே உடல் கிறங்கிச் சரிந்திடத் தயாராகியது.   ஜோ நிதானமான குரலில், “உன்ன பார்த்ததும் புடிச்சிருச்சு.. எனக்குத் தெரியும், உனக்கும் எனக்கும் செட் ஆகாதுனு‌. விலகிப் போகத்தான் நினைச்சேன், விதி நம்மள சேர்க்குது.    என்னால உனக்கு இப்போ கொடுக்க முடிஞ்சது ரெண்டே ஆப்ஷன்தான், ஒண்ணு நீ எங்களோட

அசுரன்-6 Read More »

அசுரன்-5

அங்கிதா ஆராய்ச்சி செய்யும் விதமாய் ஒவ்வொரு இடத்தையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை ஜோ கவனித்து விட்டான்.   “ஓய்… அங்கிட்டும் இங்கிட்டும் வேடிக்கை பார்க்காம ஒழுங்கா என் பின்னால வா” என்று அவளின் கரம் பற்றி இழுத்தான்.   அங்கிதாவின் உடல் அவனோடு சென்றாலும் பார்வை அந்த வீடுகளின் மேலேயே பதிந்திருக்க, “இது என்ன மாதிரியான வீடு? இத எப்படி டிசைன் பண்ணீங்க? எந்த என்ஜினியர் உங்களுக்கு இந்த ஐடியாவ கொடுத்தான்?” என்றாள்.   “நீ எங்கள பாராட்டுறயா, இல்ல கேலி

அசுரன்-5 Read More »

அசுரன்-4

தொண்டை கட்டும்படி கத்தி கத்தி ஓய்ந்து போன அங்கிதா மீண்டும் படுக்கையில் விழுந்து தூங்கிப் போனாள்..   அவள் மீண்டும் கண் விழிக்கும் பொழுது ஜோ அவளுக்கு எதிரே அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டு இருந்தான்..   பதறியடித்துக் கொண்டு வேகமாய் எழுந்தாள் அங்கிதா..   ஜோ மிகவும் சர்வ சாதாரணமாக, “எதுக்கு இப்படி பதறுற?.. நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். உன்னால எனக்கு ஆக வேண்டிய வேலை நிறைய இருக்கு…” என்றான்.   அங்கிதாவுக்கு அவன் வார்த்தைகளைக் கேட்ட பிறகு உள்ளுக்குள்

அசுரன்-4 Read More »

அசுரன்-3

கடவுளின் படைப்பில் ஒரு சில ஜீவன்கள் மட்டுமே இன்னொரு உயிரையும் தன்னைப்போல் நினைக்கும் மனப்பாங்கு கொண்டவை.   அந்த வரிசையில் ஒருத்திதான் அங்கிதாவும்…   மை விழியால் கண்ணசைத்து, சாயப் பூச்சால் ஜாலம் காட்டி காளையர் மனதைக் கள்ளச் சிரிப்பில் ஏய்த்து விளையாட வேண்டிய பருவ வயது பெண், கடமை, கொள்கை, சேவை என்று படைத்தவனையும் வியக்க வைத்திருக்கிறாள்.   கடல் போல வீடு இருந்தும், ‘என் நோயாளிகள் எப்பொழுது வந்தாலும், தாமதிக்காமல் அவர்களுக்கு நான் ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும்…’ என்பதற்காக, தன்னுடைய க்ளினிக் உள்ளேயே தனக்காக ஒரு

அசுரன்-3 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!