விழிமொழி-29
சிங்கப்பூர் குளோபல் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் அந்தப் பிரமாண்டமான போர்டு ரூம் முழுவதும் ஒரு கனத்த அமைதி கவ்வியிருந்தது. அபிமன்யு தன் இரு கைகளாலும் தலையைப் பலமாகப் பிடித்துக்கொண்டு, மேஜையின் மீது சாய்ந்திருந்தான். அவனது மூளைக்குள் கடந்த கால நினைவுகள் ஒரு சூறாவளியைப் போல அடித்துக்கொண்டு சென்றன. அந்த ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட அவன் கையை நீட்டிய அந்த ஒரு விநாடி… அவனது கல்லூரிக் காலத்தின் மிக முக்கியமான ஒரு நிகழ்வைச் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது. அவன் மனக்கண்ணில் […]
