November 2026

விழிமொழி-20

சிங்கப்பூர் நிறுவனத்தின் முதன்மை வழக்கறிஞராக கம்பீரமாக உள்ளே நுழைந்த அந்தப் பெண்… மித்ரா! அவள் அறையின் கதவைத் திறந்து அடியெடுத்து வைத்த நொடியில், அங்கு நிலவிய அமைதி முற்றிலும் குலைந்துபோனது. அபிமன்யுவுக்குப் பழைய நினைவுகள் எதுவுமே வரவில்லை. ஆனால், எதிரே கம்பீரமாக நின்றிருந்த மித்ராவை பார்த்த ஆதவனின் கை பேனா நழுவி கீழே விழுந்தது! அவனது கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன. ஆதவனின் முகம் அப்படியே இரத்த ஓட்டமின்றி வெளுத்துப் போனது. மித்ராவின் பார்வையும், மேஜையின் நடுவே […]

விழிமொழி-20 Read More »

விழிமொழி-19

பொள்ளாச்சி பயணத்திற்குப் பிறகு, அபிமன்யு மற்றும் பாவையின் வாழ்க்கையில் ஒரு புதிய வெளிச்சமும் அமைதியும் பரவியிருந்தன. காலை 6:00 மணி… கோவை பங்களாவின் பின்புறமிருந்த பூந்தோட்டத்தில் லேசான பனி மூட்டம் பரவியிருந்தது. சில்லென்ற காற்று மரங்களின் இலைகளை அசைத்துச் செல்ல, பறவைகளின் மெல்லிய கீச்சொலி அந்தச் சூழலை மிகவும் ரம்மியமாக்கியது. பாவை ஒரு எளிய பச்சை நிற பருத்திப் புடவையில், கையில் சுடச்சுட காபித் தட்டோடு தோட்டம் நோக்கி நடந்து வந்தாள். அங்கே, புல்வெளியின் நடுவே அபிமன்யு

விழிமொழி-19 Read More »

விழிமொழி-18

கோவையின் அந்த மாலை நேரம் மிகவும் ரம்மியமாக இருந்தது. பால்கனியில் அடிக்கும் சில்லென்ற காற்றும், தூரத்து மலைகளில் இறங்கும் மேகக் கூட்டங்களும் பங்களாவிற்கு ஒரு புதுவித அழகைத் தந்தன. அபிமன்யு தன் மனைவியை இறுக்கமாக அணைத்தபடி நிற்க, பாவை அவனது மார்பின் கதகதப்பில் அமைதியாகத் தன் கண்களை மூடிக்கொண்டாள். அப்போது… மாடிப் படிகளில் வாணதியும் தாமரையும் ஏறி வரும் காலடிச் சத்தம் கேட்டது. பாவை மெதுவாக அபிமன்யுவின் அணைப்பிலிருந்து விலக முயன்றாள். ஆனால், அபிமன்யு அவளது கையை

விழிமொழி-18 Read More »

விழிமொழி-17

மதியம் 1:00 மணி… ஏ.ஆர்.கே குரூப் ஆஃப் கம்பெனீஸ். ஆபீஸுக்குத் திரும்பிய அபிமன்யுவுக்கும் பாவைக்கும் ஒரு மிகப்பெரிய நற்செய்தி காத்திருந்தது. ஆதவன் புன்னகையோடு ஃபைல்களைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தான். “டேய் அபி! சந்தோஷ் சார் ஆபரேஷன் சக்சஸ்! ராஜசேகர் கம்பெனியில பண்ணியிருந்த 50 கோடி ரூபாய் கையாடலை லீகல் டீம் ஆதாரத்தோட நிரூபிச்சுடுச்சு. கோர்ட் அவனோட அத்தனை ஷேர்களையும் முடக்கி, உனக்கே திரும்பக் கொடுக்க உத்தரவிட்டிருக்கு!” அபிமன்யு ஃபைல்களை வாங்கிப் பார்த்தான். “ரொம்ப நல்லது ஆதவா. ஆனா…

விழிமொழி-17 Read More »

விழிமொழி-16

இரவு 9:30 மணி… பங்களாவில்… அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டு முடித்தார்கள். அபிமன்யு தன் அறைக்குச் சென்ற பிறகு, பாவை சமையலறையில் சிவகாமிக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். அப்போது, பங்களாவின் பின் பக்கத்துத் தோட்டத்திலிருந்து ஏதோ உடைவது போன்ற ஒரு மெல்லிய சத்தம் கேட்டது! “என்ன சத்தம் அது?” சிவகாமி பதறினாள். “இருங்க அத்தை… நான் போய் என்னன்னு பார்த்துட்டு வர்றேன்,” பாவை சொன்னாள். “வேண்டாம் பாவை ம்மா… வெளிய போலீஸ் செக்யூரிட்டி இருக்காங்க,

விழிமொழி-16 Read More »

விழிமொழி-15

அன்றைய இரவின் பதற்றமும் அதிர்ச்சியும் மெல்ல மெல்ல வடிந்து, அதிகாலைச் சூரியன் கோவை நகரின் மீது தன் பொன்னிறக் கதிர்களைப் பரப்பத் தொடங்கியிருந்தது. பங்களாவின் படுக்கையறையில், அபிமன்யு தன் முழு எடையையும் பாவை மீது சாய்த்து, அவளது மார்பில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தான். நேற்றிரவு நடந்த சம்பவங்கள் அவனது மனதை வெகுவாகப் பாதித்திருந்தன. தன் மனைவியைக் காப்பாற்றத் தான் காட்டிய அந்த அசுரக் கோபம், தனக்குள்ளேயே ஒரு கொடூரமான மிருகம் ஒளிந்திருக்கிறதோ என்ற பயத்தை அவனுக்குள் விதைத்திருந்தது.

விழிமொழி-15 Read More »

விழிமொழி-14

இரவு 8:00 மணி… கோவையின் முன்னணி நட்சத்திர ஹோட்டலின் பிரமாண்டமான ஹால்.வண்ண வண்ண விளக்குகளும், மெல்லிய மேற்கத்திய இசையும் அந்த பார்ட்டியை அலங்கரித்துக் கொண்டிருந்தன. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் எனப் பல முக்கியப் புள்ளிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தார்கள். அபிமன்யு கறுப்பு நிற ‘டக்ஸீடோ’  சூட்டில், ராஜ நடைபோட்டு உள்ளே நுழைந்தான். அவனது கரத்தைப் பற்றியபடி, அடர் சிவப்பு நிறப் பட்டுப் புடவையில், வைர மூக்குத்தியும், கழுத்தில் தாலியுமாகத் தேவதை போல நடந்த வந்தாள் பாவை. அங்கிருந்த அனைவரும்

விழிமொழி-14 Read More »

விழிமொழி-13

கோவையின் காலைக் காற்று எப்போதுமே ஒரு மெல்லிய குளிர்ச்சியையும், தேயிலைத் தோட்டங்களின் புது வாசத்தையும் சுமந்து கொண்டு வரும். அபிமன்யுவின் பிரமாண்டமான பங்களாவில் அந்த அதிகாலை நேரம் மிகவும் அமைதியாகத் தொடங்கியது. சமையலறையில் காபி கொதிக்கும் சத்தமும், பூஜை அறையிலிருந்து சிவகாமி அம்மாள் பாடும் திருப்பள்ளியெழுச்சியின் மெல்லிய குரலும் அந்த வீட்டிற்குள் ஒரு புதிய அத்தியாயம் பிறந்திருப்பதை உணர்த்தின. பாவை தன் நீளமான கூந்தலை நேர்த்தியாக முடிந்து, ஒரு எளிய நீல நிறப் பருத்திப் புடவையில் சமையலறையிலிருந்து

விழிமொழி-13 Read More »

விழிமொழி-12

இரவு 9:00 மணி… பங்களா முழுவதும் அமைதி சூழ்ந்திருந்தது. பாவை குளித்து முடித்து, சிவகாமி கொடுத்த அந்த எளிய இளஞ்சிவப்பு நிறப் பட்டுப் புடவையை உடுத்திக்கொண்டு, தலையில் மல்லிகைப் பூச்சரத்தோடு அறைக்குள் வந்தாள். அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஒரே ஒரு மெல்லிய நீல நிற இரவு விளக்கு (Dim light) மட்டுமே எரிந்துகொண்டிருந்தது. அறை முழுவதும் முல்லைப் பூக்களின் நறுமணமும், சந்தன வாசனைத் திரவியமும் பரவியிருந்தன. பாவை கட்டிலின் அருகே மெதுவாக வந்து நின்றாள். அவளது இதயம்

விழிமொழி-12 Read More »

விழிமொழி-11

மருதமலைக் கோயிலில் தாலி கட்டப்பட்ட அந்த நெகிழ்ச்சியான தருணத்திற்குப் பிறகு, கோவையின் அவினாசி சாலையில் அமைந்திருந்த அபிமன்யுவின் பிரமாண்டமான பங்களாவை நோக்கி மூன்று கார்கள் அணிவகுத்துச் சென்றன. முன்னால் சென்ற கறுப்பு நிற ஆடி காரில் அபிமன்யுவும் பாவையும் அமர்ந்திருந்தார்கள். பாவையின் கைகளை அபிமன்யு ஒரு நொடி கூட விடவில்லை. அவனது விரல்கள் பாவையின் மென்மையான கைகளை இறுக்கமாகப் பற்றியிருந்தன. காரின் ஏசி குளிரிலும் அபிமன்யுவின் முகத்தில் ஒருவித நிம்மதியும், சிறு பிள்ளைக்குரிய ஆசுவாசமும் தெரிந்தன. பாவை

விழிமொழி-11 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!