காதல் 8
காலை பொழுது நன்றாய் விடிந்திருக்க, டெல்லி விமான நிலையம் வழக்கம் போல மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஏர்போர்ட்டின் கேன்டீனில் சில ஆண் பைலட்கள் மற்றும் அவர்களோடு சில ஏர்ஹோஸ்டர்ஸ்களும் அமர்ந்து காலை உணவை அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருக்க, ஆஷிக், தியா இருவரும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டனர். ஆஷிக் வழக்கம் போலக் கலாட்டாவாகப் பேச அனைவரும் சிரித்தனர். அப்பொழுது அவர்களுள் ஒருவனின் பார்வை மட்டும் வேறெங்கோ இருக்க, அவனது பார்வை சென்ற இடத்திற்கே தன் பார்வையையும் சுழல […]
