November 2026

காதல் 67

ஆஷிக்கைக் கண்டதும் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்ட ஹாஜரா, “இந்த கேஸ் எல்லாம் எதுவும் வேண்டாம். அப்பா சொல்றத கேளு, அதுதான் எல்லாத்துக்கும் நல்லது. பார்த்தவரை போதும், என்னால இதுக்கு மேல எதையும் தாங்கிக்க முடியாது.” என்று அழுதுகொண்டே பிடிவாதமாய் கூற,  தன் நெற்றியை நீவியபடி, “அம்மா நீங்க ஏன்…” என்று சலிப்புடன் ஆரம்பித்தவனை அஸாத், “நீ உன் ரூம்க்கு போ.” என்று அனுப்பி வைக்க,  அஸாத், “ரூம்க்கு போ” என்று சொன்ன மறுநொடி ஏன், […]

காதல் 67 Read More »

காதல் 66

ஜீவாவைத் தொடர்ந்து வருணையும் சுஜித்தையும் விசாரிக்கத் தொடங்கினாள்.  “மார்ச் எட்டாம் தேதி நீங்க சினிமா தியேட்டர்ல இருந்தீங்க, சரி தானே? ஆமா, எந்த தியேட்டர்னு தெரிஞ்சிக்கலாமா?” “பாரடைஸ்” “என்ன மூவி?” “ஆஷிக்கி டூ” “நைஸ் பிக்சர். ஆனா மார்ச் எட்டு இன்டெர்நேஷனல் விமன்ஸ் டேல. அன்னைக்கு வேர்ல்டு லெவெல்ல உள்ள எல்லா தியட்டர்ஸ்லயும் அக்டர் மிஸ்ஸஸ் ஸ்ரீதேவியோட லாஸ்ட் பிலிம் ‘மாம்’தானே டெலிகாஸ்ட் பண்ணினாங்க?” புருவம் உயர்த்தினாள். வருண் சித்தமும் அடங்கி நிற்க, சுஜித் தன் கைகளைப்

காதல் 66 Read More »

காதல் 65

டெல்லி நீதிமன்றம் என்றும் போலவே இன்றும் பரபரப்பாக இருந்தது. கருப்பு அங்கிக்குள் தங்களைப் புகுத்துக்கொண்டு வெறும் கருப்பு காகிதத்துகாக, தங்களின் மனசாட்சியை கொன்று அதர்மத்தை நிலைநாட்ட துடிக்கும் வழக்கறிஞர்கள் பாதி, வெள்ளை மனம் படைத்து எந்தச் சூழ்நிலையிலும் நீதி தவறாத வழக்கறிஞர்கள் மீதி என்று நீதிமன்றம், பலதரப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் மக்களால் நிரம்பி இருந்தது.  அன்றுதான் ஜியா, சமீர் மீது தொடுத்த கற்பழிப்பு வழக்கின் முதல் ஹியரிங்.  ஜியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார்

காதல் 65 Read More »

காதல் 64

ஆஷிக் என்ன பண்ற? அவனை விடு…” என்று தடுத்த ஹாஜராவை ஒரு பார்வையிலே அடக்கியவன், கீழே விழுந்து கிடந்த சமீரை காலரை பற்றித் தூக்கி நிறுத்தி, “உனக்கு எவ்வளவு தைரியம்டா? பொறுக்கி ராஸ்கல்!” என்று மீண்டும் அடித்தான். ஜீவா பதிலுக்கு ஆஷிக்கைத் தாக்க, ரோஹித் கொடுத்த ஒரு அறையில் கீழே விழுந்தவன், ஆஷிக் அனைத்தையும் அறிந்து கொண்டான் என்று புரிந்தவனாய் கன்னத்தைப் பற்றியவாறு ஒதுங்க,  சுஜித், வருண் இருவரும் தள்ளியே நின்றனர். ரோஹித், ஆதர்ஷ் இருவரும் ஆஷிக்கோடு

காதல் 64 Read More »

காதல் 63

உடல் அலுப்பு காரணமாய் சற்று நேரம் அசந்திருந்த ஆஷிக், சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்த பொழுது, ஜியா மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.  கண்கள் மேலே சொருக கை, கால்கள் எல்லாம் உதறல் எடுக்க, “ஆஷிக் ஆஷிக்..” என்ற அவனது பெயரையே தடுமாற்றத்தோடு உளறினாள்.  பதறி போனவன் மருத்துவருக்குச் செய்தி தெரிவித்துவிட்டு ஜியாவின் கரங்களைப் பற்றிகொண்டவாறு, “ஒன்னுமில்லைடா..” என்று ஜியாவிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தான்.  மருத்துவர் மிகவும் சிரமப்பட்டு ஜியாவின் உடல் நிலையைக் கட்டுக்குள்

காதல் 63 Read More »

காதல் 62

இந்தப் பாவத்துல என்னால பங்கெடுத்துக்க முடியாது சமீர்.” என்ற சுஜித்தைப் பார்த்து முறைத்த சமீர், தன் விழிகளை மூடி மூச்சை இழுத்து விட்டவாறு மிகவும் சிரமப்பட்டு, தன் கோபத்தை அடக்கி கொண்டு அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்து, “பங்கெடுத்துக்க முடியாதா? பங்கெடுத்து தான் ஆகணும். பழசு இன்னும் ஞாபகத்துல இருக்கா? இல்லை, முதல்ல இருந்து சொல்லணுமா? நான் பண்ணின எந்தத் தப்புக்கும் சாட்சி இல்லை, ஆனா நீ பண்ணினத்துக்குப் பக்கா ப்ரூப் என்கிட்ட இருக்கு.  சொடக்கு போடுற

காதல் 62 Read More »

காதல் 61

டெல்லி ஏர்போர்ட்டில் ரோஹித், ஆஷிக்கிடம், “இன்னைக்கே இப்படி அவசர அவசரமா ஊருக்கு வரணும்னு என்ன கட்டாயம்? இன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டி அட்டென்ட் பண்ணிட்டு, லேட்டா கிளம்பிருக்கலாம். இப்போ பாரு, நாளையில இருந்து பேக் டு ஒர்க். நல்ல பார்ட்டிய மிஸ் பண்ணிட்டோம்டா.” “நீங்க ரெண்டு பேரும் பார்ட்டிய அட்டென்ட் பண்ணுங்க, நான் மட்டும் கிளம்புறேன்னு தானே சொன்னேன்?” “நீ ஊருக்கு வந்ததுல இருந்து ஜியா ஜியான்னு சொன்ன. இந்த ஆதர்ஷ், நடாஷா நடாஷான்னு சொல்றான். நான் மட்டும்

காதல் 61 Read More »

காதல் 60

நாட்கள் வாரங்களாக நீள இருவருக்கும் இடையே உள்ள விரிசல் மட்டும் அப்படியே இருந்தது.  விழிகளும் மனதும் ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டதே தவிர, இவர்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஆஷிக்கிற்குத் தான் கொஞ்சமும் தகுதி இல்லை என்கின்ற எண்ணத்தில் ஜியா அவனை விட்டு முடிந்தளவு விலகிருக்கவே விரும்பினாள்.  அவனாக நெருங்க முயற்சி செய்யும் பொழுதும் அவள் இப்படி விலகியிருப்பது அவனது கோபத்தை மேலும் கூட்டியது. ‘நீ உண்மையாவே என்னைக் காதலிக்கிறியான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு ஜியா.

காதல் 60 Read More »

காதல் 59

அடுத்தநாள் சாயங்கால வேளையில் ஃபாரென்சிக் லேபில் இருந்து கைரேகை டெஸ்ட் ரிபோர்ட்டும் வந்துவிட, இனி குற்றவாளி தப்பவே முடியாது என்கின்ற நிலையில், மாளவிகாவிற்கு எதிராக நடந்த குற்றத்துக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த ஜியாவிற்கு, சமீரை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.  இதைச் சமீரால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் என்று மிகவும் வருந்தினாள். மேலிடத்துக்குப் போகும் முன்பு ஒரு நல்ல தோழியாகச் சமீரிடம் இதைப் பற்றிக் கூற வேண்டும் என்று முடிவெடுத்தவள், சமீரிடம்

காதல் 59 Read More »

காதல் 58

படுக்கையெல்லாம் குருதியால் நனைந்திருக்க, வலியில் கண்கள் மேலே சொருகியவாறு முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட, அந்த அறையே அலறும் அளவிற்கு மாளவிகா, “ஜியா மேடம்… ஆ… ஆ…” என்று வலியில் கதறி அழுது கொண்டிருந்தாள்.  குருதி நிற்காமல் ஓட, ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் வழியிலே, ஜியாவின் கைகளை இறுக்கி பற்றிக்கொண்ட மாளவிகா, “நீங்க எங்களைக் காப்பாத்திருவீங்கன்னு எனக்குத் தெரியும்.” என்று கூறிய ஒரு சில நிமிடத்தில் பயங்கர அலறலுடன், உடல் பாதிச் சிதைந்திருக்க இறந்த நிலையில் தன்

காதல் 58 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!