சுவாசம் – 6
இதழிடம் ஆடவன் பேசி கொண்டிருந்தாலும் அக்னியின் புறம் பெண்ணவள் பார்வை செல்வதையும் கவனிக்க தவறவில்லை. நண்பனையும் கவனித்தப்படியே சத்தியன், தனது இடது கரத்தை பெண்ணவள் முன் நீட்டி “எனக்கு உன்கூட பேச ரொம்ப பிடிச்சிருக்கு பீ ஃப்ரெண்ட்ஸ்” என்றதும் பெண்ணவளுக்கு மூச்சு வாங்க தொடங்க, அவன் பேசும் போதெல்லாம் தான் இப்படி செய்தால் அவனுக்கு வருத்தமாக இருக்கும் என்று மூச்சை இழுத்துவிட்டு தன்னை கட்டுப்படுத்தியவள் நீட்டியிருந்த கையை அழுத்தமாக பார்த்தாள். அதன் அர்த்தம் புரிந்து கொண்டவனோ “உனக்கும் […]
