October 2026

உருத்திரா 8❤️

  எனக்கு மருந்து நீதான் என வாய் திறந்து சொல்லாமல், முத்தத்தில் காட்டிக்கொண்டிருந்தான் அந்தக் காதல் அரக்கன். அவனை ஏற்கவும் முடியாமல் தள்ளிவிடவும் முடியாமல் கை விரல்களை மடக்கித் தன் உணர்வுகளைக் கொன்று பொம்மைபோல அவனுக்கு இதழைக் காட்டினாள். முத்தத்தின் முடிவில் ருத்ராவின் கண்களில் தெரிந்த அப்பட்டமான யாசிப்பை அவளால் ஏற்க முடியவில்லை. தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் நிலாஞ்சி. “உன்னை ஆபிஸில டிராப் பண்றேன் ஆரலி” “வாயை மூடு, ஒழுங்கா ஹாஸ்பிடல் போ!” என்று எரிந்துவிழுந்தாள். மறுபேச்சில்லாமல் […]

உருத்திரா 8❤️ Read More »

தீ 🔥 – 10

அத்தியாயம் 10   இது அப்பவே தெரிஞ்சிருந்தா நம்ம எப்போவோ இவளைக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கலாமே?    பைரவியின் நடனத்தை மித்ரன் தன்னையும் மறந்து ரசித்துக்கொண்டிருக்க, பைரவி தன் நடனத்தை முடித்துவிட்டு கீழே இறங்கி வந்தவள், தன் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.   “அக்னி! அதெல்லாம் வேண்டாம்டா…” என்று தூக்கிவிட்ட அருந்ததி, தன் மகளின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டார். அக்னி பைரவியும் தன் தாயைக் கட்டியணைத்துக்கொண்டாள். அப்பொழுது அங்கே

தீ 🔥 – 10 Read More »

தீ 🔥 – 9

அத்தியாயம் 9   அண்ணா… என்ன அண்ணா வெட்கமெல்லாம் படுறே?    மித்ரன், அருந்ததி மற்றும் தேவி இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று அங்கிருந்த தூணின் அருகே நின்று கேட்டுக்கொண்டிருக்க, சரியாக அவர்கள் பைரவியின் திருமணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, மித்ரனின் பின்னாலிருந்து யாரோ அவனின் தோளைத் தொட்டனர்.   முதலில் அதைக்கண்டு கொள்ளாதவன், மீண்டும் மீண்டும் யாரோ பின்னாலிருந்து சுரண்டவும் சலிப்போடு ‘யார் டா அது?’ என்று திரும்பிப் பார்க்க, அங்கே அவனது தம்பி ருத்ரன்

தீ 🔥 – 9 Read More »

கெட்டவன் 3

வெற்றி கொடுத்த ஒரு வார காலக்கெடு முடிந்து விட்டது. கல்லூரியில் மூன்று தோழிகளுக்கும் நடுவே சலசலப்பு அதிகமாக இருந்தது. “அனு, நீ அந்த அண்ணாகிட்ட எங்களுக்காக பேசு டி!” என்றாள் அவளின் தோழி விஷாகா. அனுவின் புருவங்கள் சுருங்கியது. தோழியை தீயாக முறைத்து பார்த்தாள். “ஆமா டி, நீங்க இப்போ அந்த அண்ணன் வீட்டுலதான வாடகைக்கு குடி இருக்கீங்க. நீ அதுனால எங்களுக்காக பேசி பாரு,” என்றாள் இன்னொரு தோழி நிஷா. அனு பயத்தில் இரு தோழிகளையும்

கெட்டவன் 3 Read More »

அத்தியாயம்- 1

வணக்கம் நட்பூக்களே உங்கள் நான், திக்ஷிதா லட்சுமியின் அடுத்த கதை. எழுத்தாளர் போட்டி நான்குக்கு கொடுக்கவிருக்கும் கதை. மைடியர் மாமியார்.  இக்கதையில் வரும் சில நிகழ்வுகள் நடப்புக்கு சாத்தியம் இல்லை என்று நீங்கள் கருதலாம்.  ஆனால் என் மனதில் பல காலமாக சுழன்றுக் கொண்டு இருக்கும் விடயம் இது.  ஏன் இவ்வாறு நடக்க கூடாது என்று யோசனை.  நான் நினைப்பது முட்டாள் தனமாக இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இதை நான் என் மகன் மற்றும் என் மகள்

அத்தியாயம்- 1 Read More »

ராட்சசன் 9

ஆதித்யாவின் செய்கை குழப்பமாக இருந்தாலும், நடந்த அந்த கோர சம்பவத்திலிருந்து எந்தவொரு பாதிப்புமின்றித் தப்பித்ததை எண்ணி நிம்மதி அடைந்தாள் மதுமதி.  ஆதித்யாவைப் பற்றிய சிந்தனையைத் தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு, தன் உயரத்திற்குச் சற்றே குறைவாக இருந்த அந்தக் கதவை மெதுவாகத் தள்ளினாள். அது ‘கிரீச்’ என்ற சத்தத்துடன் அவளுக்கு வழிவிட்டது. நேராக உள்ளே சென்றவள், காலிங் பெல்லை அழுத்தியபடி வாசலில் காத்திருந்தாள். வீட்டின் கதவுக்கு மேல் இருந்த சிறிய விளக்கு நொடிக்கு நொடி கண்ணடித்துக் கொண்டிருக்க,  மெனிக்யூர் செய்யப்பட்டு

ராட்சசன் 9 Read More »

காதல் 5

அவள் எங்குத் தேடியும் கிடைக்காமல் போக, அவனையும் அறியாமல் அவன் நெஞ்சினில் சிறு அச்சம் ஆட்கொள்ள, தன் மடத்தனமான செயலை எண்ணி தன்னைத் தானே கடிந்து கொண்டவன்,  இத்தனை நாள் நீ இல்லாத ஒவ்வொரு பொழுதையும், நம்மளோட பழைய நினைவுகளை நினைச்சு நினைச்சு வாழ்ந்துட்டு வந்தேன். இப்போ மறுபடியும் என் முன்னாடி வந்திருக்க, நீ வந்துட்டனு சந்தோஷப்படவா இல்லை, என்னை நீ விட்டுட்டு போனதை நினைச்சு கோபப்படவா? இல்லை எங்க மறுபடியும் என் மனசை உடைச்சுருவியோனு பயப்படவா?

காதல் 5 Read More »

காதல் 4

ஜியா கோபமாகத் தன்னைப் பார்ப்பதை கவனித்த ஆஷிக் வேண்டும் என்றே அவளை வம்பிழுப்பதற்காக, தன் இதழில் விஷமம் ததும்ப,  “என்ன சந்தீப் சார், ரொம்ப ஹாட்டா இருக்கே?” “ஆமாப்பா, லைட்டா எனக்கும் அப்படித்தான் இருக்கு, ஏசி சர்வீஸ் பண்ணணும்னு நினைக்கிறேன்.” “ஷப்பப்பா… அங்க இருந்து பார்த்தா அனல் இங்க அடிக்குது.” என்று அவன் கூறிய பின்பு, அவருக்கு அவன் ஜியாவை வம்பிழுப்பது புரிய,  அவர், ”ஆஷிக், அப்படிலாம் சொல்லாதீங்க. ஜியா மும்பையில உள்ள பெரிய காலேஜ்ல எம்பிபிஸ்

காதல் 4 Read More »

உருத்திரா 7

  காரிலிருந்த கிஃப்ட் பாக்ஸை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான் பத்ரன். “கிஃப்டா? எனக்கா? வேண்டாம் சார்” என உடனே மறுத்தாள் பெண்ணவள். “வாங்குடி…” என்ற பத்ரனின் அதட்டலில் பயந்து அதை வாங்கினாள். “பிரிச்சுப் பாரு…” வேகமாக பாக்ஸைத் திறக்க, சலங்கை ஜோடி அழகாக மின்னியது. கண்களை அகல விரித்தவள் ‘இந்தச் சலங்கையில் அதிக முத்துகள் வைத்திருக்கிறதே! ரொம்ப காஸ்ட்லியாக இருக்கும். எனக்கு ஏன் இவர் வாங்கிக் கொடுக்கிறார்?’ என்ற கோபம் வந்துவிட்டது. அவள் பார்வை மாறுவதைக்

உருத்திரா 7 Read More »

காதல் கணம்-29 (இறுதி)

காதல் கணம் 29 இறுதி அத்தியாயம் தங்களின் வழக்கமான மருத்துவமனைக்கு வீசியை அழைத்து வந்திருந்த மகாவிற்கு ராஜமாணிக்கத்தை விட்டு வந்தது ஏதோபோல் இருந்தது. அவசரமாக மருத்துவமனையை விட்டு வெளியேறினான். வித்யா வீசிக்கு மருத்துவம் பார்க்கப்படும் அறைக்குள் நின்றுகொண்டு சிவனேஸ்வரன் கூறிய உண்மைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் கூறினாள். பக்கத்தில் ஷ்ரதாவும் நின்றிருந்தாள். சிவனேஸ்வரனின் திட்டத்திற்கும், ஆதீஸ்வரன், தாரிணியின் இறப்பிற்கும் மட்டுமே ஷ்ரதாவின் முகம் உணர்ச்சிப் பிழம்பாகியதைக் கண்டு, ‘அப்போ ஷ்ரதாவுக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சா?’ என்று துணுக்குற்றான் வீசி. ஷ்ரதா

காதல் கணம்-29 (இறுதி) Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!