April 2026

ரசிகை – 14

பூர்ணிமாவின் பாதுகாப்புக்குத் தான் பொறுப்பு என்று தெரிந்தும், இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததைச் சூர்யா மன்னிக்க மாட்டான் என்பது பாலாஜிக்கு நன்றாகத் தெரியும். தனுஜா, பாலாஜியின் முகத்தில் இருந்த அந்த ஆக்ரோஷத்தைப் பார்த்து, அவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு ஓரமாக நின்றாள். தன் குறும்புத்தனத்தால் விளைந்த வினை இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. “அத்தான்…” என்று மிகவும் மெல்லிய குரலில், தழுதழுத்தபடி அவனை அழைத்தாள்.  அவளது கண்கள் […]

ரசிகை – 14 Read More »

ரசிகை – 13

அன்று செவ்வாய்க்கிழமை… அடுத்தநாள் புதன்கிழமை அபியின் பிறந்தநாள். அதற்காகத்தான், பூர்ணிமா அபியை சந்திக்கவும் பரிசு பொருட்கள் வாங்கவும் சம்மதம் சொல்லி இருந்தான் சூர்யா. அவளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காகப் பாலாஜி தனது காரை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். “அஞ்சு நிமிஷத்துல கீழ வந்திடுறேன் பாலாஜி! நீ உட்காரு…” என்று மேலிருந்து குரல் கொடுத்தவள், சொன்னதற்கு மாறாகக் கொஞ்சம் பொறுமையாகவே தயாராகினாள். பாலாஜிக்கு அது விசித்திரமாகத் தெரிந்தது. ‘எப்போதும் சொன்ன நேரத்திற்கு முன்பாக வேலையை முடிக்கும் பூர்ணிமா இன்று ஏன்

ரசிகை – 13 Read More »

ரசிகை – 12

ஆர்யா அந்த நேரம் தன் புது கேர்ள் ஃப்ரெண்ட்டோடு, ஒரு சினிமா தியேட்டரில் உல்லாசமாய் கொஞ்சி குலாவிக் கொண்டிருந்தான். காதலியின் பேச்சில் லயித்திருந்தவனுக்கு, தனுஜாவிடம் இருந்து போன் வந்ததும் எரிச்சலாக இருந்தது; துளியும் யோசிக்காமல் அழைப்பை நிராகரித்து விட்டு மீண்டும் கடலையைத் தொடர்ந்தான். ஆனால், அடுத்த நொடியே அவனது போன் அதிர்ந்தது. திரையில் ‘எமர்ஜென்சி’ என்ற ஒற்றை வார்த்தையாக தனுஜாவிடமிருந்து ஒரு மெசேஜ் வந்து விழுந்தது. இது தனுஜா அவனுக்கு அவ்வப்போது கொடுக்கும் அபாய எச்சரிக்கை! பிரச்சனை

ரசிகை – 12 Read More »

ரசிகை – 11

பிரபா தன் பழைய ஸ்கூட்டரை உருட்டிக்கொண்டு பேருந்து நிலையத்திற்குச் சென்றார். மதிய நேரத்து வெயில் மண்டையைப் பிளந்தது. வெயிலின் கொடுமையால் அவர் சட்டை முழுவதும் நனைந்து, வியர்வை வழிந்து கொண்டிருந்தது. அந்தப் புழுக்கத்திலும், எரிச்சலிலும் அவர் அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி காத்துக் கிடந்தார்.  சரியாக அரை மணி நேரத்திற்குப் பிறகு, புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு அரசுப் பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து தள்ளாடியபடி இறங்கினார் தங்கதுரை. பெயர் தான் ‘தங்கம்’, ஆனால் அவரது உருவம் அந்தப் பெயருக்கு

ரசிகை – 11 Read More »

அத்தியாயம் 29

கவிதா அவளை நிதானமாக பார்த்து, உன் மருமகளுக்கு கல்யாணமாகி ஐந்து வருஷமாகுது. இன்னும் குழந்தை இல்லை தானே. பாவம் உன் புள்ளையும் அப்பாவாக வேண்டாமா! எனக்கு நீ சொன்ன அறிவுரையை நீயே பின்பற்றி அந்த பொண்ண உன் பிள்ளைக்கே கட்டி வச்சிடேன் என்று பதிலடி கொடுத்தவுடன் அந்த பெண்மணி வாயை மூடிக்கொண்டு போய்விட்டாள். அவள் சென்ற பிறகு கவிதா வந்துட்டாங்க ஊருக்கு உபதேசம் பண்ண, தான் வீட்டிலேயே ஆயிரம் வச்சிக்கிட்டு அடுத்தவங்க வீட்டை ஆராய வந்துட்டாங்க என்று

அத்தியாயம் 29 Read More »

தூரிகை 25❤️

தன்னை தாக்கியவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்து விட்டு குழலி தன்னுடன் இருப்பதால் அவன் சென்னைக்கு செல்லாமல் வேலூரை நோக்கி பயணப்பட்டான். அவர்கள் சென்றவுடன் கர்ணா கண் விழிக்கும் போது அவர்களின் வண்டி வேலூர் பக்கம் திரும்புவதை பார்த்தவன் சேகருக்கு அழைத்து அவர்களின் வரவை குறித்து  அறிவித்தான்  அவனும் வாலாஜாவில் அவனுக்காக காத்திருந்தான்.  இங்கு வண்டியில் ஏறியவர்களோ அமைதியாக இருக்க, “ஏங்க உங்க பசங்க எப்படி அவங்களோட வந்தாங்க ” என்றாள். “எனக்கே தெரியல அவனுக்கு ரெண்டு

தூரிகை 25❤️ Read More »

தூரிகை 24❤️

அமுதன் சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் போது, மூன்று வண்டிகள் முன்னும் பின்னும் மறித்து நிற்க பின்னே கைகட்டி நின்றவனின் முன்பு கருணா முதலில் இறங்கினான். “அட நீதானா கர்ணா” என்று அவன் கேட்க அவனைப் பார்த்து மர்ம புன்னகை செய்தான். கர்ணா!! “என்ன கர்ணா நான் பேசிட்டு இருக்கேன் நீ சிரிக்கிறியே” என்று கூறும்போதே பின்னிருந்து ஒருவன்  அவன் இடுப்பில் ஒரு கத்தியை இறக்கினான். ஒருவன்  அதை ஜீப்பின் உள்ளிருந்து பார்த்த குழலி, “ஐயோ!”  என்றுக்

தூரிகை 24❤️ Read More »

அத்தியாயம் 23

  ​ஒரு வலிய கரம் வந்து அந்த அலைபேசியை எடுத்து, “ஹலோ” என்றது.  மயூரி சட்டென எழுந்து அமர்ந்து ரஞ்சனை பதற்றத்துடன் பார்த்தாள். அவன் இவளைக் கவனிக்காமல், “ஹலோ சொல்லுங்க” என்றான்.  எதிர் திசையில் சோனா என்ன சொன்னாளோ..? அமைதியாக இருந்தவன் மயூரியைப் பார்க்க, அவள் கண்கள் விரிய அவனைப் பார்த்தபடி இருந்தாள். அவன் ஏதும் பேசாமல் அலைபேசியை அவளிடம் நீட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டான். ​மயூரிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. அலைபேசியைப் பார்த்தாள்; அது உயிரற்று

அத்தியாயம் 23 Read More »

ரசிகை – 10

சூர்யா, மேனேஜர் லட்சுமணனையும் அந்தப் பெண்ணையும் ஓர் நொடி உன்னிப்பாக கவனித்தான். அவள் பக்கம் கண்டிப்பாக ஏதோ நியாயம் இருக்கிறது என்று அவன் மனது சொன்னது. ஆகவேதான் அவளை விடச் சொல்லி இருந்தான்… ஒற்றை விரலால் தன் எதிரில் இருந்த நாற்காலியில் அவளை உட்காரும்படி கூற, அவளும் முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டே வந்து அமர்ந்தாள். “சொல்லுங்க…” “சார் என்னோட பேரு துளசி. என்னோட புருஷன் போன வருஷம் வரை இந்த ஃபேக்டரில தான் வேலை பார்த்துட்டு இருந்தாரு.

ரசிகை – 10 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன்- 4    கார்த்திக் தான் பேசியது தவறு என்று நினைத்தவன் இரவு தூக்கத்தை தொலைத்தான். இனியா அவளும் கார்த்திக் பேசியதை நினைத்து தன் அம்மாவுக்கு தெரியாமல் அழுது கொண்டிருந்தவள் விடியும் தருவாயில் தான் கண்ணயர்ந்தாள். இனியா ஆழ்ந்த நித்திரையில் இருக்க, “என்ன இனியா நல்ல தூக்கமா ?அவன் வராமல் நிம்மதியா தூங்கற‌ அப்படித்தானே?’ “ஆமா ஆமா இன்னைக்கு நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் .அவனுடைய தொந்தரவு எனக்கு இல்ல .அதுக்குக் காரணம் நீங்க தான் .நீங்க

தாரகையின் மாயோன் Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!