மலர் 3
மலர்-3 மறுநாள்காலை , ஆனந்தின் பாட்டி சுந்தரிக்கு நகரின் மிகப்பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்கு வர சொல்லி இருந்தான் டாக்டர் அருண். ஆம் !உங்கள் யூகம் சரிதான். முட்டி வலிக்காகதான் அவர் அங்கே வந்திருந்தார். அருகில் கணவனுடன் அமர்ந்திருந்தார். கணவர் கதிரேசனுக்கு ஏற்ற சுந்தரிதான் அவர். மனைவியின் சுந்தர முகத்தை பார்க்கும்போதெல்லாம் அவர் முகம் சூரியனாக பளபளகும்தான் . மற்றவர்களுக்கு சூரியனாக இருக்கும் கதிரேசன் மனைவிக்கும் பேரனுக்கும் மட்டும் குளிர்ச்சியான நிலாதான் . முடியாமல் தோளில் சாய்ந்திருந்த […]
