இதயம் 20
சாந்தமூர்த்தித் தன் குடும்பத்தைப் பற்றிக் கண்டு கொள்ளாததால் ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் இப்போது தான் ஏதோ எல்லாவற்றையும் சரி செய்வது போல் சீன் போட அவள் ஆத்திரத்துடன் அவன் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இந்நிலையில் அவன் தனிக்குடித்தனம் போறீங்களா எனக் கேட்க இன்னும் கோபமானாள். “நேத்ரா தனியா போய் இருந்தா ஓகே தானா?” “தனியா அவங்க வரமாட்டாங்க சித்தப்பா” “நான் சொன்னா அவங்க வருவாங்க. நான் அவங்ககிட்ட பேசறேன்” எனச் சொல்ல அவள் உறுதியாக மறுத்தாள். […]
