இதயம் 26
நேத்ராவிடம் கோபமாகப் பேசிவிட்டு வந்தவனோ தனது அறையில் கூண்டுப்புலி போல் நடந்து கொண்டிருந்தான். ‘நீ எங்கிட்டயே பொய் பேசறியாடி? நேத்து எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா? இப்படி என்ன உயிரோட சாகடிச்சிட்டியேடி?’ ‘உனக்கு ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சா இப்படியா பண்ணுவ? ஒரு நிமிஷத்துல தூக்கி எறிஞ்சு பேசிட்டியே’ ‘நான் என்னென்னவோ நினைச்சேனேடி. ஏன்டி இப்படி பேசின?’ என்று இதயத்தில் வலியுடன் கண் கலங்க அமர்ந்திருந்தான். நேற்று அவள் சந்திரன் குடும்பத்தாரிடம் தன்னைத் திருமணம் செய்வதாகச் சொன்ன கணத்தை […]
