September 2026

Introduction .. just few seconds

ரிஷி   ரிஷி          ஊரில் உன்னை என்ன பெயரிட்டு அழைத்தாலும்,                  என்னில் நீ பாதியானாய்,என் பத்தினியே!                பாயும் புலியான  எந்தன் பாரத்தை நீ தாங்காயோ?               கானல் நீராய் போன எந்தன் காதலை   அள்ளிப் பருகும்  விரல்கள் உந்தனதோ …               களவாடப்பட்டதாய் நினைத்திருந்த என் கற்பை ,ஆண் எனும் கர்வம் விட்டு ,          பெண்ணே சமர்பிக்கிறேன்…உன் காலடியில் ! தேனு மன்னவனே, என் மனதை மறைத்தேன், காமனவன் கணைகள் கொண்டே! மங்கையெனும் உணர்வை பெற்றேன்… மயக்கும் உன் புன்னகை கொண்டே! மறத்துப்போனதாய் நினைத்திருந்த உணர்வையும், மரித்துப்போனதாய் நினைத்திருந்த இதயத்தையும், உயிர்த்தெழ    செய்துவிட்டாய்.. பெண் எந்தன் மென்மை உணர மாறனவன் மலர்கணைகள் போதும் ,             பூவாய் அலர்ந்திருக்கும் இதயத்தின் கூர் கணைகள் வேண்டாம்.!!   கதையின் நாயகி : தேனு நாயகன் :ரிஷி வேதநாயகம் .   இந்தக் கதை எனது ஆத்மார்த்தமான கதைகளில் […]

Introduction .. just few seconds Read More »

அத்தியாயம் – 1

‘ஹைதற்காட்டு வீரன் தான் குதிரை ஏறி வருவானோ  ,  காவல்  காத்து என்னைத்தான் கடத்திக் கொண்டு போவானோ  ‘ என்ற   அந்த பாட்டு கேத்தார் போல் தேன் நிலாவை அப்படியே அளேக்காக  ஒற்றை கையால் தூக்கி தன் தோள்மேல் போட்டுக் கொண்டு ஸ்டைலாக நடந்து சென்றான்    அவன். “யாருடா?   நீ என்னை விடு,     என்னை விடு” என கத்திக் கொண்டிருந்தாள்   அவள். “ஏய்     தேனு    விடிஞ்சி எவ்வளவு நேரம் ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்க எந்திரிடி”  என கத்தி    

அத்தியாயம் – 1 Read More »

1..ராட்சசனின் காதல் பாவை

1… ராட்சசனின் காதல் பாவை சென்னை சிட்டி முழுவதும் ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூடி நியூ இயர் செலிப்ரேஷன் செய்து கொண்டிருந்தனர். அதே நேரம் இங்கு… “டேய், நீங்க எல்லாம் யாருடா? என்னை எதுக்கு கட்டிப் போட்டு வச்சிருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். அவன் எதிரில் நிற்பவர்களோ எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க, அதைப் பார்த்தவன் இன்னும் கடுப்பாகிக் கத்தத் தொடங்கினான். “டேய், உங்களைத் தாண்டா கேட்கிறேன்! நீங்க எல்லாம் யாரு? என்னை

1..ராட்சசனின் காதல் பாவை Read More »

அருகினிலே

வருண், “நான் இயலிசையோட ஹஸ்பெண்ட்” என்றதும் முதுகுத்தண்டில் மின்சாரம் பாய தூக்கி வாரி போட்டதைப்போல சித்தார்த் வருணை அதிர்ச்சியாய் பார்த்தான்.  மனதில் காதல் ஆசையை வளர்த்து கொண்டதால், இசைக்கு திருமணம் ஆனதை சித்தார்த்தால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவள் மதியம் பழைய ஞாபகங்கள் என்று சொன்னது இவனுடனான திருமணத்தை பற்றித்தான் இருக்குமோ என தோன்றியது. நடப்பதை எல்லாம் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழப்பத்தின் உச்சியில் இருந்தான் சித்தார்த்.  ஜானகி எந்த குழப்பமுமின்றி தெளிவாக இருந்தார்,

அருகினிலே Read More »

ராட்சசன் 2

  மும்பை மக்கள் அனைவரும் நித்திரைக்குள் தங்களை நுழைத்திருந்த நேரம். கறுத்து கொண்டிருந்த கார் மேகங்கள் மிரட்டும் இருட்டைப் பிரதிபலிக்க. சில்லென்று குத்தூசியைப் போல முதுகெலும்பை ஊடுருவும் குளிர்ந்த காற்று வீசும் இரவு வேளையில், ஆள் நடமாட்டமே இல்லாத அந்த தெருவில் சில்வண்டுகளின் ரீங்காரத்தைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. ஹெட்செட்டில் இளையராஜாவின் இசையை தனக்குத் துணைக்கு அழைத்தபடி அந்த சாலையின் வழியே நடந்துகொண்டிருந்தாள் மதுமதி.  இடியும் மின்னலும் மட்டும் அவளை வெகுவாக அச்சுறுத்தியது. எப்பொழுதும் நடந்து

ராட்சசன் 2 Read More »

தேன்-1

           விஷமாய் இறங்குகிறாய் தேனே. அத்தியாயம்-1 இரவு நேரம் ஒன்பதை தாண்டி இருக்கும். போக்குவரத்து வெகுவாகக் குறைந்திருக்க, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் சூரிய மின் விளக்குகள் ஒளியைக் கொட்டிக் கொண்டிருக்க, பெரும் சத்தத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தது அந்த இரு சக்கர வாகனம். வாகன ஓட்டியின் கருப்பு நிற தலைக் கவசமும், வாகனத்தின் நிறமும் விளக்கு ஒளி வெளிச்சத்தில் பளபளக்க, வாகன ஓட்டி அணிந்திருந்த கருப்பு நிற மேலேடையும் அதற்கு போட்டி

தேன்-1 Read More »

அருகினிலே – 2

      வருண்.. ஆறடிக்கும் அதிகமாக வளர்ந்தவன், லேசாக ட்ரிம் செய்திருந்த தாடியும், கூரான கண்களும் என்னை நெருங்க முயற்சிக்காதே என்று எதிரில் நிற்பவர்களை பயமுறுத்தி திகிலூட்டும் படியான வரம் பெற்று வந்திருந்தது. அவன் அணிந்திருந்த பகட்டான உயர்தர ஆடைகள், எங்களின் எஜமானர் கோடிகளில் புரளும் செல்வ சீமானென்று ஊரறிய திமிராய் பறைசாற்றின.  மூணாறில் பரம்பரை பணக்காரரும், மிகப்பெரிய எஸ்டேட் ஓனருமான சோம சுந்தரத்தின் இரண்டாம் தவப்புதல்வன் வருண். பள்ளி நிறுவனர் முகில் கிருஷ்ணன் எதிர்பாராத விதமாக

அருகினிலே – 2 Read More »

ராட்சசன் 1

அன்று.… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் ஜனவரி 1 , 1986ஆம் ஆண்டில்  விடியல் நெருங்கியும் உறங்கிக்கொண்டிருந்த மனிதர்களை எப்படி எழுப்புவது என்ற தீவிர யோசனையுடன் உக்கிரமாக உதித்துக் கொண்டிருந்தான் ஆதவன், அவனது கதிரில் ஒன்று நேர் கோடாக ஜன்னல் வழியாக வந்து கட்டிலில் வலியில் துடித்துக்கொண்டிருந்த பெண்ணவளின் மேடிட்ட வயிற்றில் சுள்ளென்று விழுந்தது. “ஆ ஆ.ம்.மா” பெரிதாக ஒரு அலறல் ஒலி அப்பெண்ணிடம் இருந்து எழுந்தது. “ஒண்ணுமில்லமா வலிக்கும் பொழுது மட்டும்

ராட்சசன் 1 Read More »

1.வேய்ந்தனனின் வல்லினம்

  1.வல்லினம் ஆடிக்கார் தொடங்கி லம்போர்கினி, பென்ஸ், லேண்ட்ரோவர், ஜாகுவார் என சீரான இடைவெளியில் உயர்ரக கார்கள் அவ்வரங்கத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தது. நிலவொளியிடம் போட்டி போட்டபடி அவ்விடம் முழுவதும் கண்கவர் விலையுயர்ந்த மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க, ஒவ்வொரு தொழிலதிபதிர்களும், முக்கிய புள்ளிகளும் தங்களுக்கே உரிய மிடுக்குடன் காரிலிருந்து இறங்கி வர, அவர்களை அழகாக வரவேற்றது சிவப்பு  கம்பளம் மட்டுமல்ல, பத்திரிக்கை நிருபர்களும், புகைப்பட கலைஞர்களும் தான்.  பளிச் பளிச்சென்று அவர்களெடுக்கும் புகைப்படங்களின் சத்தங்கள் அவ்விடத்தினை நிரப்பியது.

1.வேய்ந்தனனின் வல்லினம் Read More »

அத்தியாயம் 03 (ANK)

அத்தியாயம் 03 (ANK)   ஆதித்தோ நகுலன் கேட்ட கேள்விக்கு தயங்கியபடியே, “அது வந்து சார், அன்னைக்கு என் பி.ஏ ரீட்டா கூட வன் நைட் ஸ்டேண்ட் பிளான் பண்ணியிருந்தேன்”   என்று தட்டுத்தடுமாறி கூற நகுலனுக்கோ அத்தனை ஆத்திரம் வந்தது., “யூ இரெஸ்பான்சிபிள் இடியட், உனக்கெல்லாம் ஒருநாள் கூட பொத்திட்டு இருக்க முடியாதா? அதுக்காக உன் கார்ட்ஸையும் இழுத்துட்டு போய்ட்டியா?”   என்றதும் அவனோ தலைக் குனிந்தபடி, “மூணு நாலு கார்ட்ஸ” என்று கூறிக் கொண்டிருக்கும்

அத்தியாயம் 03 (ANK) Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!