விழிமொழி-37
கோவையின் அந்தப் பிரமாண்டமான பங்களா… எப்போதும் ஒரு அமைதியான கார்ப்பரேட் அலுவலகத்தைப் போல இருக்கும் அந்த வீடு, இன்று ஒரு திருவிழாக் கோலத்தைப் போலக் களைகட்டியிருந்தது. மருத்துவமனையில் பாவை கர்ப்பமாக இருக்கிறாள் என்ற நற்செய்தி கேட்டதிலிருந்து, அபிமன்யுவின் கால்கள் தரையில் ஊன்றவில்லை. அவனுக்குள் இருந்த அந்த இளமைத் துள்ளலும், ஒரு தந்தையாகப் போகிறோம் என்ற பெருமிதமும் அவனது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தன. மறுநாள் காலை… சூரியன் உதிப்பதற்கு முன்பே அபிமன்யு விழித்துவிட்டான். வழக்கமாக அவன் ஜிம்மிற்குச் செல்லும் […]
