காதல்- 8
அத்தியாயம்- 8 மறுநாள் என்ன பொய் சொல்லிவிட்டு ஆனந்த்தை பார்க்க போவது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு மெத்தையிலே அமர்ந்து இருந்தாள் மகாலட்சுமி. ருத்ரதேவ்வோ வெளியே போவதற்காக தயாராகி வந்தவன் இன்னும் கிளம்பாமல் அமர்ந்து இருக்கும் மகாலட்சுமியை பார்த்தான். “இன்னும் கிளம்பலையா மகா?” என்று கேட்டான் ருத்ரதேவ். இந்த இரண்டு நாட்களாக தான் அவளின் பெயரை அடிக்கடி கூப்பிட்டு அழைக்கிறான். மகாவோ நிமிர்ந்து அவனை பார்த்தவள் “இல்ல நீங்க மட்டும் இன்னிக்கு சுத்தி பார்த்துட்டு வாங்க. நான் வரல” […]
