October 2026

மலர் 10

மலர்-10     சொன்ன படியே அன்று இரவு அக்காவிடம் பேசினான். தம்பியின் தோள் சாய்ந்து பேசியதில் மனது லேசானது.  “ரொம்ப தேங்க்ஸ் டா.” “ஆனா அக்கா! நீ முடியாதுன்னா முடியாதுன்னு சொல்ல கத்துக்கணும்.  இன்னும் கொஞ்சம் வாய திறந்து பேச கத்துக்கணும். இல்லனா எல்லாருமே நம்மள கேவலமாத்தான் நடத்துவாங்க.” இனியாவும் இதைத்தான் சொல்லறா . ஏன் எல்லாருமே  அப்படித்தான் சொல்றீங்க.  மனசுக்கு புரியுது. ஆனா வாய் வர மாட்டேங்குது. நான் என்னடா பண்ணுவேன்.” பெரு மூச்சு […]

மலர் 10 Read More »

மலர் 9

   மலர்-9அவர் என்னதான் சமாதானமாக சொல்லி இருந்தாலும் அவள் எதிரில் தன்னை தாத்தா அவமான படுத்தியதாகவே எண்ணினான். அதே சமயம் அவனால் தாத்தாவிடம் கோபப்பட முடியவில்லை. தலையை பிடித்துக் கொண்டு அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டான். அப்போது அவனுக்கு வந்த எண்ணம் கல்யாணமா இவளோடவா?அதே தான் அங்கு அவளும் யோசித்தாள் .ஒருவேளை எனக்கு இவரோட கல்யாணம் ஆனா எப்படி இருக்கும்? எல்லாருக்கும் பாலும் பழமும் கிடைக்கும். எனக்கு பாலும் சங்கும் அப்பவே  கிடைச்சுடும். அவளின் பைத்தியக்கார எண்ணம்

மலர் 9 Read More »

மலர் 8

மலர்-8 ‘அவன்தான் போனுல. கடவுளே காப்பாத்துன்னு கூட நான் வேண்டிக்க முடியாது’ நொந்து கொண்டான் அருண். வாய்க்குள் சிரித்தவள் “முதல்ல கால அட்டண்ட் பண்ணுங்க. இல்லனா அதுக்கும் சேர்த்து நீங்கதான் திட்டு வாங்கணும்.’ அருண் ஹலோ என்று ஆரம்பிப்பதற்குள்ளே அவன் ஆரம்பித்துவிட்டான். “ஏண்டா! நான் என்ன உங்க கிட்ட பிச்சையா எடுக்கறேன். ஒழுங்கா ஒரு ஆள் அனுப்ப முடியாது?” “என்னடா அதான் ஆள் வரங்களேடா ?” அருண் சமாளித்தான். “என்ன தெரியாத மாதிரி நடிக்கிறியா ?” பாய்ந்தான்

மலர் 8 Read More »

மலர் 7

மலர்-7 அவர்களின் காரிலேயே இவளது பயணமும் ஆரம்பித்தது. இரவு கட்டாயம் தங்கக் கூடாது என்ற கண்டிஷனோடு அனுப்பினார் தந்தை .  பெரிய கேட்டுகளை தாண்டி, பெரிய தோட்டம் தாண்டி அந்த பவுண்டைன்  எதிரில் அந்த அரண்மனையின் வாயில் அருகிலேயே வண்டியை நிறுத்தினான். அவங்க ரொம்ப பெரிய இடம் என்று அருண் சொன்னதின் அர்த்தம் புரிந்தது. வீல் சேரை அவள் பிரிக்க, பாட்டியை கையில் அலேக்காக தூக்கினான் பேரன். புதிதாக பிறந்த குழந்தையை தூளியில் போடுவதை போல பாந்தமாக

மலர் 7 Read More »

மலர் 6

மலர்-6 ஆனந்தை தனிமையில் அழைத்து பேசியவன் , “ஆப்ரேசன் பொறுத்த வரைக்கும் நான் முடிச்சுட்டேன். இனிமே பேஷண்டை  நீங்க எப்படி கவனிச்சுக்கறீங்க, அவங்க எப்படி கோஆபரேட் பண்ணி நடக்கறாங்க இதெல்லாம்தான் அவங்கள பழைய மாதிரி நடக்க வைக்கும்” “ஓகேடா! அதெல்லாம் பார்த்துக்கலாம். ரொம்ப தாங்ஸ் டா ” அவனையும் அறியாமல் கண் கலங்கியது. “என்னடா இது? சின்ன குழந்தை மாதிரி!” ஆனந்தின் தோளில் தட்டி கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான் அருண்.   “இல்லடா அவங்க இல்லனா இன்னிக்கு

மலர் 6 Read More »

மலர் 5

மலர்-5 மறு  நாள் காலையில் இவள் வந்த போதே விழித்து விட்டார் பாட்டி . “என்ன பாட்டி அதுக்குள்ள எழுந்துட்டீங்க ?” “வீட்டுலையும் சீக்கிரமே எழுந்துடுவேன். காலைல எழுந்து பூஜை பண்ணுவேன்.”  “ஓ ! ஆனா இனிமே எழுந்து வாக்கிங் போனதுக்கு அப்புறம் தான் எல்லாமே. இனிமே கை வலி கால் வலின்னு யாரையும் ஏமாத்த முடியாது. மெதுவா நடக்க ஆரம்பிக்கனுன்னு அருண் சொல்லி இருக்கான்”, தாத்தாதான் குரல் கொடுத்தார்.  மெதுவாக பாட்டியை எழுப்பி பல் தேய்க்க

மலர் 5 Read More »

அத்தியாயம் 4

“பாலா… இங்க இருந்த பென்டிரைவ்ஸ் எங்க?” என்று மலர் தவிப்போடு கேட்க, “எந்தப் பென்டிரைவ்? எனக்கொண்ணும் தெரியாதே!” என்று அவனோ சற்றும் பதற்றமின்றித் தோள்களைக் குலுக்கினான். “பாலா… இது விளையாடுற நேரமில்ல. எடுத்த பென்டிரைவ்ஸை ஒழுங்கா என்கிட்டயே திருப்பிக் கொடுத்திரு” கோபத்தில் அவளது குரல் நடுங்கியது. “என்ன உளர்ற? என்கிட்ட எங்க இருக்கு? நீ எங்கயாச்சும் தொலைச்சுட்டு என்மேல பழிபோட பார்க்குறியா?” அவன் கர்வமாகப் புன்னகைக்க, “பாலா இங்க பாரு… என் டேபிள் டிராலதான் அந்தப் பென்டிரைவ்ஸ்

அத்தியாயம் 4 Read More »

காதல் கணம் -21

ஒரு‌‌ தகவல். நேற்று இரண்டு அத்தியாயங்கள் (19&20) பதிவிட்டிருந்தேன் ப்ரண்ட்ஸ். யாரேனும் தவற விட்டிருந்தால் வாசித்துவிடவும். காதல் கணம்-21 வீசி மறுநாள் ஷ்ரதாவை புத்தகக்கடைக்கு வரச்சொன்னவன், தான் தெரிந்துகொண்டதை சொல்லும்விதமாக தனக்குள்ளேயே தயாராகிக் கொண்டிருந்தான். ஆனால், அவள் தன்னருகில் நெருங்கியதும் அவளை சோதிக்கும் விதமாக, “ஷ்ரதா, நான் உங்கப்பா எங்க ரெண்டு பேர்ல யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்?” என்றான். அவள் தன் மனதிலிருப்பதை அவனுக்கு உணர்த்தும் விதமாக, அவனை உரசி நின்று, எக்கி அவன் கன்னத்திலொரு

காதல் கணம் -21 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் -23 “விக்ரம் அப்பாகிட்ட பர்மிஷன் வாங்க னும் அவ்வளவுதானே அது ஒண்ணும் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல . அதை நான் பார்த்துக்கிறேன் நீங்க மத்த வேலைகளை கவனிங்க” என்ற இனியாவைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர். இனியா அவர்களின் அதிர்ச்சியை பொருட்படுத்தாதவளாய் விக்ரமுக்கு அழைத்தவள் ,”அப்பா நான் இனியா பேசறேன் .நீங்க எப்போ திரும்ப ஊருக்கு வருவீங்க உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசனும் “என்றாள். அதைக் கண்டு மேலும் அதிர்ச்சியுற்றவர்கள் இனியாவை சூழ்ந்து

தாரகையின் மாயோன் Read More »

மலர் 4

மலர் 4 அவருக்கு எல்லாமே அவர் மனைவிதான். திருமணத்திற்கு பெண் பார்த்த காலத்தில் ஆரம்பித்த அவர்களின் காதல் இதோ இன்னமும் தொடர்கிறது. அவர்களை பார்த்து  அவர்கள் வளர்த்த பேரனே  கூட பொறாமை படத்தான் போகிறான்.  அறுவை சிகிச்சை நல்ல படியாகவே முடிந்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் மருத்துவமனையிலேயே இருந்தார். அதற்கு பிறகும் வேண்டுமென்றால் அவர் வீட்டோடு ஒரு நர்ஸ் வைத்துக் கொண்டு டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று அருண் கூறி இருந்தான்.  இந்த ஒரு வாரமும் அமிர்தா

மலர் 4 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!