October 2026

கெட்டவன் 7

அந்த நாள் முழுதும் நிஷா, விஷாகா இருவரிடமும் பேசவே இல்லை அனு. ஏன், அவர்களை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. “உண்மையான தோழிகளாக இருந்திருந்தால், என்னை தனியாக விட்டுச் சென்றிருப்பார்களா? இருவரின் நட்புக்காகத்தானே கெட்டவனிடம் சண்டை போட்டேன். ஆனால், இவர்களோ என்னை அவனிடம் தனியாகச் சிக்க வைத்து விட்டார்களே? என் தேவைக்காகவா பணம் வாங்கினார்கள்? இவர்களின் கடனை நான் சுமக்க வேண்டுமா? இது போதாதென்று ஆளை வைத்து மிரட்டுகிறார்கள்” என்று மனதுக்குள் நொந்து கொண்டிருந்தாள் அனு. “ஹேய் அனு, […]

கெட்டவன் 7 Read More »

அருகினிலே – 5

“இன்னுமாடி நீ அதையே நினச்சுட்டு இருக்க?” என்று கண்கள் பனிக்க நின்றவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் எழுந்து வெளியே சென்றாள். அவளுக்கு பிடித்தமான சலவை கல்லில் ஏறி அமர்ந்து கொண்டு தார் சாலையில் இயந்திர கதியாய் சுழலும் ஜன கூட்டத்தில் தன் பார்வையை பதித்தாள்.  பின்னாலிருந்து வருண், “இயல்.. இயல்..” என்று வருந்தி அழைத்ததெல்லாம் வீணாகிட, அவள் முன்னால் வந்து நின்று முகவாயை தனக்கு தோதாய் இழுத்து பிடித்தான். “அன்னிக்கி நான் ஏதோ கோபத்துல அப்டி பேசிட்டேன், அதுக்காக

அருகினிலே – 5 Read More »

Rolex 40

40 மறுநாள் அதிகாலைப் பொழுது. வழக்கமான இரைச்சலோடு விடிந்தாலும், ரோலக்ஸிற்கு அந்த விடியல் ஏதோ ஒருவிதமான பாரத்தை சுமந்து வந்திருந்தது. கடற்கரையோரத்து குளிர்ந்த காற்று ஜன்னல் திரைகளை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தது. ஜன்னல் வழியே நுழைந்த சூரிய ஒளி அவன் முகத்தில் பட, அவன் திடுக்கிட்டு எழுந்தான். அவனது கண்கள் இன்னும் அந்தத் தந்தி கருவியின் சிக்னல் ஒளியைத்தான் தேடிக்கொண்டிருந்தன. இரவு முழுவதும் உறக்கமில்லாமல் தவித்த அவனது கண்கள் சிவந்து, அடிவயிற்றில் ஒரு பயங்கரமான நடுக்கத்தை

Rolex 40 Read More »

Rolex 39

39 விசாகப்பட்டினம் அந்த கடலோர பகுதியில் அந்த நள்ளிரவு அமைதியாக இருந்தது. வானம் கருமேகங்களால் மூடப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற சூழல். ரோலக்ஸின் பைக் அந்த இருண்ட சாலையில் ஒரு இடி முழக்கத்தைப் போலச் சீறிச் சென்றது. அவன் முகத்தில் பதற்றம் நிழலாடியது, ஆனால் அதே சமயம் ஒரு உறுதி இருந்தது. அவனது ஒரே இலக்கு பைரவனை அடைவது. அலெக்ஸின் மௌனமான அந்தத் தவிப்பு, அந்த மைக்ரோ டிரான்ஸ்மிட்டர் அனுப்பும் சிக்னல், ஒரு தந்தையின்

Rolex 39 Read More »

Rolex 38

38 இருள் சூழ்ந்த அந்த அறையில், ஜன்னல் வழியாக ஊடுருவிய நிலவின் மெல்லிய வெளிச்சம், ரோலக்ஸின் முகத்தில் விழுந்து கொண்டிருந்தது. அந்த அறையின் அமைதி, ஏதோ ஒரு பெரும் புயலுக்கு முந்தைய அமைதியைப் போல இருந்தது. ரோலக்ஸ் தனது கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தான். அவனது விரல்களுக்கு இடையே அந்தச் சிறிய Micro-transmitter உருண்டு கொண்டிருந்தது. அதன் உலோகத் தகடு, அவனது கைரேகைகளுக்கு நடுவே குளிராகப் பதிந்தது. சில மணி நேரங்களுக்கு முன்பு துறைமுகத்தில் நடந்த காட்சிகள் அவன்

Rolex 38 Read More »

Rolex 37

37 பாபியும் அவனது ஆட்களும் இதுவரை பார்த்ததெல்லாம் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியும், கூர்மையான கத்தி, அரிவாள் போன்ற சாதாரண ஆயுதங்களை மட்டுமே. ஆனால், இன்று அந்த கப்பலின் அடித் தளத்திலிருந்து வெளிப்பட்ட அந்த நூற்றுக்கணக்கான பெட்டிகள், பாபியின் கண்களைக் குருடாக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருந்தன. பாபி ஒரு பெரிய இரும்புக்கம்பியை எடுத்து, அந்தப் பெட்டியின் மூடியைப் பெயர்த்தான். ‘க்ரீச்…’ என்ற சத்தத்துடன் பெட்டி திறந்தது. உள்ளே இருந்தது என்னவென்று பார்த்த பாபியின் கண்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயின.

Rolex 37 Read More »

Rolex 36

36   கப்பலில் இருந்து இறங்கி வந்த அந்த வெள்ளைக்காரன் ஏதும் பேசவில்லை. மாறாக, தனது விரல்களை லாவகமாக அசைத்து, சைகை மொழியில் பாபிக்கு ஏதோ சொன்னான். அவன் சைகையை கவனித்த ரோலக்ஸின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அவன் ஒரு ஊமை! ரோலக்ஸைப் போலவே அவனுக்கும் பேச்சு வராது, காது கேட்காது. ஆனால் அவனது சைகையில் இருந்த அழுத்தம், பாபியைப் புண்படுத்தியது. பாபிக்கு ஆத்திரம் தலைக்கேற, “வாய் பேச முடியாத நீயே எனக்கு சைகை

Rolex 36 Read More »

Rolex 35

35   அன்று காலை துறைமுகத்தின் கடலின் உப்புக்காற்று வீசிக் கொண்டிருக்க, இரும்பு சங்கிலிகளின் இரைச்சலும், கப்பல்களின் ஹாரன் சத்தமும் அந்த இடத்தை ஒரு இயந்திர கதியாக மாற்றியிருந்தது. ரோலக்ஸ் தனது வெளிர் சிவப்புச் சட்டையை அணிந்து, கையில் அந்த அடையாளப் பேட்ஜை மாட்டிக்கொண்டு, கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கும் கூலித் தொழிலாளியாகச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். அவனது அவன் கண்கள் ஒரு கழுகைப் போலச் செயல்பட்டன. அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒரு அசாத்தியமான வேகம் இருந்தது.

Rolex 35 Read More »

Rolex 34

34 நாட்கள் உருண்டோடின, ரோலக்ஸின் காயங்கள் மெல்ல மெல்ல ஆறுந்து, அவன் உடல் மீண்டும் பழைய வீரியத்தைப் பெற்றது. அவன் கண்கள் இப்போது வேட்டையைத் தொடரத் தயாராக இருந்தன. அவன் எடுத்த முடிவு தெளிவாக இருந்தது எதிரியின் குகைக்குள்ளேயே சென்று, அவனது நிழலாகவே மாறி, அவனை உள்ளிருந்தே சிதைப்பது. ஒரு காலை வேளையில், ரோலக்ஸ் நேராகச் சென்றது பாபியின் கோட்டை. அந்தப் பிரம்மாண்டமான பங்களாவின் வாசலில் அவன் காலடி வைத்தபோது, அங்கிருந்த பாதுகாவலர்கள் அவனை மரியாதையுடன் உள்ளே

Rolex 34 Read More »

Rolex 33

33 அன்று இரவு அந்தப் பழைய வீட்டின் உள்ளே நிலவொளி ஜன்னல் வழியாக ஊடுருவி, தரையில் ஒரு நீண்ட கோடாகப் பதிந்திருந்தது. பைரவனும் மயூராவும் தீவிரமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் குரல்கள் அந்த அறைக்குள் மெல்லிய ரீங்காரமாய் ஒலித்தன. ஆனால், ரோலக்ஸ் அந்தப் பேச்சில் கலக்கவில்லை. அவன் ஜன்னல் அருகில் சென்று நின்றான். அவனது காதுகளுக்கு எந்த ஒலியும் கேட்காது என்றாலும், அந்தச் சூழலின் அதிர்வுகளை அவன் தன் உடல் முழுவதும் உணர்ந்தான். பைரவனும்

Rolex 33 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!