September 2026

🌹மலர்🌹1

தான் வாழ்வில் பெற்ற உறவுகளை இழந்து தனிமையில் உழலும் நாயகன் பாலா… பெற்றவர்கள் யாரென்றே அறியாத நாயகி மலர்… நாயகி தன் காதலை நிராகரித்ததால் காயப்பட்ட நாயகனோ மூர்க்கனாக மாறுகின்றான்.  அன்பின் உச்சம் மூர்க்கமாக மாறும்போது… இழப்புகளின் வலி காதலைப் பிடிவாதமாக மாற்றும்போது… இவர்களின் காதல் கைகூடுமா?  என் காதல் மலர் 1  சென்னை மாநகரில்… அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் ஐந்தாவது அடுக்கில் இருந்த கார்ப்பரேட் அலுவலகமே ஸ்தம்பித்துப் போயிருந்தது. அங்கு உச்சக்கட்டக் கோபத்தில் தன் […]

🌹மலர்🌹1 Read More »

அருகினிலே – 1

(full novel in audio link) இரவெல்லாம் வான மகள் சிதறிச்சென்ற நீர் துளியின் விளைவால், விடிந்தும் விடியாத மங்கலான அதிகாலை நேரம் மேகங்கள் பனிக்காற்றை படர விட்ட படி சென்னை மக்கள் அனைவரையும் துயில் எழுப்ப முயன்று தோற்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கதிரவனுக்கு அடுத்தபடியாக கணக்கச்சிதமாய் காலையில் எழுந்து விடும் பணியை செய்பவள் நம் நாயகி இசை. போன ஜென்மத்தில் நிச்சயமாக இந்திரன் மகளாக இருந்திருக்க கூடும் என எண்ண வைக்குமளவு பேரழகி. அலைகடலுக்கு போட்டியாக

அருகினிலே – 1 Read More »

நெஞ்சம் 8

  சென்னையில் இருந்து ஸ்டடி ஹாலிடேஸிற்காக வந்தவளை அவளது பெற்றோர் கண்டு கொண்டதும் கௌதம் நினைவில் அவள் கண்கள் கலங்கியது. “என்னடா? என்னாச்சு?” என்று பெற்றோர் இருவரும் பதறி போய் கேட்டனர். அவர்களது பதற்றத்தில் சுதாரித்தவள் “ஐயோ அப்பா… உங்கள பாத்த ஆனந்தத்ததுல கண் கலங்கிடுச்சு. டயானா‌ உங்க சேவகர்கள் கிட்ட சொல்லி எனக்கு காபி கொண்டு வர சொல்லுங்க” என்று கண் சிமிட்டி புன்னகைத்தாள். “என் மகளுக்கு மத்தவங்க எதுக்கு அம்மா நான் இருக்கறப்ப?” என்று

நெஞ்சம் 8 Read More »

அத்தியாயம் 02 (ANK)

அத்தியாயம் 02    அவர் கூறியதை கேட்டு ஒரு கணம் அதிர்ந்து போன நகுலனோ அப்போது தான் அவரது செவியில் இருந்த காதொலிக் கருவியை அவதானித்தான். அதை அவதானித்தபடியே,   “மிஸ்டர் நாதன் நீங்க தூங்கும் போது உங்க ஹியரிங் எயிட கழட்டி வச்சிருவீங்களா என்ன?”   என்றதும் அவரோ, “ஆமாம்ப்பா ” என்றார் ஆமோதிப்பாய்   நகுலனோ தொடர்ந்து “ஓகே இந்த மெடிசின்ஸ் ஏன் எடுத்துக்குறீங்க?”   என்று ஒரு மருந்து குப்பியை கையில் எடுக்க

அத்தியாயம் 02 (ANK) Read More »

அத்தியாயம் 01 (ANK)

அத்தியாயம் 01    விடியலை நோக்கி வானம் செவ்வண்ணம் பூசிக் கொண்டிருக்கும் சமயம் ஆங்காங்கே பனி மூட்டம் படர்ந்து சூர்யோதத்தை மேலும் அழகாக்கி கொண்டிருந்த தருணம் ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை போலும்,   “சேன தவ கொச்சர வெலாவாக்கின் அபி யன்ன ஓண தென தியென்னே?”   [சேன, இன்னும் எவ்வளவு நேரத்தில நாம போக வேண்டிய இடமிருக்கு?] என்றான் கேள்வியாக அவன்,   அதற்கு கான்ஸ்டபிள் சேனாநாயக்கவோ, “தவ பெய பாகெக்கின்

அத்தியாயம் 01 (ANK) Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் -19 ஸ்ருதி அங்கே வந்தவள் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்… ஸ்ருதி எங்கே சென்று வந்தாள் பார்க்கலாம் . விக்ரம் ஸ்ருதிக்கு அழைத்தவர் தான் ஊரிலிருந்து வந்து விட்டதாக கூறி அவளை தன் வீட்டிற்கு வரச் சொன்னார். இவளும் இதை கல்பனாவிடம் கூறியவள், “அம்மா நான் எப்படி இனியாவை தனியா விட்டுட்டு போறது” என்றாள். கல்பனா தேவி,”இனியாவை நான் பார்த்துக்கிறேன் டா. அப்பா கூப்பிடறாங்க தானே?நீ போயிட்டு வா” “ஸ்ருதி இங்கே வந்ததிலிருந்து எனக்கு

தாரகையின் மாயோன் Read More »

Anti Hero Competition

🔥 DREAMZ NOVELS – NEXT COMPETITION 🔥 🖤 ANTI-HERO STORIES ONLY! 🖤 இந்த முறை…வழக்கமான சாக்லேட் பாய் டைப் ஹீரோ வேண்டாம்! 👀 தவறுகளோடும்…தனக்கென ஒரு இருண்ட உலகத்தோடும்…அவனுக்கே உரிய விதிகளோடும் இருக்கும் ஒரு ANTI-HERO தான் நம்ம கதையின் நாயகன்! 🖤🔥 ⚡ ONLY 20 SLOTS ✍🏼 நாவல் 25000 வார்த்தைகளுக்கு மேல் இருக்க வேண்டும்! அதற்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்‌!🚫 கண்டிப்பாக ஏஐ கன்டென்ட்களுக்கு அனுமதி இல்லை. ✨

Anti Hero Competition Read More »

நெஞ்சம் 7

  அர்ஜுனுக்கும் ஜென்னிக்கும் நடந்த சண்டையில் கௌதம் இப்படி தன்னை விட்டு விட்டு செல்வான் என்று எதிர்பார்க்காதவள் அதிர்ச்சியில் சிலையாய் நின்றாள்.  அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திணறினாள்.  “ஜென்னி இப்போ என்ன பண்ண போற?” என்று இனியா கேட்டாள்.  “பஸ் பிடிச்சி போய்க்கிறேன்டி”   “நானும் உன் கூட வரட்டுமா?”  “வீட்டுக்கு தான போறேன். நான் பாத்துக்கிறேன்டி” என்றவள் தட்டு தடுமாறி அங்கிருந்து புறப்பட்டாள்.  இத்தனை நாட்களில் அவன் இப்படி விட்டு விட்டு சென்றதில்லை.  வர

நெஞ்சம் 7 Read More »

ஒளி 22.2 Final

கல்யாண விருந்து அனைத்தும் முடிந்தவுடன் இப்போது ஓவியன் அலுவலகம செல்ல ஆரம்பித்தான். அவனது வாழ்க்கை நித்திலா வந்த பின் சந்தோஷமாக சென்றது. காலையில் கிளம்பவே மனதில்லாமல் கிளம்புபவன் மாலை முடிந்த அளவு வேகமாக வீட்டிற்கு வந்தான். அதே போல அவனின் தர்மாப்பாவுடன் தான் அவனின் காலை நேரம் ஆரம்பித்தது. இருவரும் செய்யும் அலப்பறையில் அனைவரும் திகைத்து விழித்தார்கள். அலுவலகத்தில் நேரம், காலம் பார்க்காமல் உழைத்தவன தனது கடின உழைப்பால் தொழிலிலும் தனக்கான இடத்தை உருவாக்கினான். ஓவியனின் திருமணத்திற்கு

ஒளி 22.2 Final Read More »

ஒளி 22.1 Final

   “கண்ணா விஷால் எங்க? அவன் ஆளையே காணோம்” என்று கண்ணனிடம் விசாரித்தான்.  “அட இவனை எப்படி மறந்தேன்? அவன் இல்லனா உங்கள சீக்கிரம் கண்டுபிடிச்சிருக்கவே முடியாது நானு. ஆனா அன்னைக்கு ஹாஸ்பிடல்ல நடந்த சண்டைக்கு அப்புறம் அவனை பார்க்கவே இல்லடா” என்று கூறினான்.  “சண்டையா? என்ன நடந்தது?” என்று அதிர்ச்சியாய் விசாரித்தான்‌ ஓவியன்.  மீனாட்சி சண்டை போட்டது முதல் அதற்கு அன்னபூரணி பதில் சொல்லியது வரை கூறியவன் இடையில் ரத்னம் எதையும் பேசாது இருந்ததையும் சொல்லி

ஒளி 22.1 Final Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!