காதல்- 9
அத்தியாயம்- 9 மெல்லிசையை அழைத்துக் கொண்டு அவனது அறையினுள் நுழைந்தான் ஜீவானந்தன். அறைக்குள் வந்ததுமே ஜீவாவின் கரத்திலிருந்த தன் கரத்தை வெடுக்கென்று உருவிக் கொண்ட மெல்லிசை, “என்ன சார் இதெல்லாம்?” என்று கோபமாக கேட்டாள். ஜீவாவோ இவளை எப்படி சமாளிப்பது என்று இமைகளை இறுக மூடி திறந்தவன், “என்ன இதெல்லாம்ன்னா? நீயுமா இதையே கேட்ப?” என்று கீழே இருப்பவரிடம் பேசியது போல் இவளிடம் பேச ஆரம்பிக்க, தன் வலக்கரத்தை உயர்த்தி அவனை நிறுத்தியவள், “உங்களுடைய இந்த ஜித்து […]
